22-09-2022 அன்று, SAGY திட்டத்தின் கீழ், நான் தத்தெடுத்துள்ள சித்தாலப்பாக்கம் கிராமத்தில், எனது முன்னெடுப்பில், காளியம்மன் கோவில் குளத்தின் சீரமைப்புப் பணி நிறைவுபெற்று, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் Ma Subramanian திறந்து வைத்த நிகழ்வில், S.Aravind Ramesh MLA, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு.ராகுல் நாத் இ.ஆ.ப ஆகியோருடன் கலந்துகொண்டேன்.
இந்தப் புத்தாக்கப் பணிக்காக, “தண்ணீர்” நாவலை எழுதிய, மறைந்த எழுத்தாளர் திருஅசோகமித்திரனது மகன் திரு.ரவிசங்கர் தியாகராஜன் ரூ.13 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார். குறிப்பாக திரு.அசோகமித்ரன் அய்யாவின் பிறந்தநாளான இன்று இக்குளம் திறந்து வைக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. குளம் தூர்வாரும் பணியினை மேற்கொண்ட சானிடேஷன் ஃபர்ஸ்ட் அமைப்பினைச் சேரந்த திருமதி.பத்மபிரியா, திருமதி.நிஷா, திரு.சுந்தர மாணிக்கம், திரு.காசிநாதன் ஆகியோருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி.







No comment