ஒருசமயம், பிரெஞ்சு தத்துஞானியான ழான்பால் சார்த்தரைக் கைது செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் வந்தது. காவல்துறை உயர் அதிகாரிகள் பிரெஞ்சு ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு சார்த்தரைக் கைது செய்யலாமா என்று அனுமதி கேட்டார்கள். அப்போது பிரெஞ்சு ஜனாதிபதியாக இருந்த டிகால் சொன்னார்: ‘சார்த்தரைக் கைது செய்வது முடியாத காரியம். பிரான்ஸ்தான் சார்த்தர்; சார்த்தர்தான் பிரான்ஸ். சார்த்தரைக் கைது செய்வது பிரான்சைக் கைது செய்வதற்குச் சமம். அந்த அளவுக்கு எழுத்தாளர்களும் தத்துவாதிகளும் பிரெஞ்சுமக்களால் பெரிதும் நேசிக்கப்பட்டார்கள்.
Milton-னுக்கு இணையாக உரைநடையில் சாதித்த Sir Thomas Brown சொன்னதாக, ஒரு வாசகம் உண்டு.
Wisdom is god’s most beautiful attribute
No man can obtain on to it.
Yet Solomon pleased god
when he deserved it.
அத்தகைய புகழுடையவன் சாலமன் அரசன். ஆனால், லில்லி மலர்களைப் பார்க்கும் போது, ஏசுநாதர் சொன்னார். “சாலமன் அரசன் தன்னுடைய மிகச் சிறந்த உடையில்கூட இந்த மலர்களைப் போல அழகாகவும், கம்பீரமாகவும் இல்லை” என்று.
“மதத்தின் இடத்தைக் கவிதை
எடுத்துக் கொண்டுவிடும்”
என்று Mathew Arnold பத்தொன்பதாம்நூற்றாண்டில்அவதானித்தார்.
“நட்சத்திரங்களைவிடநிறையவேபேசுவது
அவற்றிற்கிடையேயுள்ளஇருள்”
-பிரமிள்.
வாழ்க்கையை விசாரிக்கிறவர்களே கவிதையின் முதல் வாசகர்கள்.
‘ஆங்கில இலக்கியத்தில் மிக உயரமான ஆளுமையாக ஷேக்ஸ்பியர் இருக்கிறார் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். நான் அவரைவிட உயரமானவன். ஏனெனில், நான் அவரது தோள்களின்மேல் நின்று கொண்டிருக்கிறேன்’என்று நகைச்சுவையாக ஒருமுறை பெர்னார்ட்ஷா குறிப்பிட்டார். இதில் ஒரு உண்மை இருக்கிறது. ஒரு சிந்தனையாளரைப் பின்பற்றும் சீடர் தனது குருவின் கொள்கைகளையும் உள்வாங்கிக்கொண்டு அதனுடைய நீட்சியாகத் தனது புதிய கோட்பாடுகளை முன்வைக்கிறார்.
ஆங்கில இலக்கிய ஆளுமைகளில் மிக முக்கியமாகக் கருதப்பட்ட டாக்டர் ஜான்ஸன், தனிமனிதனாக, ‘மூன்று ஆண்டுகளுக்குள் A Dictionary of English Language என்ற ஒன்றை நான் தொகுத்து முடிப்பேன்’ என்று அறிவித்தபோது, அவரைச் சுற்றியிருந்தவர் கேட்டார்களாம் – “அதுஎப்படி? ஃப்ரென்ச் அகாடமியைச் சார்ந்த, 40 ஃப்ரென்ச்சுக்காரர்கள், 40 வருடங்களாகச் சேர்ந்து செய்து முடித்த ஒரு விஷயத்தை, நீங்கள் எப்படி மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்கத் திட்டமிடுகிறீர்கள்” என்று கேட்டார்களாம். அவர் சொன்னாராம், An Englishman is equal to forty French men. As 3 to 1600, (40×40) so also the proportion of an English man to French men என்று சொன்னாராம்.
ஆங்கிலம் இன்று உலகப் பொதுமொழியாகக் கருதப்படும் நிலையை அடைந்துள்ளது. ஆங்கிலேயரை இந்நாட்னின்றும் விரட்டியவர்கள்கூட ஆங்கிலத்தை விடமாட்டோம் என்று உறுதி பூண்டுள்ளனர். இந்தியர்க்கு ஆங்கிலமே கண்ணும் காதும் என்று கருதுகின்றனர் பலர். உலகமக்களில் பத்தில் ஒரு பகுதியினர் ஆங்கிலத்துக்கு உரியவராய் இருக்கின்றனர். (English speaking people constitute about one tenth of the world’s population – A History of English Language : Page 4).
இத்தகைய உயர்நிலையை அடைந்துள்ள ஆங்கிலம் ஒரு காலத்தில் அதன் நாட்டிலேயே இகழப்பட்டது.
இலத்தீன் மொழியும் பிரரெஞ்சு மொழியும் ஆங்கிலத்தின் இடத்தில் அமர்ந்து அரசு ஒச்சின.
பின்னர் ஆங்கிலேயரிடத்தில் தோன்றிய மொழிப்பற்று வேற்று மொழிகளை அகற்றி ஆங்கிலத்திற்கு உரிய இடத்ததை அளித்தது.
இலத்தீன் மொழி அரசோச்சியபோது அதனை விரும்பாத கல்விக்கூடத் தலைமையாசிரியர் ஒரு (Head master of the Merchant Taylor’s School) தமது மொழிப்பற்றைப் பின்வருமாறு வெளிப்படுத்தினார்….
கல்வியின் பொருட்டு ஒரு மொழிக்கு அடிமையாவது அடிமைத் தன்மைகளுள் பெரியதேயாகும்.
பிறமொழிகளைக் கற்பதனால் மிகுந்த நேரத்தை இழக்கின்றோம்; பிறமொழியால் பெறும் அதே செல்வத்தை நம்மொழியில் குறைந்த காலத்தில் பெறலாம்.
நம்முடைய மொழி நம் உரிமையையும் விடுதலையையும் வெளிப்படுத்துகின்றது.
இலத்தீன் மொழி நம்முடைய அடிமைத் தன்மையையும் இழிவையும் நினைவூட்டுகின்றது. உரோம நகரை விரும்புகின்றேன்; ஆனால் இலண்டன் மாநகரை அதனினும் மிகுதியாக விரும்புகின்றேன். இத்தாலியைப் போற்றுகின்றேன். ஆனால் ஆங்கிலத்தை நான் தொழுகின்றேன் (I Honour the Latin; but I worhsip the English).
கவிதையில் ‘சர்வதேசபாணி’ என்ற ஒன்று கிடையாது. கவிதையைப் படைக்கும் மூலப்பொருள் மொழியாக இருக்கும் வரையிலும், கலைகளிலேயே அதிகமாக பிரதேசத் தன்மை கொண்டது கவிதையாகத்தான் இருக்க முடியும்.
“மொழிபெயர்க்க இயலாதது எதுவோ அதுவே கவிதை”
என்று வரையறை செய்யும் அளவுக்கு பிரதேசத்தன்மை கொண்டது கவிதை.
பாப்லோ நெரூடா மனிதச் செயல்பாடுகள் அனைத்தின் (அனுமதிக்கப்பட்டவை மட்டுமின்றி, தடைசெய்யப்பட்டவையும் கூட) கைரேகைகளும் பதிந்த கவிதை வேண்டுமென பேசினார். வியர்வையும் புகையும்படிந்த, மூத்திரநாற்றமும், லில்லி மலர் வாசமும் கலந்து வீசும் ஒன்றாகக் கவிதை இருக்கவேண்டுமென வாதிட்டார்.
-டிசம்பர் 1998.
பிரெஞ்சு இலக்கிய மேதை ழான்பால் சார்த்தர் சொல்கிறார்;
“கவிஞர்கள் என்பவர்கள் சொற்களைப் பயன்படுத்த மறுப்பவர்கள்”
வாழ்க்கையில் ஒரு அனுபவத்தை நாம் பெறுகிறபோது சிந்தனை பூர்வமாகவும் உணர்ச்சி பூர்வமாகவும் அதனைப் பெறுகிறோம். இப்படி சிந்தனையையும் உணர்வெழுச்சியையும் ஒரே நேரத்தில் எந்த அளவுக்குத் தரக்கூடியதாக ஒரு கவிதை இருக்கிறதோ அந்த அளவுக்கு அது சிறப்புடையதாகிறது.
சோவியத் கவிஞர் ஜோஸப் ப்ராட்ஸ்கிதம் நோபல் பரிசு ஏற்புரையில் குறிப்பிடுவார்:
“பல சமயங்களில் ஒரு பிரத்தியே கவார்த்தைப் பிரயோகத் தினாலும் திடீரென்று தோன்றும் எதுகை மோனகைளாலும் கவிதை எழுதுபவன் மொழியின் விளிம்புகளுக்கே யாரும் புக முடியாத எல்லைகளுக்குச் சென்று விடுகிறான்.
பேரண்டத்தைப் புரிந்து கொள்வதற்கும் மனசாட்சியை எழுப்புவதற்கும் கவிதை இவ்வாறு துணைபுரிகிறது”
“மரபு என்றால் இலக்கணம் அல்ல.
மரபு அனுபவத்தோடு சார்ந்து நிற்கிறது.
பழைமையோடு பூண்ட உறவில்
தன் அடையாளங்களைப் பிறப்பிப்பது
தான் படைப்பு. பாதையில் பார்த்து
நடந்துவந்து, அதன் குருட்டு முனையில்
வெட்டிவிட்டதே மரபு”.
“மொழி என்பது மற்றவர்களுடன் கூடிய வாழ்க்கையை உறுதி செய்யக்கூடியது” – என்பதில் முழு நம்பிக்கை எனக்குண்டு. மொழியைப் போற்றிய சமூகம், தமிழ்ச்சமூகம். மொழிக்கு உயிர்நாடி கவிதை. அதனால் என் பொறுப்பு எளிமையானது அல்ல என்பது எனக்குத் தெரியும். முடிந்தவரை நேர்மையாக இருக்க முயல்கிறேன். எனக்கான அடையாளம் என்பதும், என் கவிதைக்கான அடையாளம் என்பதும், தமிழ்மொழியைச் சார்ந்ததே. எல்லாச் சமூகத்திற்கும் மொழிதான் அடையாளம், அதன் மூலம் எனக்கான அடையாளத்தைச் செழுமைப்படுத்த, வளர்த்தெடுக்க முயல்கிறேன் – அதுவே என் கவிதை. சமுத்திரத்தில் ஒரு துளி, என் கவிதையும், நானும்.
கவிதைகளுக்காக நான் காத்திருக்கிறேன்.
பல நேரங்களில் காத்திருப்பதில்லை.
வாழப்படுகிற வாழ்க்கையில் சில சம்பவங்கள்,
நிகழ்ச்சிகள் என்னை நிலைகுலைய வைக்கின்றன.
எழுத வேண்டும் என்ற உந்துதல் ஏற்படாத வரையில்
எழுதுவதில்லை. மாறாகக் காத்திருக்கிறேன். ஒரு சொல்லுக்காக,
ஒருவாக்கியத்திற்காக, ஒருபடி மத்திற்காக.
பழக்க தோசத்தில் எழுதுவதில்லை –
கவிதைஅப்படிஎழுதப்படவும்கூடாது.
புலன்களும், மனமும்திறந்திருக்க, கண்டதை, கேட்டதை, உண்டதை, உணர்ந்ததைச் செறித்துப்பின் பகிர்வதுதான் என் கவிதை. புறவாழ்க்கையின் சமரசங்களில் பல சந்தர்ப்பங்களில் கவியரங்கக் கவிதைகளை நான் செய்திருக்கிறேன். அவை கவிதைகளல்ல – கோர்க்கப்பட்டவை எனும் உண்மையை ஒப்புக்கொள்ளும் நேர்மை எனக்குண்டு. ஆனால், இத்தொகுப்பில் இருப்பவை பல்வேறு காலகட்டங்களில், ‘சுயம்’ குறித்த கேள்விகளுடன், அபத்தம் குறித்த இயலாமையுடன், கள்ள மௌனம் குறித்த கையாலாகாத்தனத்துடன், வெற்று சாட்சியாய் நிற்க நேர்ந்த அவலத்துடன், அதே சமயம் வாழ்வின் மீது தீராக்காதலுடனும், பரிவுடனும், நேசத்துடனும், கொஞ்சம் நம்பிக்கையுடனும் எழுதப்பட்டவை.
நோபெல் பரிசு பெற்ற, 77 வயது ஐ.பி. சிங்கரிடம் “நீங்கள் ஏன் எப்போதும் உங்களது சின்னஞ்சிறு வட்டமான யூதமக்களைப் பற்றி மட்டுமே எழுதுகிறீர்கள்?” என்று கேட்கப்பட்டபோது அவர் சொன்னார்.
“உண்மையான கதாபாத்திரங்கள் உண்மையான மக்களிடமிருந்தே பிறக்கின்றன. உண்மையான மக்களுக்கு ஆழமான வேர் உண்டு. வெறுமனே ஒரு பொதுவான மனிதனைப் பற்றி ஒரு நாவல் எழுதிவிட முடியாது. அதற்காக தனக்கென ஒரு முகவரி உள்ள ஓர் ஆணையோ, பெண்ணையோ தேர்ந்தெடுக்க வேண்டும். இதனால்தான், உண்மையான எழுத்தாளர்கள் தங்களுக்குச் சொந்தமான சூழலிலேயே, தங்களுக்குச் சொந்தமான மூலையிலேயே தங்கிவிடுகிறார்கள்”.
நீக்ரோக்களின் மகாகவி என்று பின்னாளில் அறியப்பட்ட லாங்ஸ்டன்ஹ் யூக்ஸ் (Langston Hughs) அறிக்கை ஒன்று தயாரித்து வெளியிட்டார். “நீக்ரோ கலைஞனும் நிற வெறிமலையும்” என்ற அந்த அறிக்கையில் அவர் கீழ்க்கணடவாறு பேசுகிறார்.
1924-களில் முழுமையாக அங்கீகரிக்கப்பட்ட ‘ஹார்லம் மறுமலர்’ கருப்பு அடையாளங்களை கவிதை, புதினம், நாடகம், இசை ஆகிய அனைத்திலும் புகுத்தியது.
“கருப்புத் தோலை உங்கள் உடம்பை மூடும் ஒரு அங்கியைப் போல் அணிந்து கொள்ளாதீர்கள்.
அதை ஒரு போர்க் கொடியைப் போல் உயர்த்திப் பிடியுங்கள்” என்று குரல் கொடுத்தார் ஹார்லம் மறுமலர்ச்சியின் மகாகவியான லாங்ஸ்டன் ஹ்யூக்ஸ்.
“ஒரு கவி¨யின் தேர்ந்தசொற்கள், படிமம், குறியீடு போன்ற உத்திகளை விளக்குவதில் எனக்குப் பயிற்சியில்லை.
இந்த வித உத்திகளின் புரிதல்களுக்கு அப்பால் கவிதைகளை என்னால் அடையாளம் காண முடியும். அதில் மனிதம் இருப்பதொன்றே எனக்குப் போதுமானது.
அந்நியமாகிப்போகும் வாழ்க்கையை எனக்கு நெருக்கத்தில் அது கொண்டுவந்து நிறுத்தினால் போதும்” – இன்குலாப்.
நல்ல எழுத்தாளனுக்கு விளக்கம் ஏதும் தேவையில்லை. டால்ஸ்டாய், செக்காவ், மாபசான் போன்றவர்களுக்கு விளக்கம் சொல்லும் அறிஞர்கள் யாரும் இல்லை.
“கவிதைகளை நம்மிடமிருந்து யாரும் பிதுக்கி எடுத்துவிட முடியாது” – இந்திரன்
ஏனோ இங்கு, காம்யுவின் “ஏளனத்தின் மூலம் கடந்து வரப்பட முடியாத தலைவிதி ஏதுமில்லை” எனும் வாசகம் நினைவிற்கு வருகிறது.
புற வாழ்வின் ஏளனங்களைக் கடந்து வர எளிமையான அருகனைத் தவிர வேறென்ன துணையிருக்க முடியும்?
* * * * *
No comment