கும்பகோணம் நகரத்தில் உள்ள சிறப்பு அம்சங்கள் / முக்கிய நிகழ்வுகள் 1. கும்பகோணத்தை கோவில்கள் நகரம் என்று அழைப்பது வழக்கத்தில் உள்ளது, மேலும் கும்பகோணத்தில் விளையும் வெற்றிலையானது மற்ற ஊர்களில் விளைவிக்கப்படும் வெற்றிலையை விட சிறப்பு மிக்கதாக போற்றப்படுகிறது. 2. 1989ஆம் ஆண்டு கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருக்கும் போது, கும்பகோணத்தில் பொதுமக்களின் வசதிக்காக புதியதாக பேருந்து நிலையம் கட்டித் திறக்கப்பட்டது. 3. 1996-2001 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில்தான் கும்பகோணத்தில் உழவர் சந்தை, மீன் மார்க்கெட் கொண்டு வரப்பட்டது. பம்பப்படையூர் அருகில் உள்ள முலையூர் என்ற கிராமத்தில் சமத்துவபுரம் கட்டித் திறந்து வைக்கப்பட்டது. 4. இந்த ஆண்டு நீலத்தநல்லூர்-மதனத்தூர் இடையே செல்லும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்காக பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தமிழக துணை முதல்வர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் திறக்கப்பட உள்ளது. 5. கழக ஆட்சியில்தான் கும்பகோணம் அருகில் உள்ள சாக்கோட்டையில், கும்பகோணம்-மன்னார்குடி செல்லும் சாலையில், அரசலாற்றுப் பாலம் கட்டி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. 6. இந்த வருடத்தில் கும்பகோணம் ஆண்கள் கல்லூரிக்கு மாணவர்கள் காவிரி ஆற்றின் பாலத்தை கடந்து செல்ல, காவிரி ஆற்றின் குறுக்கே 64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபாலம் கட்டி, கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. 7. கழக ஆட்சியில்தான், கும்பகோணத்தில் உள்ள புகழ்பெற்ற காரங்கபாணி கோவிலின் தேர் ஓடுவதற்காக, சுமார் 1.5 கோடி ரூபாயில், முக்கிய வீதிகளில் சாரங்கபாணி கோவில் தேர் ஓடவதற்காக, தடம் அமைக்கப்பட்டு 2 ஆண்டுகளாக தேர் நல்ல நிலையில் ஓடுகிறது. 8. கழக ஆட்சியில்தான் கும்பகோணம் அரசு மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. 9. கடந்த 2004ஆம் வருடம், ஜெயலலிதா ஆட்சியில் கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் இறந்த 94 குழந்தைகளின் நினைவாக, கழக ஆட்சியில் கும்பகோணத்தில், நினைவிடம் மற்றும் நினைவுப் பூங்கா அமைக்கப்பட்டு, இவ்வாண்டு மாண்புமிகு துணை முதல்வர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 10. கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து நகர செயலாளராக இருந்து, கட்சியின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றிய காலம் சென்ற நகர செயலாளர் துரை அவர்களுக்காக நினைவு மண்டபம் கட்டி, மாண்புமிகு துணை முதல்வர் அவர்களால் இந்த ஆண்டு திறக்கப்பட்டது. 11. தற்போதைய நகராட்சி தலைவர் சு.ப.தமிழழகன் அவர்களது தகப்பனார் சு.பத்மநாபன் போன்றவர்கள் எல்லாம் இப்பகுதியில் கழக பணியை சிறப்பாக ஆற்றியவர்கள். 12. கடந்த 1970, 72ஆம் ஆண்டுகளில் கழகத்திற்காக அரும்பணியாற்றியவரும், அண்ணா, பெரியார், கலைஞர் ஆகியோரிடத்தில் நெருங்கி பழகி, நன்மதிப்பு பெற்றிருந்தவரான மறைந்த கே.கே.நீலமேகம் அவர்களின் நினைவாக கழக ஆட்சியில்தான் கும்பகோணத்தில் கே.கே.நீலமேகம் பெயரில் மேம்பாலம் கட்டப்பட்டது. 13. கோவில் நகரமான கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரன் கோவில் மற்றும் உப்பிலியப்பன் கோவில் உட்பட அனைத்து கோவில்களுக்கும் கழக ஆட்சியில்தான் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. 14. கழக ஆட்சியில்தான் கும்பகோணத்தில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரப்பட்டு, கும்பகோணம் நகரத்தில் உள்ள சாலைகள் மேம்படுத்தப்பட்டதால், மழை காலங்களில் தண்ணீர் சாலைகளில் தேங்காமல் இருக்கிறது. 15. 1992ஆம் வருடம் மகாமகத் திருவிழாவின் போது கும்பகோணம் மகாமகக்குளத்தில், நீராடுவதற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோர் வந்து நீராடியதால் ஏற்பட்ட ஜன நெருக்கடியில் அப்பாவி பொதுமக்கள் 48 பேர்கள் மரணமடைந்த கோர சம்பவம் நிகழ்வுற்றது. 16. திமுக கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினராகவும், கூட்டுறவுத் துறை அமைச்சராகவும் உள்ள திரு.கோ.சி.மணி அவர்கள் கழக வளர்ச்சிக்காகவும், பொதுமக்களுக்காகவும் அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்றால் அது மிகையாகாது. முதலமைச்சரானது மட்டுமல்ல! - தமிழக வரலாற்றிலேயே, ஐந்து முறை முதலமைச்சர் ஆனது கலைஞர் ஒருவர் தான்! அவர் ஆறாவது முறையும் முதலமைச்சராவது உங்கள் கையில் தான் இருக்கிறது. ஏன் இதை உங்களிடம் சொல்கிறேன் என்றால், குடந்தைக்குத் தனிச்சிறப்புண்டு! இன்று தஞ்சை - திருவாரூர் - நாகை என அழைக்கப்படும் மூன்று மாவட்டங்களும் ஒரு காலத்தில் ஒரே மாவட்டமா இருந்திருக்கிறது. மாவட்டத்தின் தலைநகர தஞ்சாவூர் என்றாலும், குடந்தைக்குத் தனிச்சிறப்புகள் பல உண்டு. அரசுக் கலைக் கல்லூரி முதன் முதல் குடந்தையில் தான் அமைந்ததாகச் சொல்லுகிறார்கள். கணித மேதை ராமானுஜர் போன்றோர் கற்றதாகவும் சொல்லுகிறார்கள். தி.மு.கழகம் பிறந்தது முதல் தஞ்சை மாவட்டத் தி.மு.க செயலாளர் யார்? குடந்தையைச் சார்ந்த நினைவுக்குறிய, வணக்கத்திற்குரிய பெரியவர் K.K.நீலமேகம் அவர்கள் என எனது தந்தையார் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். மற்றொரு நிகழ்ச்சி பற்றிக் கேள்விப்பட்டு மகிழ்ச்சியடைந்தேன். பெரியவர் K.K.N. பாராட்டு விழாவிற்கு அறிஞர் அண்ணா வந்தாராம், நிகழ்ச்சி முடிந்தபின் தஞ்சைத் தொகுதியைச் சார்ந்த கழகத் தோழர்களை மாவட்டக் கழகக் கட்டிட மாடிக்கு அழைத்தாராம், வருகின்ற தேர்தலில், தஞ்சைத் தொகுதியில் யாரை நிறுத்தலாம்? - என அண்ணா கேட்க, கலைஞரை நிறுத்தலாம்; கலைஞரை நிறுத்தலாம் - எனப் பலரும் சொன்னார்களாம். ‘சேவியர்’ - என்ற நண்பர் மட்டும் எழுந்து, “சென்ற முறை அண்ணன் பெத்தண்ணன் நின்று, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார்; அதனால் இந்த முறையும் அவரையே நிறுத்தலாம், எனச் சொல்ல, அண்ணா பெருந்தன்மையோடு, பெத்தண்ணனைப் பார்த்து, பெத்தண்ணன்! நீங்கள் நில்லுங்கள்? என்றாராம். பெத்தண்ணன், இல்லை அண்ணா! நான் நிற்கவில்லை, கலைஞரே நிற்கட்டும்! என்றாராம். அப்பொழுதும் அண்ணா, மற்றவர்களைப் பார்த்து, வேறு யாரேனும் நிற்க விரும்புகிறீர்களா? - எனக் கேட்டாராம், ஒருவரும் நிற்க விரும்பவில்லை என்று சொன்ன பின்னர் தான் கலைஞரைத் தஞ்சையில் நிறுத்துவதெனக் கழகம் முடிவெடுக்கிறது” இந்த சம்பவம் நடந்தது எங்கே? குடந்தையில்; குடந்தைக்கு அந்தப் பெருமை உண்டு. அந்தக் குடந்தையில் பேசுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். நிகழ்ச்சி - நடைபெறுவது இளைஞர் அணியின் சார்பில் நடைபெறுகிறது; நமது இயக்கத்தைப் பொறுத்தவரையில் இளைஞர்களுக்குப் பஞ்சமில்லை; நகர்மன்றத் தலைவரே இளைஞர் அணியைச் சார்ந்தவர் எனக் கருதுகிறேன். “தன்னுணர்வு பெற்றாலன்றித் தமிழன் அடிமை மயக்கம் நீங்கித் தன்னுரிமையுடன் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு வழியுமுண்டோ?” “ஒரு புயற்பொழுதில் கலைஞரும் நீயும் இரு கரங்களாகக் காத்திராவிட்டால் திராவிட தீபம் அணைந்து போயிருக்கும்!” எனும் கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதை, முதல் மாநாட்டுப் பேச்சு என்றால் அது “தமிழா கேள்” என்ற தலைப்பில் பிப்ரவரி 19, 20 தேதிகளில் 1944 ஆம் ஆண்டு குடந்தையில் நடைபெற்ற திராவிட மாணவர் மாநாட்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவரான அன்பழகன் ஆற்றிய உரை. ஒருபுறம் மொழிப்பற்று, இனப்பற்று, எழுத்துப்பணி, இயக்கப்பணி, மக்கள்பணி ஆகியவை அன்பழகனின் தனித்த அடையாளமாக இருந்தாலும், மறுபுறம் கருணாநிதியின் நம்பிக்கைக்குரிய தோழன் என்பதே அவரின் பெருமைமிகு அடையாளமாக கடைசிவரை இருந்தது. “திராவிட இயக்க ஆரம்ப காலத்தில் எங்களைப் போன்ற மாணவர்களை எல்லாம் வழிநடத்திய பேராசியர் அன்பழகன்” என ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார் கருணாநிதி. “நாங்கள் உங்களுக்காகப் பேசுகிறோம்… பேராசிரியர் எங்களுக்காகப் பேசுகிறார்… அதன் அர்த்தம் என்னவென்றால்… நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் எங்கள் உரையில் இருக்கும். நாங்கள் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் பேராசிரியரின் உரையில் இருக்கும்” என பல மேடைகளில் பேசியிருக்கிறார் கலைஞர். 1948 - திருவையாறு கருப்பு கொடி போராட்டம் 1951 - ராஜாஜி அவர்களுக்கு கருப்பு கொடி போராட்டம் 1959 - போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் 1962 - விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டம் 1968 - சட்ட எரிப்பு போராட்டம் கலைஞர் போராட்டம் தழும்பிய மாவட்டம் ராஜராஜ சோழனுக்கு சிலை அமைத்தவர் கலைஞர் தஞ்சை பெரிய கோவிலில் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னெடுத்தவர் கலைஞர் 1968 - மகாமகம் நடத்தியது திமுக (அப்பொழுதைய முதலமைச்சர் அண்ணா - பொதுபணித்துறை அமைச்சர் கலைஞர், கலைஞர் தான் முன்னின்று நடத்தினார்) 1992 - மகாமகம் எப்படி நடந்தது என்று மக்களுக்கு தெரியும் சிறுவன் ராமையாவுக்கு. சின்னஞ்சிறிய வயதிலேயே, சுயமரியாதைக் கொள்கைகள் தாங்கிய அந்தச் சிறுவன் வளர்ந்தபிறகு துடிப்புமிக்க சுயமரியாதைக் கொள்கை பிரசாரகராக மாறினான். தன் பெயரையும் தனித் தமிழில் அன்பழகன் என மாற்றிக்கொண்டான். வசீகர மொழியாலும் துல்லியமான தரவுகளாலும், தன் பேச்சை கேட்போர் அனைவரையும் கட்டிப் போட்டான். எல்லோரும் அண்ணாவின் பேச்சுக்காக காத்திருக்க, அண்ணாவையே தன் பேச்சால் கலங்கடித்தான் அந்த இளைஞன். 1942-ம் ஆண்டு திருவாரூர், விஜயபுரத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் இணைந்து நடத்திய சிக்கந்தர் விழாவில் அன்பழகனுக்கும் கருணாநிதிக்கும் அறிமுகம் கிட்டுகிறது. தன் ஊரில் நடக்கும் கூட்டங்களுக்கு அன்பழகனை, கருணாநிதி பேச அழைக்க இருவரும் நெருங்கிய நண்பர்களாயினர். அந்த நட்பு கருணாநிதி மறையும் வரையிலும் கிட்டத்தட்ட 74 ஆண்டுகள் நீடித்தது. காங்கிரஸ்காரர்களின் கம்யூனிஸ்ட்களின் ஆதிக்கமே மேலோங்கியிருக்க அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், தான் படிக்கும் காலத்தில் தன் நண்பர்களுடன் இணைந்து சுயமரியாதை இயக்கக் கொள்கைகளைப் பரப்பினார் அன்பழகன். அறிஞர் அண்ணாவையும் தன் பல்கலைக்கழகத்தில் பேச வைத்து மாணவர்களின் மனங்களில் திராவிட இயக்கக் கொள்கைகளை விதைத்தார் அன்பழகன். தளபதி பேச்சு பொதுவுடைமைக் கொள்கையை நிலைநாட்டிய கார்ல் மார்க்ஸுக்கு உற்ற துணையாக விளங்கிய ஏங்கல்ஸ் போல, சமூக நீதிக் கொள்கையை நிலைநாட்டி தலைவர் கருணாநிதிக்கு உற்ற பெருந்துணையக எப்போதும் உடன் இருந்தவர் பேராசிரியர். இப்போதும் அந்தக் கொள்கையை உறுதிபடக் காத்திடவும், தி.மு.க.-வின் வளர்ச்சியை மென்மேலும் மேம்படுத்தவும் உங்களின் ஒருவனான எனக்கு எப்போதும் தந்தையைப் போல் துணை நிற்கிறார். 1938க்கும் 2018க்கும் இடைப்பட்ட காலத்தில் 9 முறை சட்டமன்ற உறுப்பினர், இரண்டு முறை சட்டமேலவை உறுப்பினர், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினர். நான்கு முறை அமைச்சர். 43 ஆண்டுகளாக ஒரு இயக்கத்தின் பொதுச்செயலாளர்… என்று அதிகாரம் மிக்க பதவிகள் அனைத்தையும் அலங்கரித்த பிறகும் அன்று தூக்கிய ஆரிய எதிர்ப்பையும் திராவிட துதிப்பையும் விடாமல் தொடர்ந்ததில் தான் பேராசிரியரின் பெருமை அடங்கி இருக்கிறது. சட்டமன்றத்தில், சட்டமன்ற மேலவையில், நாடாளுமன்றத்தில், அரசியல் மேடைகளில் க.அன்பழகனின் நாவன்மையை நாடறியும். திராவிட இயக்கத்தின் மற்ற தலைவர்களுக்குச் சூட்டப்பட்ட சிறப்புப் பெயர்களைப் போல் அல்லாமல் ‘பேராசிரியர்’ என்று தாம் பெற்ற கல்வித் தகுதியாலும் பணியனுபவத்தாலும் அழைக்கப்பட்டவர் அவர். வள்ளுவத்துக்கு அவர் வழங்கிய புதிய விளக்கங்கள் கொண்டாடப்பட்டதாகத் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் தமிழ்ப் பேராசிரியர் மெ.சுந்தரம். அவர் ஆசிரியராகப் பொறுப்பேற்றும் கே.ஜி.இராதாமணாளனை துணையாசிரியராகக் கொண்டும் நடத்திய ‘புதுவாழ்வு’ இதழ் தமிழின் மீதும் தமிழ் இலக்கியங்களின் மீதும் அவருக்கிருந்த தனிப்பற்றை எடுத்துக்காட்டுவது. அதனால்தான். தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக்கொள்ளச் சொன்னால், மனிதன் அன்பழகன் சுயமரியாதைக்காரன் அண்ணாவின் தம்பி கலைஞரின் தோழன்… இப்படித்தான் அறிமுகப்படுத்திக் கொள்வேன் எனக் கூறி, தன் வாழ்நாள் முழுவதும் அதன்படி வாழ்ந்தும் காட்டினார் அன்பழகன். வெற்றிலை போடும் வழக்கம் கொண்டிருந்தவர் அன்பழகன். குறளின் அறம், பொருள், இன்பம் மூன்றையும் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்புக்கு உவமை கூறுவது அவரது வழக்கம். வீடுபேறு புகையிலையைப் போல, அதைத் தவிர்த்துவிடலாம் என்பது அவரது கொள்கை விளக்கம். திருக்குறளைப் படித்து அதனால் மனம் கவரப்பட்டு வள்ளுவரை வியந்து போற்றிய ஆல்பர்ட் சுவைட்சரை அடிக்கடி மேற்கோள் காட்டுவது அவரது விருப்பங்களில் ஒன்றாக இருந்துள்ளது. கலைஞரின் அரசில் மக்கள் நல்வாழ்வுத்துறையை திறன் பட நிர்வகித்தவர், கல்வி அமைச்சராக சிறப்பாக பணியாற்றியவர், நிதி அமைச்சராக, சட்டசபையில் அவை முன்னவராக என்று எந்த நிலையிலும் சிறப்பாக தொண்டாற்றியவர். சித்த மருத்துவத்துவம் மற்றும் பாரம்பரிய தமிழ் மருத்துவத்திற்கு பேராசிரியரின் பங்களிப்பு மிகவும் சிறப்பான ஒன்று. தமிழ்தாத்தா உவேசா அவர்கள் எப்படி தமிழ் ஒலைச்சுவடிகளை தேடி அலைந்து அச்சிட்டாரோ, அதே முறையில் சித்த மருத்தவ ஓலைச்சுவடிகளை தேடி கண்டுபிடிக்க ஒரு மருத்துவரை டாக்டர் துரைராஜ் என்பவரை நியமித்து அவற்றை தேடி கண்டுபிடித்து ஓலைச்சுவடிகளை படியெடுத்து அதை அச்சில் ஏற்றி சித்த மருத்துவ களஞ்சியம் உறுப்பெற காரணமாக திகழ்ந்தவர். சித்த மருத்துவ கல்லூரியை பாளயங்கோட்டையில் நிறுவியவர். மதுரையில் நடைபெற்ற இளைஞர் அணி துவக்க விழாவில், திமுகவின் கொள்கைகளை தாங்கி பிடித்து, அத்தீபத்தை அணையாமல் பாதுகாக்க வல்லவர் தளபதிதான் என்று அடையாளம் காட்டியவர் இனமானப் பேராசிரியர், அடையாளம் காட்டியது மட்டுமல்லாமல், பிற்காலத்தில் தளபதியை செயல் தலைவராக்கி அழகு பார்த்தவர் பேராசிரியர் அவர்கள். கருப்பு கொடி: மத்திய அரசுப் பொறுப்பில் இருந்து தமிழ் நாட்டிற்கு வரும், உயர் பதவிகளில் உள்ளவர்கள் அனைவருக்கும், கருப்பு கொடி காட்டுவது; என்று கழகம் முடிவெடுக்கிறது. கழக முடிவிற்கேற்ப 1951ஆம் வருடம், மத்திய அமைச்சர் ஹரிகிருஷ்ண மகதாப்பிற்கு சென்னையில் கருப்பு கொடி காட்டப்படுகிறது; ஆயிரக்கனக்கானோர் கைது செய்யப்படுகிறார்கள். தஞ்சையில் எந்த நிகழ்ச்சியும் நடைபெறவில்லை. கலைஞர் கவலைப் படுகிறார். மன்னையை அழைத்துக் கொண்டு, மாவட்ட செயலாளர் பெரியவர் கே.கே.நீலமேகத்தை குடந்தையில் பார்க்கிறார்; பொதுசெயலாளர் அண்ணாவின் அனுமதி பெற்று தான் பார்க்கிறார் என்றாலும், கருப்பு கொடி காட்டும் நிகழ்ச்சி சிறப்பாக அமையுமா? என்ற ஐயப்பாடு கே.கே.நீலமேகத்திற்கு, “பொறுப்பு முழுவதும் எங்களை சார்ந்தது” என புறப்படுகிறார் கலைஞர். ஏறத்தாழ 26 நாட்கள், சுற்றுப்பயணம், சூறாவளி சுற்றுப்பயணம், “அணைக்கரையில் இருந்து அறந்தாங்கி வரை”; “கல்லணையில் இருந்து காரைக்கால் வரை” அப்பொழுது காரைக்காலும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்திற்குட்பட்டுதான் இருந்தது. இப்படி பட்டி தொட்டி எங்கும் பறந்து செல்கிறார். அப்பொழுது ராஜாஜி செல்லும் வழியான தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரத்தில் கருப்பு கொடி காட்டுவதென முடிவெடுக்கப்படுகிறது; கலைஞர் திருவாரூரில் இருந்து தஞ்சைக்கு, மன்னை மற்றவர்களுடன் ரயில் மூலம் வருகிறார்; வண்டியை விட்டு கீழே இறங்கும் போதே போலீஸில் கைது செய்யலாம் என்று எண்ணிய கலைஞர் கூட்டத்தோடு கூட்டமாக, வேறு பக்கமாக வெளியேறி; சட்டையைக் கழற்றிவிட்டு, தலையில் ஒரு முண்டாசைக் கட்டிக் கொண்டு, ரயில் தண்டவாளத்தின் மீதே நடந்து, ஒரு மைல் தூரம் அப்பாற்சென்று மாட்டு வண்டி பிடித்துக் கொண்டு, அதில் ஏறி கரந்தையில் உள்ள நண்பர் வீட்டிற்கு சென்று விடுகிறார். ஆனால், போலீஸ் தஞ்சை ரயிலடியில் மன்னையையும், மற்றவர்களையும் கைது செய்கிறார்கள். கலைஞரை காணவில்லை; காவல்துறை திகைக்கிறது; காவல் நிலையத்திற்கு சென்று பின், கருணாநிதி எங்கே? கருணாநிதி எங்கே? எனக் காவல் துறை மன்னையை கேட்கிறது; பதில் இல்லை; மற்றவர்களையும் கேட்கிறது; பதில் இல்லை; பட்டைக் கேளுங்கள் என்கிறார்கள்; யார் என்ன சொன்னார்களோ தெரியவில்லை; போலீஸார் கரந்தைக்கு செல்கிறார்கள்; அங்கே ஏ.கே.வேலனை சந்திக்கிறார்கள்; ஏறு ஜீப்பில் என்கிறார்கள்; நகர் முழுவதும் சுற்றுகிறார்கள்; பட்டு வீடு; பதி வீடு; பெத்தண்ணன் வீடென பறக்கிறார்கள்; கலைஞர் கிடைக்கவில்லை. மறுநாள் காலை, ராஜாஜி திருவையாற்றிற்கு செல்லும் வழியான பள்ளியக்ரஹாரம் முழுவதும் கழக கண்மணிகளின் கூட்டம்; உரிய நேரத்தில் ஒற்றையடிப் பாதை வழியாக, கரந்தையில் இருந்து, கலைஞர் வந்து சேருகிறார். காவல் துறையினரால் ஒன்றும் செய்ய முடியவில்லை! காளையர் கூட்டம் கலை கட்டிவிட்டது. கலைஞர் தலைமையில் ராஜாஜிக்கு கருப்பு கொடி! விண்ணதிர முழக்கம். மொழிபோராட்டத்தின் போது தஞ்சாவூர் மாவட்ட திமுக சார்பாக, கலந்து கொண்ட முக்கியஸ்தர்கள்: 1. என்.எஸ்.இளங்கோ, ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் 2. திரு.எஸ்.திருநாவுக்கரசு பிள்ளை, ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட பொருளாளர் 3. திரு.நடராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (முன்னாள் தஞ்சை நகர செயலாளர்) 4. வழக்கறிஞர். மாணிக்கவாசகம் 5. வழக்கறிஞர். சாமிநாதன் (தமிழக முதல்வர் போன்றே தலைவாரும் பழக்கம் கொண்டவர்) 6. திரு. பட்டு 7. திரு. சேவியர் 8. திரு. ஏ.வி.பதி, முன்னாள் தஞ்சை நகர் மன்ற தலைவர் 9. திரு. துரை.வையாபுரி 10. திரு. கு.சுல்தான், முன்னாள் தஞ்சை நகர் மன்ற தலைவர் 11. திரு. பெத்தன்னன் நாடார் 12. திரு. டி.பி.கண்ணன் 13. திரு. டி.கே.கோவிந்தன் 14. திரு. மயூர் நாதன் இந்நிகழ்ச்சி முடிந்ததும் கலைஞர் தலைமையில் ஊர்வலம் புறப்பட்டு, தஞ்சை புகைவண்டி நிலைய சந்திப்பை வந்தடைகிறது. கழக கண்மணி டி.கே.சீனிவாசன் முதலியோரிடம் விடை பெற்று திருவாரூர் புறப்படுகிறார். ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவர் வீட்டில் சோதனை போட்டு, எந்த ஆவணங்களையும் எடுக்காமல் வெறுங்கையுடன் திரும்பினார்கள். "நீண்ட நாள்களாகப் புத்தக அலமாரியைத் தூசு தட்ட வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதைச் செய்து தந்தமைக்கு நன்றி" என்று கேலிப்புன்னகையுடன் அவர்களை வழியனுப்பி வைத்தார் பேராசிரியர். இரண்டு முறை மேயர், ஆறு முறை சட்டமன்ற உறுப்பினர், துணை முதல்வர், அமைச்சர் என்று வளர்ந்த பிறகு, 'மு.க.ஸ்டாலின் தான் தலைமைக்கான தகுதி உள்ளவர்' என்று சொல்வது பெரிதல்ல. இந்த எந்தப் பதவியும் வருவதற்கு முன்னரே, அவர் இளைஞரணிச் செயலாளராக இருக்கும் போதே, 'அன்பகத்தை’ ஒப்படைத்து விட்டு, "தமிழ்நாட்டைப் பற்றி எண்ணி எண்ணி, பல நேரங்களில் வேதனை அடைகின்ற எனக்கோ கலைஞருக்கோ அடுத்த தலைமுறைக்கு ஸ்டாலினைப் போல் நூற்றுக்கணக்கானவர்கள் உருவாகி வருவது மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது. கலைஞருடைய ஆற்றல் ஸ்டாலினுடைய செயலிலே அரும்பி நிற்பதை இன்றைய தினம் பார்க்கிறேன்'' என்று 30 ஆண்டுகளுக்கு முன்னால் சொன்னார் பேராசிரியர். தளபதி ஸ்டாலின் அவர்கள், முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஆனது 2018ல். ஆனால் 1988ல் அதைக் கண்டுபிடித்துச் சொன்னவர் பேராசிரியர். இந்த தீர்க்கதரிசனத்தில்தான் பேராசிரியரின் பெருமை அடங்கி இருக்கிறது. தாழ்ந்தவரை உயர்த்தும் இலட்சியங் கொண்ட நீதிக் கட்சியாக கருக் கொண்டு, தியாகராயரின் தியாகத்திலே அரும்பி, நாயரின் நாவன்மையிலே மலர்ந்து, டாக்டர் நடேசனாரின் நற்றொண்டிலே மணம் வீசி, பனகலின் பராமரிப்பிலே ஒளி பெற்று, மூதறிஞர் முத்தையாவின் வகுப்புரிமை திட்டத்தால் புகழ் பெற்றதுடன், பிறவி உயர்வு தாழ்வையே ஒழித்துவிடும் இலட்சியங் கொண்ட தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கமாக அரும்பி, கைவல்யத்தின் கட்டுரைகளிலே மலர்ந்து, அழகிரியின் முழக்கத்திலே காய்த்து, அண்ணாவின் ஆற்றலிலே கனிந்து, அண்ணாவின் தீரமானத்தால் ‘திராவிடர் கழகமாக‘ பெயர்பெற்று இன்று, தி.மு.கழகமாக இயங்கவருவதைக் காண்கிறோம். தி.மு.க. சாதனைகள்: காவிரி டெல்டா மாவட்டங்களுக்காக ஜூன் 15ஆம் தேதி மேட்டூர் அணை திறப்பு 65 கோடி மதிப்பீட்டில் தூர் வாரும் பணி மேற்கொள்ளப்படும் (மேற்பார்வையிட 12 மூத்த IAS அதிகாரி நியமனம்) மாவட்டத்தின் வளர்ச்சி பணிக்காக பொறுப்பு அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி நியமனம் (அவரிடம் இதுவரை வந்த மனுக்கள் 22,997, 95% மனுக்களுக்கு தீர்வு) 2021 டிசம்பர் 30 அன்று முதலமைச்சர் வருகை புரிந்து பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 43,329 பயணாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நெல் சாகுபடி செய்ய 18,53,735 ஏக்கர் இலக்கு செய்யப்பட்டது. சம்பா சாகுபடி இலக்கு - 18,53,735, 20,13,796 ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டது. (நிர்ணயத்ததை விட 2 இலட்சம் அதிகம்) டெல்டா குறுவை இலக்கு 3.5 இலட்சம் ஏக்கர் நிர்ணயம் 4.9 இலட்சம் ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டது (1.4 இலட்சம் அதிகம்) ATMA திட்டத்தின் கீழ் 24,497 உழவர்கள் பயனடைந்துள்ளனர். வேளாண் கருவி தொகுப்பு 15,000 உழவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வட கிழக்கு பருவ மழையில் பாதிப்பான குறுவை, சம்பா விவசாயிகளுக்கு 33 கோடி 86 இலட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. சட்டமன்ற அறிவிப்புகள் குறுநீர் பாசணக் குளங்கள் தரம் உயர்த்தப்படும் புதிய நவீன அரிசி ஆலைகள் உருவாக்கப்படும் புதுக்குடியில் நாள் ஒன்றுக்கு ஆயிரம் மெட்ரிக் டன் கால்நடை தீவனம் தொழிற்சாலை 25 கோடியில் அமைத்து தரப்படும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவுக்காக ஒரு கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்படும் தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனையில் சிறப்பு குழந்தைகளுக்காக உயர் திறன் சிகிச்சை பூங்கா அமைக்கப்படும் கும்பகோணம் பட்டீஸ்வரம் பிரம்ம நந்தீஸ்வரர் கோயிலில் 60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் தாமரைக்கோட்டை அருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் 2 கோடி 20 இலட்சம் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டித்தரப்படும் சக்காராப்பள்ளி அருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோயிலில் 1 கோடி 25 இலட்சம் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டித்தரப்படும். பூதலூரில் வாத்தாலை நாச்சியம்மன் கோயிலுக்கு 80 இலட்சம் மதிப்பீட்டில் மண்டபம் கட்டித்தரப்படும் கன்னத்தன்குடி ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் இரண்டு புதிய கட்டிடம் மற்றும் சுற்று சுவர் கட்டித்தரப்படும் ஒரத்தநாட்டில் விவசாய கூட்டுறவு சங்கத்தினர் உற்பத்தி செய்யும் பொருட்களை சேமித்து வைப்பதற்கு 500 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட சேமிப்பு கிடங்கு கட்டித் தரப்படும் மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளை சோழபுரத்தில் தொடங்கப்படும் கூட்டுறவு துறையின் மூலம் பட்டுக்கோட்டையில் இயங்கிவரும் அரசு தொழிற் பயிற்சி கல்லூரி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் கும்பகோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மின்னனு நூலகம் அமைக்கப்படும், ஆராய்ச்சி வகுப்பும் துவங்கப்படும் “நான் எதையும் விரும்பியதில்லை, ஆனால் எல்லாமே எனக்கு வாய்த்திருக்கிறது” என்று பற்றற்று வாழ்ந்த பேராசிரியப் பெருந்தகை. ‘ஏற்றுக் கொண்ட தத்துவத்துக்காக இறுதிவரை பேசு. அந்த தத்துவத்துக்காகப் போராடும் தலைமைக்கு உண்மையாக உன்னை ஒப்படை’ என்பதுதான் அது! “சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது” என்ற குறளுக்கு இலக்கணமாக திகழ்பவர் பேராசிரியர். அறிஞர் அண்ணா அவர்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலே கண்டெடுத்த இந்த முத்தினைத், தமிழ்த்தாயின் மணிமகுடத்திலே பதித்து மகிழச்சியடைந்தார். அறிவு, ஆற்றல், அனுபவத்தில் அண்ணாவுக்கு அடுத்து எனக்கு அண்ணனாக இருக்கிறார். ஆரிய ஆதிக்கம் ஒழியத் தமிழன் தன்னுணர்வு வளரத் தமிழ்க் கழனி திருத்தப்படல் வேண்டும். தோழர்களே, மாணவர்களே நாம் நமது கடமையை உணர்ந்து ஒல்லும் வகையெல்லாம் திராவிட இனம் வைதீக வருண மனப்பான்மையில் இருந்து விடுபட்டு, தன்னுணர்வுடன் இனமானம் போற்றும் தன்மானத் தமிழர்களாய் எழுச்சி கொண்டிடவும் வாகை சூடுவம் முயற்சிப்போமாக” என்று தன் உரையை நிறைவு செய்கிறார். கருணாநிதி, அன்பழகன் நட்பென்பது தனிப்பட்ட இரு மனிதர்களின் நட்பாக மட்டுமல்லாமல், திராவிட இயக்கக்கொள்கையைக் காத்திடும் நட்பாக, தி.மு.கழகத்தை காத்திடும் நட்பாக, தமிழக மக்களின் நலனை மேம்படுத்தும் நட்பாகவே கடைசி வரையிலும் இருந்தது.
No comment