உயிர்மை பதிப்பகம்
வெளியிடப்பட்ட தேதி: 14 Jan 2013
தற்காலத்தில் கவிதையைப் படிக்கவோ, கவிதை நூலை வாங்கவோ ஆளில்லை என்ற நிலையை மாற்றியிருக்கிறது தமிழச்சியின் கவிதை நூல்கள். அவருடைய கவிதைகள் கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளில் அதிகமாகப் பேசப்பட்டும், விவாதிக்கப்பட்டும், விமர்சிக்கப்பட்டும், இருக்கின்றன. இது அவருக்குக் கிடைத்த கெளரவம் அல்ல, அவரது கவிதைக்கு – தமிழ்க் கவிதைக்குக் கிடைத்த கெளரவம். தமிழின் முக்கியமான ஆளுமைகள் பலரும் தமிழச்சியின் கவிதைகள் குறித்து எழுதியிருக்கிறார்கள். ஒரு படைப்பாளிக்குக் கிடைக்கும் பரவலான கவனிப்பும், அங்கீகாரம் என்பதும் படைப்பின் தரம் சார்ந்தே நிர்ணமாகிறது. தற்காலத்தில், தமிழின் மிக முக்கியமான கவிஞர் தமிழச்சி என்று கல்யாண்ஜி, கலாப்ரியா, தமிழவன், இமையம், ந. முருகேசபாண்டியன், அ. ராமசாமி, பிரம்மராஜன், த.பழமலய், அறிவுமதி, க.பஞ்சாங்கம், பிரபஞ்சன், சுதீர் செந்தில், வெங்கட்சாமிநாதன், சுகுமாரன், யவனிகா ஸ்ரீராம், பத்மாவதி விவேகானந்தன், கே.ஆர். மீரா போன்றோர் கூறியிருக்கிறார்கள். இவர்கள் கூறுவது தமிழச்சிக்காக அல்ல, அவருடைய கவிதைக்காவே என்பதை ‘காலமும் கவிதையும்’ நூலைப் படிக்கும்போது நாம் அறியலாம். இந்த விமர்சனக் கட்டுரைத் தொகுப்பு நூல் தமிழ் இலக்கிய உலகிற்குப் புதிய வாசல்களைத் திறந்துவிடும்.
No comment