“ஞானம் நுரைக்கும் போத்தல் – குமரகுருபரன்” என்னும் புத்தக வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை

சுதந்திரம் ஒரு கந்தர்வக் கன்னி
அவளால் வீட்டுக்கு வீடு செல்ல முடியாது
ஓரிரு வீடுகளையே பார்த்துத் திரும்புகிறாள்
மக்கள் துயரத்தில் தவிப்பர்
ஆள்பவரோ மாப்பிள்ளை போல
அவளோடு தனியறையில் சுகிப்பர்.
காஷ்மீர் கவி மசூர்.

"எனது கவிதைத் தொகுப்பு என்பது எனது அம்பு.  இலக்கில்லாமல் எய்யப்படும் அம்பு.  கால அவசியம் அற்ற அம்பு.  தேவை எதுவும் அற்று எய்யப்பட்ட அம்பு" என்கிற சுதந்திரக் கந்தர்வக் கன்னி குமரகுருபரனின் கவிதைகள்.  நியாயமும், இயல்பின் படியுமாக அவை - அக்கவிதைகளெனும் இலக்கற்ற அம்புகள் என்னைத் தைத்தன என்பதையே நான் இங்கு பேச விரும்புகிறேன்.  கவிதைகளை விட அவை நிகழ்கின்ற தருணங்களைப் பதிவு செய்வது மட்டுமே அவற்றுடனான தனது பயணம் என்கிற குமரகுருபரனின் தன்னுரையைக் கடக்க எனக்கு அதிக நேரம் பிடித்தது.  15 ஆண்டுகளாகப் பத்திரிக்கை ஊடகத்தில் பணியாற்றி வருகின்றவரின், கவிதை குறித்து மிக நுட்பமாக உணர்ந்து தெளிவோடு பயணிப்பவரின் முதல் தொகுப்பு இப்போதுதான் வருகிறது என்கிற விஷயம், அவசரக்குடுக்கை போல 4 தொகுப்புக்களை கொண்டு வந்து விட்டேனோ எனச் சற்றுக் கூச்சத்துடன் என்னை எண்ண வைக்கிறது.  இக்கவிதைகளால் ஈர்க்கப்பட்ட ஒரு வாசகனாக இருந்து, அறிமுகமற்ற ஒரு படைப்பாளியை இனங்கண்டு, அவரது கவிதைகளைப் புத்தகமாக்கிய ஆதிரை பதிப்பகத்தின் வசந்த் ஆதிமூலத்திற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
கவிஞன் என்பவன் வேறு, கவிமனம் கொண்டவன் வேறு என்று நான் நினைக்கிறேன்.  கவிஞனாக இருப்பதை விடக் கவிமனம் கொண்டவனாக இருப்பதே உத்தமமானதும், எனக்குப் பிடித்தமானதும்.  அவ்வகையில் குமரகுரபரன் ஒரு கவிமனம் கொண்டவராகவே எனக்குப் படுகிறார்.  ஒரு கவிமனம் கொண்டவன் ஒருபோதும் idealist ஆக இருக்க முடியாது. ஒருவேளை Mystic ஆக வேண்டுமானால் அவன் இருக்கக்கூடும் என்பதையே அவரது கவிதைகள் நீருபிக்கின்றன.  அதற்கு மிகச் சரியான சான்று ஒரு சிறுமியின் கதை எனும் கவிதை...

"இவ்வாறு பல முதலுக்கு அப்புறம் 
முதலில் கதை ஒன்றைச் சொல்ல ஆரம்பித்த போது 
கதைசொல்லி சிறுமி ஆகியிருந்தான் 
சிறுமி கதை ஆகியிருந்தாள்."

“Take what you have while you have it: you'll lose it soon enough, 
	A single summer turns a kid into a shaggy goat,” says a greek epigram. (Poet's Choice - Edward Hirsch: 19)
	மேற்சொன்னதை அப்பட்டமான கவித்துவ உணர்வாக, ஆனால் மிக நேர்த்தியாக, ஒரு சமைக்கப்படாத நேர் உரைநடை மொழியில் கவிதையாக்கி இருக்கிறார் இதை எழுதுகிறவன் எனும் கவிதையில்.
"ஒரு கஜலின் உருக்கத்தை
ஞாபகமுற ஜக்கித் சிங் இறந்து
தொலைக்க வேண்டியதிருக்கிறது..."
எனத் தொடங்கும் அதன் நகாசு வேலையற்ற மொழி எனக்குப் பிடித்திருக்கிறது.
“THE PROSE POEM is a poem written in prose rather than verse, which makes it a weird hybrid, an anomalous genre.  It avails itself of the elements of prose while foregrounding the devices of poetry.  Prose poems work by the sentence rather than the line, the paragraph instead of the stanza, and yet they insistently define themselves as poems, which gives them an air of rebelliousness, a sense of breaking loose from old-fashioned strictures.  Still, these compulsively modern creatures may look like prose, but they think metaphorically, like poetry.” (Poet's Choice - Edward Hirsch: 249) குமரகுருபரனின் வசன கவிதை இவ்வகைமையைச் சார்ந்ததே.
சிற்பி ரோடினிடம் செயலாளாராகப் பணிபுரிந்த ஜெர்மன் கவிஞர் ரில்கே (ரெய்னர் மேரியா ரில்கே) பிராகுவில் பிறந்தவர், பொகீமிய இனத்தைச் சார்ந்தவர்; ஆஸ்திரியக் குடிமகன்.  சிற்பி ரோடினிடமிருந்து பெற்ற உள்ளொளியைக் கவிதைப்பாணியில் அவர் கடைப்பிடித்ததாக ஒரு கருத்துண்டு.
"ரில்க்கேயின் இக் கவிதைப் பாணிக்குக் கருப்பொருள் கிடையாது. கவிஞன் ஆழ்ந்த தனிமையில் இருக்கும் போது, அது தனக்குரிய கருவைத் தானே படைத்து வெட்ட வெளியில் எடுத்து நிறுத்த வேண்டும்.  அதைக் கருக்கவிதை(Poem of Things) என்று ரில்கே குறிப்பிடுகிறார்" Rilke இன் இக்கருக்கவிதை பற்றி, "வாழ்க, ரில்க்கேயின் கருக்கவிதை.  அது தனிமையின் சாந்தா க்ளாஸ்" (Santa claus) என்று பாராட்டுகிறார் W.H.Auden.
நான் குமரகுருபரனின் இக் கவிதைகளை ஞானத்தின் சாந்தாக்லாஸ் என்பேன்.  இதற்காக இவர் உள்ளொளி, தரிசனம் என்றெல்லாம் தனிப்பட்டதொரு திருகு மொழியில், இருண்மையை வலியப் போர்த்தி இருக்கின்ற மெனக்கிடுதலைச் செய்யவில்லை என்பதே எனக்கு மகிழ்ச்சி, கூடுதலாக ஒரு அணுக்கத்தை உருவாக்குவதும், இத்தொகுப்பின் மிக முக்கியமானதாக என்னை உணரச் செய்வதும் இதனுடைய மொழிநடை.  அதனை மிக அழகாக கவிதை எனில் என்கின்ற வசனம் அல்லது கவிதை அல்லது வசன கவிதையில் குமரகுருபரனே சொல்லி இருக்கிறார்.  பின்வரும் இவ்வா¢யைப் பாருங்கள் "எலும்புகள் தேய்ந்த ஒரு கிழக்கைதி சொல்வான் வாழ்க்கை பற்றி கடவுளுக்கும் தொ¢யாத அனைத்துமே" அப்பட்டமாக இது ஒரு உரைநடை வாக்கியம் - ஆனால் அச்சொட்டாக கவி உணர்வும், ஞானச் செறிவும் சா¢ சமமாகப் புணர்ந்த  அற்புத கவிதை அனுபவமல்லவா அது!
That way, Kumarakurubaran's expressions may look like prose, but they think metapholically, like poetry.
அவருக்கு இன்றுமொரு pat on the shoulder & a lovely handshake - மிக ஆழமான, நுட்பமான Orgasmic கணங்களை, வாழ்வின் மொத்த ஞானத்தை ஒரு துளியில் துய்க்கும் கணமொன்றைச் சொல்கின்றார். அதன் வழியும், மொழியும் எளிமையாக, ஸ்பஷ்டமாக, அதீதமான படிம தோரணைகள், உவமைச் சுமைகளோடு கூடிய கனபாடிகளாக இல்லாமல், ஓடித் தி¡¢யும் சிறுமியொருவளின் வசதியான சிற்றுடை போலிருக்கிறது.  மிக எளிமையான தொரு style to emulate wisdom in deep tone - என்கிற வழியை இவர் கைக்கொள்வது மிக முக்கியம் இங்கு.  பாதலோ¢ன் Petit Poemsen Prose மீது பொ¢தும் செல்வாக்கு செலுத்தியவர் Aloysius Bertrand எனும் ஃப்ரெஞ்சு எழுத்தாளர் - அவர்தான் prose poem, வசனகவிதை எனும் வகைமையை (genre) தனது Gaspard de la Nuit எனும் புத்தகத்தில் நிலை நிறுத்தியவர்.  அதன்பின் அவ்வகைமை மீது பெருங்காதல் கொண்ட பாதலேர் இவ்வகை ஊடகம், (குறிப்பாகக் கவிதையில்) குறித்துத் தனது நண்பருக்கு, 
“Who among us has not, in his ambitious moments, dreamed of the miracle of a poetic prose, musical without meter or rhyme, supple enough and rugged enough to adapt itself to the lyrical impulses of the soul, the undulations of the psyche, the jolts of consciousness?” (Poet's Choice - Edward Hirsch:249) என்று சிலாகித்து எழுதி இருக்கிறார். 
மேற்சொன்ன அனைத்தையும் குமரகுரபரனின் கவிதைகளில் பார்க்கலாம் 
"பிரிவதுமில்லை
விலகுவதுமில்லை பூக்கள்" - is the best lyrical impulse of a soul.
"அரங்கங்கள் அற்ற நகருக்கு  வந்திருக்கிறேன்
புணர்வுகளற்ற காதல் ஊற்றெடுக்கும் 
அந்த நகருக்கு
என்னைப் போல வழி தவறியவன் 
அவன் என்றறிந்த பின்
திசை தவறினேன் நானும்"
is sure the undulations of the psyche,
"குழந்தையின் முகத்துடன் 
கொலைகள் நிகழ்த்தும் உலகு"
"குற்றமான காதல்கள் நிறைய உண்டு.
அவை அனைத்தாலும், இன்னமும் காதல் 
என்கிற உணர்வைக் குற்றப்படுத்தவே முடியவில்லை"
are difinitely the jolts of consciousness.

வாசித்தல் எப்போதும் ஒரு விடுதலை தருகின்ற அனுபவம் எனக்கு.  நான் இதுவரை சென்றிராத இடங்கள், உணர்ந்திராத கணங்கள், என்னைச் சிறு தூசு என உணரச் செய்யும் தா¢சனங்கள் - இவற்றை வாசிப்பு அனுபவமே எனக்கு வழங்குகிறது.  குறிப்பாக இப்படி ஒரு கவிமனதின் ஆழமான உலகம் - அதன் பதிவுகள்.  வரலாற்றின் வாசனை எனும் கவிதை அவ்வாறானதொரு விடுதலைதான் எனக்கு.
"இந்தியா மீது அடுத்தடுத்து நிகழ்ந்த படையெடுப்புகளைத் தவிர இந்தியாவிற்கென்று வரலாறு ஏதும் இல்லை என கார்ல் மார்க்ஸ் ஒருமுறை கூறினார்.  இதனால், இந்திய தேசிய மரபில் வந்த தேசியவாத, மார்க்சிய வரலாற்று அறிஞர்களுக்கு மார்க்ஸ் மீது சற்றுக் கோபம்தான்! ஆங்கிலேயர் வரும் வரை, தன்னிறைவான, பார்ப்பனிய-சாதி அடிப்படையிலான கிராமியப் பொருளாதார சமூக அமைப்பு முறை ஆட்டங் காணாமல் அப்படியே நிலைத்திருந்தது என்னும் பொருளில்தான் மார்க்ஸ் மேற்கண்ட கூற்றை எழுதினாரேயன்றி வரலாற்றை உருவாக்குவதில் இந்திய மக்களுக்குள்ள ஆற்றலை மறுப்பதற்காக அல்ல." (கல் தெப்பம் கலை இலக்கியம் அரசியல் - எஸ்.வி.ராஜதுரை : 79)  எப்போதுமே வரலாற்றின் பெருமை குறித்த புனிதப் பார்வை நமக்கு உண்டு! அதைக் கவிழ்த்திக் குலைக்கின்றார் பின்வரும் இக்கவிதையில்... 
"பழுத்த தாள் ஒன்றில் 
எழுத்தாய் இறப்பதைக் காட்டிலும் 
புதிய பக்கமொன்றின் வெறுமையாய் அரம்பியுங்கள்.

உங்கள் பழைய வரலாறு
குப்பைக்குப் போகும் முன் 
தயைசெய்து ஒரு 
புதிய பக்கமொன்றின்
வெறுமையாய்க் காத்திருங்கள்."

"Peoples of the Earth
Do not destroy the Universe of words" என்றொரு கவிஞர் வேண்டினான்.  ஆனால் உன்கனவுக்குள் என்கிற அற்புதமான கவிதையில் சிதைந்த கனவு குறித்துப் பதிகின்ற குமரகுருபரன் ஒரு Labryinthine(அடுக்கடுக்கான) மொழியில் ஒரு Labyrinth(சிக்கலான) வழியில் மிக நுட்பமானதொரு உணர்வைச் சொல்கிறார். “கனவின் சிதைவும் கனவே காணீர்” என.
நான் நினைத்துக் கொண்டேன் - வார்த்தைகளைச் சிதைக்காமல், கனவின் சிதைவை ஒரு நிறைவான அனுபவமாக நமக்குக் கடத்தியிருக்கிறாரென.

ஞானம் என்பது குமரகுருபரனுக்கு காபியிலும், 
"தூரத்தின் ஆற்றாமை
என்பதைக் காபி அருந்துவது
எனவும் கொள்ளலாம்."

ஒரு போத்தலிலும்,
"பகார்டி கடவுளை இயல்பாக
அழைத்து வந்து விடுகிறது
கடவுளால் பகார்டியை 
கொண்டு வர 
இன்னும் முடியவில்லை."

ஒரு சாத்தானிடத்தும்,
"சொல்பவன் சாத்தான்
என்று அறியப்படுவான்
எனினும், அவனே உண்மையின் கடவுள்"

ஒரு பெண், பூ இவற்றிடத்தும்,
"அவள் பூவா? என்றேன்
உனக்கு அவள் அப்படியா என்பதை
அவள் தான் எழுத வேண்டும்".
ஒரு கூடல், பு¡¢தல், ஒரு நிதர்சனம்... என எல்லாவற்றிலும் கைவரப்பெறுகிறது.
உண்மையில் எல்லாவற்றிலும் கனிந்த ஒரு உள்வாங்குதலே, ஏற்றுக் கொள்ளலே,வேடிக்கை பார்த்தலே, கொண்டாட்டமே, தன்னைக் கரைத்தலே - இந்த ஒரு போத்தல் ஞானம்.  இதில் பிராதுகளோ, புகார்களோ, அறிவுறுத்தல்களோ, அறிவித்தல்களோ, நிரூபித்தல்களோ இல்லை மாறாக,

For half a century 
Poetry was the paradise
Of the solemn fool.
Until I came 
And built my roller coaster.
Go up, if you feel like it.
I'm not responsible if you come down
With your mouth and nose bleeding.
(Poet's Choice - Edward Hirsch: 168)
எனும் Roller coaster ride ஏ எனக்கு வாய்த்தது and I liked the journey of these poems immensely.

நீட்சேவின் பின்வரும் இக்கருத்து எனக்கு மிக முக்கியமானது:
"ஒரு கலைஞனை நாம் அவனுடைய படைப்பின் அளவுக்குத் தீவிரமாகக் கருதாமல், அவனுடைய படைப்பிலிருந்து பி¡¢க்க முயற்சி மேற்கொள்கிறோம்... உண்மை என்னவென்றால் அவனே தன்னுடைய படைப்பாக இருந்தால் அவன் ஒன்றைப் பிரதிநிதித்துவப்படுத்தவோ, மனத்தில் உருவாக்கவோ வெளியிடவோ முனையமாட்டான்: ஹோமரே அக்கிலிசாக இருந்தால், கெத்தெ-வே ஃபாஸ்ட்டாக இருந்தால், ஹோமர் ஒரு அக்கிலிஸை உருவாக்கியிருக்கமாட்டார், கெத்தே ஒரு ஃபாஸ்ட்டை உருவாக்கியிருக்கமாட்டார் இதன் முடிவு என்னவென்றால், கலைஞன் மனசாட்சியற்றவன்.  தனது படைப்பை மேம்படுத்தும் எந்தச் சாயலையும் ஏற்பவன் என்பதுதான்.  அவன் தனது படைப்பின் நோக்கத்திற்காக, அனுபவத்தைப் பயன்படுத்துகிறான்.  அதற்கும் 'உண்மை'க்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கலாம்".  (நீட்சே - மைக்கேல் டேனர் : 117)
ஆனால் இதற்கு நேர்மாறாக இயங்குகின்றது குமரகுருபரனின் கவிமனம் - அது வெளிப்படுத்துகின்ற கவிதை உலகு.  அவரது கவிமனம் தனது கவிதைகளை மேம்படுத்த எந்தவிதமான சாயலையும் ஏற்கவில்லை என எனது உள்ளுணர்வு சொல்கிறது.  படைப்பினை மேம்படுத்துவதற்காக அவர்தம் அனுபவத்தைப் பயன்படுத்தவில்லை - அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.  அது உண்மையோடு உரையாடுவதால் மேன்மையாக வெளிவந்திருக்கிறது என்பது என் கருத்து.  பாசாங்கற்ற பைத்தியக்காரன் போல, நண்பனோடு கொண்டாட உயர்கின்ற மதுக்கோப்பை போல, நேசம் கொள்வோ¡¢டம் திரைகளற்று ஒன்றாகக் கலந்து துய்ப்பது போல, ஒரு போத்தல் ஞானம் இயல்பாக, மிகையற்று, கனிந்து, நிறைந்து இருக்கிறது. வாழ்த்துக்கள்... குமரகுருபரன்.
போதலோ¢ன் படைப்புகள் பற்றி ஆர்தர் சைமன்ஸ் என்ற திறனாய்வாளர், தாம் எழுதியுள்ள "இலக்கியத்தில் குறியீட்டு இயக்கம்" (The Symbolist Movement in Literature) என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
"ஒரே	ஒரு கவிதை நூலை எழுதுவதில் போதலேர் தமது வாழ்க்கை முழுவதையும் செலவிட்டார்; அதன் பிறகுதான் பிரெஞ்சு மொழியில் உயர்ந்த கவிதைகள் எல்லாம் தோற்றம் எடுத்தன.
ஒர் உரை நடை நூல் எழுதினார்: அந்த உரை நடை அழகுக் கலையாக (Fine Art) மதிக்கப்படுகிறது.
ஒரு திறனாய்வு நூல் எழுதினார்.  அவர் வாழ்ந்த காலத்தில் தோன்றிய திறனாய்வு நூல்களில் இதுவே உயர்ந்ததும் உண்மையானதும் நுட்பமானதும் ஆகும்.
ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார்; அது மூலத்தை விடச் சிறப்பானது".  (புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள் - முருகுசுந்தரம்: 24,25)
படைப்புக்களை பொழிந்து தள்ளி, எழுதிக் குவிக்க வேண்டுமென்கிற அவசியமில்லை.  இது போல ஒன்று போதும்!

உதவிய நூல்கள்:

	நீட்சே மிகச் சுருக்கமான அறிமுகம் - மைக்கேல் டேனர் (தமிழில் க.பூரணச்சந்திரன்)
	புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள் - முருகுசுந்தரம்
	Poet's Choice - Edward Hirsch
	கல் தெப்பம் கலை இலக்கியம் அரசியல் - எஸ்.வி.ராஜதுரை

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *