இளைஞர் எழுச்சி நாள் கூட்டம் – பேரிஸ் கார்னர் – பிப்ரவரி 2014

இளைஞர் எழுச்சி நாள் - பேரிஸ் கார்னர்

ஐந்து முறை முதல்வராக இருந்தவரது மகன் என எந்தவித சுக போகத்தையும் அனுபவிக்காதவர் அவர். மாறாக சிறைக் கொடுமை, பொய் வழக்குகள், கடும் தேர்தல் களம், தொடர் சுற்றுப் பயண உழைப்பு - என மெய் வருத்த, கண் துஞ்சாது, போராட்ட வாழ்வினை இன்றுவரை சுவைக்கின்றவர். நீக்ரோக்களின் மகாகவி என்று அறியப்படுகின்ற லாங்ஸ்டன் ஹ்யூக்ஸ் (Langston Hughs) "நீக்ரோ கலைஞனும், நிறவெறிமலையும்" எனும் அறிக்கையில், "கருப்புத் தோலை உங்கள் உடம்பை மூடும் ஒரு அங்கியைப் போல் அணிந்து கொள்ளாதீர்கள். அதை ஒரு போர்க்கொடியைப் போல் உயர்த்திப் பிடியுங்கள்" என்றார். முத்தமிழ் அறிஞரது மகன் எனும் பெருமைமிகு பிறப்பினை ஒரு போர்க்கொடியைப் போல உயர்த்திப் பிடித்தவர் தளபதி - தனது சுயகட்டுப்பாட்டால், தளர்வற்ற உழைப்பால், எதிர்பார்ப்பற்ற அர்ப்பணிப்பினால்!
	சார்லி சாப்ளினைப் பற்றி சாடூல் (Sadoul) என்பவர் "சார்லி சாப்ளின் இந்த கிரகத்தில் இருந்த எல்லா மனிதர்களின் சகோதரனாகவும் இருந்தார்" என்கிறார். திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற மாபெரும் இயக்கத்தின் எல்லா எளிய தொண்டர்களுக்கும் ஒரே சமயத்தில் வழி நடத்துகின்ற தளபதியாகவும், பாசம் பொழிகின்ற சகோதரராகவும் இருக்கின்ற அற்புதமான மனிதரைத் தமிழ்நாட்டு இளைஞர்கள் தம் தலைவராக வரித்துக் கொண்டிருக்கின்ற மிக முக்கியமான காலகட்டமிது.
	திராவிட இயக்கத்தின் அரசியல் எதிரிகள் கூட முழுமனதாக ஏற்றுக் கொள்கின்ற ஒருவர் தளபதி மட்டுமே - தனக்கான மிக நியாயமான இடத்தைப் பெறுவதற்குக் கூட அவர் ஒருபோதும் அவசரம் காட்டியதில்லை. டாக்டர். அம்பேத்கரைப் பற்றி காந்தியார் சொன்னதை இங்கு நினைவு கூறலாம் - "நாம் அம்பேத்கருடன் உடன்படுகிறோமோ இல்லையோ, அவரை நாம் நிராகரிக்க முடியாது". திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் எதிரிகள்கூட, நம்மோடு உடன்படுகிறார்களோ இல்லையோ, நம் தளபதியை அங்கீகரித்து இருக்கிறார்கள். அதற்கான அச்சு - அதிகாரத்தை அவர் ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்ததில்லை என்பதில் துவங்கி, அதனை மக்கட் பணிக்கும், சமுக சேவைக்கும் பயன்படுத்துவதில் தொடர்ந்து, அதிகாரம் இல்லாத போதும் தொய்வில்லாத அரசியல், சமூகப் பணியாற்றுகின்ற அவரது முதிர்ச்சியில் நிலை பெறுகின்றது.

திருச்சபைகளின் வரவும் சமூக நீதியின்குரலும்:
	1856-இல் பம்பாய் நகரில் இருந்த அரசுப்பள்ளி ஒன்றில் தனக்கு இடம்மறுக்கப்பட்டதை அடுத்து, ஒரு மகார் இனத்து மாணவன், பம்பாய் கல்வித் துறைக்கு முறையீட்டு மனு ஒன்றை அனுப்பி, தான் படிக்க வசதி செய்துதர வேண்டுமென்று வேண்டினான். அவன் வேண்டுகோளுக்கு பம்பாய் கல்வித்துறை அளித்த பதிலாவது,
	ஒரு தனிப்பட்ட மாணவனுக்காக, அதாவது இதுவரை படிப்பதற்கு முன்வராதிருந்த ஒரு மகார் இனத்தவனுக்காக உயர் சாதிமாவர்கள் படிக்கும் பள்ளியில் இடம் தருவதோ, உயர்சாதி மாணவர்களோடு சமமாகப் பழகுமாறு வற்புறுத்துவதோ, பொரும்பான்மை மாணவர்கள் பயிலும் பள்ளியையே பயனற்றதாக ஆக்கிவிடும் செயலாக முடியும். எனவே அத்தகைய ஒரு ஆபத்தை - உருவாக்க விரும்பவில்லை	என்பதாகும். 1858 இல் பம்பாய் அரசு,
	எந்த ஒரு நபரையும் எந்த ஒரு பள்ளியிலும்
	சேர்க்கவோ விலக்கவோ அரசுக்கு முழு உரிமை
	உண்டு. அவர் எந்த சாதியினராக அல்லது
	மதத்தவராக இருந்தாலும் கட்டாயப்படுத்த
	முடியாது.
என உத்தரவிட்டது. (சமூகநீதி - பேராசிரியர்கள், முனைவர் க.நெடுஞ்செழியன் முனைவர் இரா.சக்குபாய் : 155)
	பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்களாகவே இருந்ததால், மாணவர்களிடையே அவர்கள் எவ்வாறு நடந்து கொண்டனர் என்பதை ஒரு நிகழ்ச்சியின் வாயிலாக எடுத்துக்காட்டுவார் தனஞ்செய்கீர். பள்ளிக்கு ஆய்வாளராகச் சென்ற அதிகாரி, வகுப்பறையில் குச்சிகளும் சில மண்கட்டிகளும் வைத்திருந்ததைப் பார்த்து 'இவற்றை இங்கே வைத்திருப்பதற்கான காரணம் யாது' எனக் கேட்க வகுப்பாசிரியரான, பார்ப்பனப் பண்டிதர்,
	சாதி இந்துக்களைக் கண்டிக்கும் போதுநான்
	இந்தக் குச்சியைப் பயன்படுத்துவேன். இதே
	குச்சியின் மூலம் தீட்டு 
	என்னைத் தாக்கிவிடுமே,
	அதனால் என் உடம்பு முழுதும் தீட்டாகி
	விடுமே. அதனால் தான், ஒரு மகார் மாணவன்
	சரியான விடைகளைச் சொல்லாத போது 
	அவன் மீது வீசி எறிவதற்காக இந்த மண்
	கட்டிகளை வைத்திருக்கின்றேன்.
	தலைவர் சொல்லுகின்றார், திருச்சியிலே ஒரு போராட்டத்திலே ஈடுபட்டு திருச்சிசிறையிலே அடைக்கப்பட்டிருந்தேன். நான் அந்தச் சிறையைவிட்டு வெளியேவரும் போது என்னை பேரறிஞர் அண்ணா அவர்கள் சிறைவாசலில் காத்திருந்து வரவேற்று அழைத்துச் செல்லுகின்றார்'. அன்றைய தினம், இரவு திருச்சியிலே தலைவர் கலைஞர் அவர்களுக்கு பாராட்டுக் கூட்டம், அடுத்தநாள் சென்னையிலே பேரறிஞருடைய தலைமையிலே நம்‘முடைய கலைஞர் அவர்களுக்கு பாராட்டுக் கூட்டம் நடைபெற இருக்கிறது. பேரறிஞர் சொல்லுகின்றார், 'நீ திருச்சி கூட்டத்தை முடித்துவிட்டு என்னோடு காஞ்சிபுரம் வந்து மதிய உணவு அருந்திவிட்டு பின்னர் இருவரும் சேர்ந்து சென்னைக்குச் செல்லலாம்' என்று. நம்முடைய தலைவரும், பேரறிஞர் சொன்னதை ஒப்புக்கொண்டு, காஞ்சிபுரம் சென்று பின்னர் சென்னைக்குச் செல்கின்றார். அந்த நிகழ்ச்சியை, தானே தன்னுடைய வார்த்தைகளில் எப்படி அவர் வர்ணிக்கிறார் பாருங்கள், அண்ணா வீட்டில் உணவு அருந்திவிட்டு, மாலையில் இருவரும் புறப்பட்டு சென்னை விழாவிற்கு வந்தோம். இப்போது அண்ணா அறிவாலயத்திற்குப் பக்கத்திலே இருந்த அன்பகத்திலிருந்து எங்களை வரவேற்று ஊர்வலம் புறப்பட்டுவிட்டது. பேரறிஞர் அண்ணாவும் நானும் ஒரு ரதத்திலே அமர்த்திவைக்கப்பட்டு ஊர்வலம் கடற்கரைக்குச் சென்றது. கடற்கரையிலே திருவிழா நடைபெற்றது. அண்ணா பாராட்டிப் பேசினார். இரவு பத்து மணிக்கு அண்ணாவும் நானும் இல்லத்திற்கு திரும்பினோம்''. அப்பொழுது நம்முடைய தலைவர் அவர்களுடைய அன்னை அஞ்சுகம் அம்மையார் அவர்கள் அண்ணாவை வரவேற்று உட்காரவைத்து ஒரு கேள்வியைக் கேட்கிறார். அண்ணா, அஞ்சுகத்தம்மையாரிடம் கேட்கின்றார், என்னம்மா சௌக்கியமா'' என்று. அண்ணாவைப் பார்த்து அம்மையார் கேட்கிறார், ஏற்கனவே நீங்கள் நேற்று வேலூர் சிறையிலிருந்து விடுதலையானீர்கள், விடுதலையானவுடன் காஞ்சிபுரம் வந்து அம்மாவைப் பார்த்தீர்கள் அல்லவா?” என்று. அண்ணா சொல்லுகின்றார், ஆமாம் அம்மா'' என்று. அஞ்சுகத்தம்மையார் மறுபடியும் அண்ணாவிடம் கேட்கின்றார், அம்மாவைப் பார்த்துவிட்டு மறுபடியும் வேலூருக்குச் சென்று கூட்டத்தில் பேசினீர்கள் இல்லையா? விடுதலையான உடனே நேரடியாக கூட்டத்திற்குச் செல்லவில்லை, அம்மாவைப் பார்த்துவிட்டுத் தானே கூட்டத்திற்குச் சென்றீர்கள்”என்று. பேரறிஞரும் ஆமாம்'' என்கின்றார். அதற்கு அந்த அருமை அம்மையார் பதில் சொல்கின்றார், உங்களை உங்கள் அம்மா ஒருநாள் கஷ்டப்பட்டு பெற்றிருக்கிறார்கள் போலும். நான் என்னுடைய பிள்ளையை (நம்முடைய ஒப்பற்ற தலைவரை), 26 நாள் கஷ்டப்பட்டுப் பெற்றேன். அதனால் தான் என் பிள்ளை திருச்சியிலே விடுதலை பெற்று, திருச்சி கூட்டத்திலே பேசிவிட்டு, காஞ்சிபுரம் வந்து, சென்னைக்கு வந்தும் வீட்டிற்கு வராமல் உங்களோடு கடற்கரை கூட்டத்திற்கு வந்து பேசிவிட்டு இப்பொழுது வந்திருக்கிறார்'' என்று. இந்த நிகழ்ச்சியை குறிப்பிட்டுவிட்டு எழுதுகின்றார் நம் தலைவர், "இதை ஏன் சொல்கின்றேன் என்றால், நான் பிறப்பதற்கே 26 நாள் கஷ்டம், பிறப்பதே ஒரு போராட்டம், பிறப்பதற்கே ஒரு போராட்டம் நடத்தி வெளிவந்தவன் நான்'' என்று.
	அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு, தலித் இன மக்களுக்கு, கிறிஸ்துவ சமுதாயத்தைச் சார்ந்தவர்களுக்கு அந்த பட்டியலிலே இடமில்லாமல் இருந்தது. அவர்களையும் அந்த பட்டியலிலே சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கின்றார் தலைவர் கலைஞர் அவர்கள். அருந்ததிய இனத்தைச் சார்ந்த ஒரு பெண்ணிற்கு பேராசிரியர் வேலை கிடைக்கவேண்டும் என்று நம்முடைய தளபதிக்கு ஒரு கடிதம் எழுதுகின்றாள். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, அந்தப் பெண்ணிற்கு பேராசிரியர் வேலை கிடைக்க ஏற்பாடு செய்தவர்நம்முடைய ஒப்பற்ற தலைவர் தளபதியாவார். நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த சுடலை மணி என்ற மாணவனுக்கு டாக்டர் படிக்க வேண்டும் என்ற ஆசை. ஆனால், அவனால் சரிவர படிக்கமுடியவில்லை. டியூஷன் வைத்து படிப்பதற்கும் வசதியில்லை. அவன் நம்முடைய தளபதிக்கு இமெயில் மூலமாக ஒரு கடிதம் எழுதுகின்றான். எனக்கு டாக்டர் படிக்க மிக ஆசை. இன்னின்ன பாடங்களில் எல்லாம் எனக்கு படிப்பதற்கு திரன் குறைவாக இருக்கின்றது. அவற்றிற்கு டியூஷன் வைத்துப் படித்தால் நன்றாகப் படித்து டாக்டர் ஆவேன். அதற்கு தயவு செய்து நீங்கள் ஏற்பாடு செய்யுங்கள் என்று. அக் கடிதத்தை கருணைக் கண்கொண்டு பரிசீலித்து, உடனே இளைஞரணி தோழர்களைக் கூப்பிட்டு, அந்த மாணவன் டியூஷன் படிப்பதற்கு அத்தனை வசதிகளையும் செய்து கொடுத்து, நல்ல மதிப்பெண் வாங்குகின்ற பட்சத்தில் உனக்கு மருத்துவக் கல்லூரியிலே இடம்பெற்றுத் தந்து படிப்பிற்கான அனைத்துச் செலவையும் இளைஞரணி ஏற்கும் என்ற விஷயத்தையும் செய்தவர் நம்முடைய தளபதி அவர்கள் தான்.
	உதாரணத்திற்கு, தந்தை பெரியார் 1929ம் ஆண்டு செங்கல்பட்டிலே ஒரு மாநாட்டை நடத்துகின்றார். அந்த மாநாடு எதற்காக கூட்டப்பட்டது தெரியுமா? இங்கே அமர்ந்திருக்கிற உங்களைப் போல பெண்களக்காக, அவர்களுடைய முன்னேற்றத்திற்காக 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட மிகப் பெருமை மிகுந்த, பெண்களுக்காக முதன் முதலாக நடைப்பேற்ற சுயமரியாதை மாநாடு.
	மட்டுமல்ல, 1லிருந்து 5ம் வகுப்பு வரை படிக்கின்ற அனைத்து வகுப்புகளுக்கும் பெண்களே ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று சொல்கின்றார். 
	1,44,215 மகளிருக்கு சுமார் 748 கோடியே 24 லட்சம் ரூபாயை நின்று கொண்டே வழங்கியிருக்கிறார்.
	1962ம் ஆண்டு இந்திய - சீன போரில் இந்தியா தோல்வியுற்று, 'அக்சைசின்' (Aksai Chin) என்ற பகுதியை இழந்தது. 'அங்கு புல்' பூண்டு எதுவுமே விளைவது இல்லை என்று தோல்வியை நியாயப்படுத்தினார் நேரு. அதற்கு மகாவீர் தியாகி என்ற காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நேருவைப் பார்த்து, "பிரதமர் அவர்களே, உங்கள் தலையில் கூட முடி எதுவும் வளர்வது இல்லை. அதனால் உங்கள் தலையை யாருக்காவது கொடுத்து விடலாமா?" என்று கேட்டார் - ஒரு பிரதமரை அவரது கட்சி உறுப்பினர் நாடாளுமன்றத்தில் விமர்சனம் செய்த வரலாறு இது! 
	இத்தகைய ஜனநாயகத் தடங்கள் திமுகவின் வரலாற்றிலும் உண்டு. இயக்கத்தின் தலைவர், முத்தமிழ் அறிஞரின் வழிகாட்டுதலோடு தளபதியின் அடுத்தகட்ட நகர்வு என்பது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல - பெரும்பான்மை தி.மு. கழகத் தொண்டர்களின் ஏகோபித் தவிருப்பமும், அவர்தம் ஜனநாயக வழியிலே எடுக்கக் காத்திருக்கின்ற முடிவும் கூட!
	தனக்கும், தான் சார்ந்த இயக்கத்திற்கும், தமிழக மக்களின் நன்மைக்கும், இளைஞர்களின் மேன்மைக்கும், உண்மையாக இருத்தலே தளபதியின் அடையாளம். புன்னகையும், மென்மையும், சகிப்புத் தன்மையுமே அவரது ஆயுதங்கள். நியாயமான உழைப்பு தருகின்ற நிறைவின் நிழலில் காத்திருத்தலே அவரின் பலம்; சமகால நடப்புகளில் சரியாகப் பங்களித்தலே எதிர்காலச் சரித்திரத்தினை முடிவு செய்யும் எனும் தெளிவே அவரது பயணம்; சிந்தனையின் அணையையும், உணர்ச்சிகளின் ஊற்றையும் ஒரு சேர நிர்வகித்தலே அவரது மொழி. தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளுதல், தயங்காத அர்ப்பணிப்பு, இயக்கத்தின் எதிர்கால முன்னேற்றம் - இவையே அவரது இலக்கு. ஒருபோதும் தன்னை முழுத் தகுதி பெற்றவராகவோ, உணர்ந்தவராகவோ, அறிவித்துக் கொண்டவரல்ல அவர்! தனது தலைவரின் கீழ்ப் படிகின்ற கடைநிலைத் தொண்டராக இன்று வரை முன்னிறுத்திக் கொள்கின்ற அவரது முதிர்ச்சிக்குப், பிரதிபலன் பாராத இந்த அர்ப்பணிப்பிற்கு, அதியமானின் நெல்லிக்கனி தானாகவே உள்ளங்கை வசப்படும்!
	அண்ணாவை முதலமைச்சராக்கிய ராஜாஜியோ, ராமமூர்த்தியோ ஆட்சியில் பங்கு கேட்கவில்லை. 
	அதே நேரத்தில் ILLU Started Weekly வார ஏட்டின் நிருபர்தான் முதலமைச்சர் அண்ணாவைப் பார்த்து
	There is Rajaji in your Front
	There is comrade Ramamoorthy
	In your Front
	Is your party a Rightist party
	Or a Leftist Party? என்று கேட்டான். 
	உங்கள் கூட்டணியில் மூதறிஞர் ராஜாஜியும் இருக்கிறார்; கம்யூனிஸ்டு ராமமூர்த்தியும் இருக்கிறார்; உங்கள் கட்சி இடது சாரிக் கட்சியா? அல்லது வலது சாரிக் கட்சியா?. 
	அண்ணா அமைதியாகச் சொன்னார்:- 
	I don't want to differentiate the political parties as Right and Left. My party is a “Right Party” in the Right sense of the Term” - என்று.
	நான் அரசியல் கட்சிகளை இடது, வலது என்று பிரித்துப் பார்க்க விரும்பவில்லை. என்னுடைய கட்சி ஒரு சரியான கட்சி என்றார்.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *