உயிர்மை பதிப்பகம்
எஞ்சோட்டுப் பெண் கவிதைத் தொகுப்பு முதலாகத் தமிழச்சிக்குத் தெளிவான தீர்மானம் இருக்கிறது. உலக மொழிகளில் கொண்டாடப்படுகிற சிறந்த கவிதைகள் குறித்து நன்கறிந்திருந்தும், அவருடைய மனம் அசலானது எனக் கருதுவதைக் கவிதையாக்குவதில் இருந்து ஒருபோதும் பின் வாங்கவில்லை. அதுதான் தமிழச்சியின் தனித்துவம். உலகமயமாக்கல் காலகட்டத்தில், தொன்மையான தமிழ் மொழி, தனது அடையாளத்தையும், இருப்பையும் எப்படி தக்கவைக்கப் போகிறது என்ற கேள்வி முக்கியமானது. இந்நிலையில் நினைவுகளின் வழியே மிதந்திடும் தமிழரின் பாரம்பரியத்தையும், சமகாலத்தையும் தமிழச்சி கவிதைகள் மூலம் மீண்டும் பதிவாக்கியிருப்பது, இன்றைய தேவை. தமிழச்சி, கவிதைகள் மூலம் தமிழ்ச் சமூகத்துடன் தொடங்கியுள்ள பேச்சுகள் குறித்து மறுபேச்சுகளை உருவாக்கிட முயன்றுள்ள விமர்சகர்களின் எழுத்துகள், அவரின் கவித்துவத்துவ ஆற்றலையும், பன்முகத்தன்மையையும் புரிந்திட உதவுகின்றன. ந. முருகேசபாண்டியன்.
No comment