உயிர்மை பதிப்பகம்
வெளியிடப்பட்ட தேதி: 14 Jan 2013
எழுத்தின் வழியே பேசுவது என்பது, மனம் சம்பந்தப்பட்டது. உணர்வு சம்பந்தப்பட்டது. நாம் நமக்குள்ளேயே பேசுவது கடிதம். நாம் இன்று நமக்குள்ளேயே பேசுவதை விட்டுவிட்டோம். பிற பேச்சுக்களைவிட எழுத்தின் வழியே பேசுவது என்பது நீடித்த, நிலைத்த பேச்சாக இருக்கிறது. சில கடிதங்கள், நம்மை உணர்விழக்கச் செய்கின்றன. என்னை அறிந்தவர்களும், அறியாதவர்களும் எனக்கு எழுதிய கடிதங்கள் அளித்த மகிழ்ச்சியை, உற்சாகத்தை, விமர்சனத்தை நான் எளிதில் இழக்க முடியாது. அந்த உணர்ச்சிகளை, சிலிர்ப்பை அப்படியே பாதுகாக்க விரும்பினேன். – தமிழச்சி தங்கபாண்டியன்
No comment