Manifesto

2019 மக்களவைத் தேர்தலுக்கான

திராவிட முன்னேற்றக்கழகத்தின் தேர்தல் அறிக்கை (Highlights)

 

  • தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் தமிழிலேயே செயல்பட இணை ஆட்சி மொழியாக (Co-official language) தமிழ் மொழி அங்கீகரிக்கப்படும்.

 

  • மத்திய மற்றும் மாநில அரசு அலுவலர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்.

 

  • தொழிலாளர் ஓய்வூதியம் (Employees Pension Scheme, 1995) குறைந்தபட்சம் ரூ. 8000 ஆக நிர்ணயிக்கப்படும்.

 

  • தனி நபர் வருமானம் ஆண்டுக்கு ரூ.86,689-லிருந்து ரூ. 1,50,000 ஆக உயர்ந்திட நடவடிக்கை எடுக்கப்படும்.

 

  • பெட்ரோலியப் பொருட்களின் விலைகளைக் கட்டுக்குள் வைத்திட நிர்வகிக்கப்பட்ட விலை முறை (Administered Pricing Mechanism) மீண்டும் கொண்டுவரப்படும்.

 

  • வாடிக்கையாளர்கள் வங்கிகளில் குறைந்தபட்சத் தொகை வைக்காத காரணத்திற்காக வசூலிக்கப்பட்ட தண்டனைக் கட்டணத் தொகைகள் முழுவதுமாக வட்டியுடன் திரும்ப அளிக்கப்படும்.

 

 

  • தற்போதுள்ள வருமான வரிக்கான வரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தப்படும். மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், பெண்களுக்கு இந்த வரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும். ஓய்வூதியதாரர்கள் பெற்றிடும் ஓய்வூதியம் முற்றிலுமாக வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்படும்.

 

  • ஜி.எஸ்.டி வரி விகிதம் உரிய வகையில் மாற்றி அமைக்கப்படும்.

 

  • சிறு, குறு விவசாயிகளின் அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்.

 

  • மருத்துவக் கல்லூரிகளில் பட்டம், பட்ட மேற்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படும்.

 

  • மாணவர்கள் பெற்றுள்ள கல்விக் கடன்கள் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும்.

 

  • தேசிய நெடுஞ்சாலைகளைப் பராமரிக்க 10ஆம் வகுப்புவரை படித்துள்ள 1 கோடி இளைஞர்கள் சாலைப் பணியாளர் வேலை.

 

  • 10 ஆம் வகுப்பு வரையில் படித்த 50 லட்சம் கிராமப்புற பெண்கள் மக்கள் நலப் பணியாளர் வேலை.

 

  • கிராமப்பகுதியில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பத்திற்கு ஒரு பெண்ணுக்கு சிறு தொழில் தொடங்க ரூ.50,000 வட்டியில்லாக் கடனாக வழங்கப்படும்.

 

  • நெடுஞ்சாலைகளில் தனியாரின் சுங்க வரி வசூல் உரிமம் முடிந்த பின்னரும், வசூலிக்கப்படும் சுங்கக் கட்டண வசூல் ரத்து செய்யப்படும்.

 

  • பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வரும் மாணவர்கள் அனைவருக்கும் இலவச ரயில் பயணச் சலுகை வழங்கப்படும்.

 

  • சென்னைக்கு அடுத்து மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம் ஆகிய மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

 

  • இயற்கைச் சீற்றத்திலிருந்து கடலோர சமுதாய மக்களைப் பாதுகாத்திட புதிய சட்டம்.

 

  • கார்ப்பரேட் நிறுவனங்கள் அனைத்தும் சமுதாயப் பொறுப்பு திட்டத்தின்கீழ் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் வேலை வழங்கும் திட்டத்தில் 50 லட்சம் பேருக்கு வேலை.

 

  • வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கிட மத்திய, மாநில அரசு, நிறுவனங்களில் நிரப்பப்படாத பணியிடங்கள் நிரப்பப்படும்.

 

  • சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படும்.

 

  • இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களின் மாண்புகளைப் பாதுகாக்கவும், மதங்களுக்கிடையே நல்லுறவை வளர்த்திடவும், தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

 

  • 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வலியுறுத்தப்படும்.

 

  • அண்மையில் உயர்த்தப்பட்ட கேபிள் டி.வி. கட்டணம் முந்தைய அளவுக்கு குறைக்கப்படும்.

 

  • பாலியல் துன்புறுத்தல், குழந்தைகளை பிச்சையெடுக்க வைத்தல், மனித உறுப்புக்கள் விற்பனை போன்ற பல்வேறு காரணங்களுக்காக செய்யப்படும் மனிதக் கடத்தலைத் (Human Trafficking) தடுக்க சட்டம் கொண்டுவரப்படும்.