தமிழாற்றுப்படை – வைரமுத்து புத்தக வெளியீடு பேச்சு

கவிதைகள் மட்டுமே அரங்கேற்றப்பட்ட தமிழின் நீண்ட இலக்கிய வரலாற்றில்  கட்டுரைகள் அரங்கேறுவது தமிழுக்குப் புத்தம்புதிது.
தமிழாற்றுப்படை என்ற தலைப்பின்கீழ் இதுவரை 15 ஆளுமைகளை அதன் வழி ஆய்வு செய்து இந்தத் தலைமுறைகளுக்கு அவர்தமை அறிமுகம் செய்கின்றார் கவிப்பேரரசு. திருவள்ளுவர் - இளங்கோவடிகள் - கம்பர் - அப்பர் –  திருமூலர் –– வள்ளலார் - உ.வே.சாமிநாதையர் - பாரதியார் – பாரதிதாசன் -– புதுமைப்பித்தன் – கலைஞர் - கண்ணதாசன் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – ஆண்டாள் - மறைமலையடிகள்  என்ற வரிசையில், இன்று 16ஆம் ஆளுமையாகத் தொல்காப்பியரை ஆய்வு செய்து இங்கே அரங்கேற்றவிருக்கிறார்.
வாசிப்பு அனுபவத்தால் 50 ஆண்டுகள் இந்த ஆளுமைகளோடு வாழ்ந்திருந்தாலும், ஒரு கட்டுரை படைக்க 60 முதல் 90 நாட்கள் செலவிடுவதாகச் சொல்கிறார். 7 முதல் 12 முறை திருத்திச் திருத்திச் செப்பனிடுகிறார். 3000 வார்த்தைகளில் கட்டுரை எழுதி 1800 முதல் 2000 வார்த்தைகளாகச் சுருக்குகிறார்.
தமிழாற்றுப்படை என்னும் இந்த முயற்சி தமிழின் பெரும்பரப்பைத் தமிழர்க்கு ஓரளவு அறிமுகம் செய்யும் உன்னதப் படைப்பாகத் திகழும்.
“தமிழ்ச் சமூகத்தின் முன்னைப் பழமையின் மூலதனமாகவும் பின்னைப் புதுமையின் அடித்தளமாகவுள்ள தொல்காப்பியம் ஒரு முழுமையான மொழிநூல் மட்டுமன்று ஆழமான கவிதையியல் நூலுமாகும்” என்னும் பேராசிரியர் கா.செல்லப்பன் அவர்களின் கூற்று தொல்காப்பியரைப் பாவியல் பேராசானாகவும் எடுத்துரைக்கின்றது. (தொல்காப்பியச் சுரங்கம் - உ.சண்முகநாதன்: 59)
தொல்காப்பிய ஆய்வு உரையாசிரியப் பெருமக்களால் துவங்கப்பட்டு, தமிழறிஞர்களால் மறுமலர்ச்சி பெற்றுள்ளதைப் பல்வேறு தொல்காப்பிய ஆய்வு நூல்களின் வாயிலாக அறியமுடிகிறது. (தொல்காப்பியச் சுரங்கம் - உ.சண்முகநாதன்: 70)
‘வண்புகழ் மூவர் தண் பொழில் வரைப்பின்’ (தொல். செய். 75) உருவான தொல்காப்பியம் வெறும் இலக்கண நூல் அன்று; தமிழ் மக்களின் வாழ்வியல் கூறுகளை எடுத்துரைக்கும் நூலாகும். கடல்கொண்ட தென்னாட்டில் உருவான தொன்மை மிகுந்த இவ்விலக்கண நூல் கி.மு.7 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது,
‘ஹெர்வரர்’ என்னும் காப்பியத்தில் ஒரு செய்யுளில்,
	அவன் பிறந்தபோது அவனுக்கென்று படைக்கலன்கள் 
உருவாக்கப் பெற்றன; அப்போது பிறந்த குதிரைகளும் 
அவனுக்கென்று வளர்க்கப் பெற்றன.
(தொல்காப்பியத்தில் வீரநிலைக்கால எச்சங்கள் - கு.வெ.பாலசுப்பிரமணியன்: 36)
வழுதி முதல் கடுங்கோன் வரையிலான 89 பாண்டிய மன்னர்களால் உருவாக்கப்பட்டு 449 நற்புலவர்களால் ஆராயப்பட்டு 4440 ஆண்டுகள் நிலைத்திருந்த முதல் சங்கத் தமிழ்.
வெண்தேர்ச் செழியன் முதுல் முடத்திருமாறன் வரையிலான 59 பாண்டிய பேரரசர்களால் பாதுகாக்கப்பட்டு அகத்தியர், தொல்காப்பியரோடு மற்றும் 59 கவி வாணர்களாலும் 3700 ஆண்டுகளாக முழுதாகப் பாதுகாக்கப்பட்டு பாண்டிய நாட்டை கடல் கொண்ட போதும் பாதிக்கப்படாத தமிழ்.
கடற்கோளில் உயிர் பிழைத்த முடத்திருமாறன் 49 பாண்டிய பெருவழுதி வரையான 49 பாண்டிய வேந்தர்களால் பேணப்பட்டு 449 நற்கவிஞர்களால் நலம்பாடி வளர்ந்த தமிழ்.
	தமிழர்களுடைய வாழ்க்கை முறைக்கும் இலக்கணம் கூறும் ஓர் ஒப்பற்ற சமுதாய நூல் என்று சொல்லலாம். (தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை - சுப்பு ரெட்டியார்: 18) 
        தமிழ்மொழியின் சிறப்பினையும், வாழ்வியல், கவிதையியல் கலையியல், படைப்பியல் போன்ற கருத்துக்களை முப்பெரும் பிரிவுகளில் பேசுகின்ற இலக்கண நூலான தொல்காப்பியம் தொகுப்பு நூலே. (தொல்காப்பியச் சுரங்கம் - உ.சண்முகநாதன்: 54)
‘தமிழ் இலக்கியக் கோட்பாட்டுத் தந்தை’யான தொல்காப்பியர், கைக்கிளைக்கும், பெருந்திணைக்கும், முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் குறிப்பிடாமல் சென்றது ஆராய்ச்சிக்குரியதாகும். (தொல்காப்பியச் சுரங்கம் - உ.சண்முகநாதன்: 40)
எழுத்ததிகாரம் (483 நூற்பாக்களைக் கொண்டது)
	சொல்லதிகாரம் (463 நூற்பாக்களைக் கொண்டது)
	பொருளதிகாரம் (664 நூற்பாக்களைக் கொண்டது)
(தொல்காப்பியச் சுரங்கம் - உ.சண்முகநாதன்: 57)
இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினையர், பேராசிரியர் தெய்வச்சிலையார், கல்லாடர் என்னும் அறுவர் தொல்காப்பியத்திற்கு உரைவகுத்திட்ட பேரறிவாளர்களாவர். தொல்காப்பியத் தமிழைப் பரப்பிய மூலவர்கள் இவர்களே. (தொல்காப்பியச் சுரங்கம் - உ.சண்முகநாதன்: 65)
இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினையர், பேராசிரியர் தெய்வச்சிலையார், கல்லாடர் என்னும் அறுவர் தொல்காப்பியத்திற்கு உரைவகுத்திட்ட பேரறிவாளர்களாவர். தொல்காப்பியத் தமிழைப் பரப்பிய மூலவர்கள் இவர்களே. (தொல்காப்பியச் சுரங்கம் - உ.சண்முகநாதன்: 65)
ஒல்காப் புகழ் வாய்ந்த தொல்காப்பியம் பாண்டிய மன்னன் அவையில் அதங்கோட்டாசான் முன்னிலையில் சான்றோர்கள் அவையில் அரங்கேற்றப்பட்டதாகத் தொல்காப்பியப் பாயிரச் செய்தி குறிப்பிடுகிறது. அவ்வகையில் தொல்காப்பியத்தை முதலில் வாசித்த பெருமை பனம்பாரனரைச் சாரும். (தொல்காப்பியச் சுரங்கம் - உ.சண்முகநாதன்: 81,82)	
	தமிழுக்கு மிக உயர்ந்த இலக்கணத்தை வகுத்துத் தந்தவர் தொல்காப்பியர். தொல்காப்பியர் காலத்தை வரையறுப்பதற்காகச் செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனம் ஒரு குழு அமைத்தது. அக்குழுவினர் தொல்காப்பியர் பிறந்த ஆண்டு கி.மு. 711 என்றும், அவருடைய பிறந்த நாள் மேழ வெள்ளுவா (சித்திரை பவுர்ணமி நாள்) என்றும் வரையறுத்தனர். அதன்படி இந்த ஆண்டு ஏப்ரல் 29-ம் நாள் தொல்காப்பியர் பிறந்த நாளாகக் கருதப்படுகிறது. தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருந்தொண்டாற்றிய சிறந்த தலைவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவது இயல்பான நிகழ்ச்சி. சங்க காலத்தில் மன்னன் பிறந்த நாளைப் பெருமங்கல நாள் என்றும் பொதுவாகப் பிறந்த நாளை வெள்ளணி நாள் என்றும் குறிப்பிட்டனர். (தொல்காப்பியம் இந்திய மொழிகளின் வழிகாட்டி - பேராசிரியர் இரா.மதிவாணன் ) 

கம்பன்:
	அண்மைக் காலமாய் ஒரு குரல் வடக்கிலிருந்து கேட்கிறது: இராமன் உள்ளவரை இந்துமதம் இருக்கும்; எனவே இராமனைக் காப்பாற்றுங்கள். இந்துமதம் உள்ளவரை இராமன் இருப்பான்; எனவே இந்துமதத்தைக் காப்பாற்றுங்கள்.
	தெற்கிலிருந்து ஒரு மாற்றுகரல் கேட்கிறது: தமிழ் உள்ளவரை கம்பன் இருப்பான்; எனவே தமிழைக் காப்பாற்றுங்கள் கம்பன் உள்ளவரை தமிழ் இருக்கும்; எனவே கம்பனைக் காப்பாற்றுங்கள்.

உ.வே.சாமிநாதையர் (உ.வே.சா):
	உத்தமதானபுரம் உ.வே.சாவின் சொந்த ஊராயினும் அவர் பிறந்த கிராமம் ‘சூரியமூலை’. அவரை எப்படிப் பாடிப பரவுது?
சூரியமூலையில் பிறந்த ஆரிய மூளையே!
உமக்கு எம் திராவிட வணக்கம்.
	
பாரதிதாசன்:
	பாவேந்தர் அரசியல் அறிந்தவர்; தேர்தலிலும் வென்றவர் ஆனால் அரசியலில் அவர் கரைந்துபோகவில்லை. பெருங்கவிஞர்கள் யாரும் அரசியலை வென்றெடுத்ததில்லை. காரணம் கவிதை என்பது மறைத்ததைப் புலப்படுத்துவது. அரசியல் என்பது பெரும்பாலும் புலப்பட்டதை மறைப்பது. பாவேந்தர் மறைக்கக் கற்றுக்கொள்ளவில்லை.

இளங்கோவடிகள்:
	தமிழர்களின் ஒருமைப்பாட்டுக் காப்பியம் என்று உயர்த்திப் பிடிக்கலாம் சேரன் தம்பி இசைத்த சிலம்பை. கண்ணகி சிலைக்குக் கல்லெடுக்க வடதிசைப் போருக்கு முனையும்போது அந்தப் பெருமையைச் சேரன் செங்குட்டுவன் தன் ஒரு குலத்துக்கு மட்டும் உரித்தாக்கினானில்லை. மூவேந்தரின் முச்சின்னமும் பொறித்து வடபுலத்தரசருக்கு விடுக என்கிறான் சேரன் படைத்தலைவன் வில்லவன் கோதை.
	இந்நூற்றாண்டுத் தமிழர்க்கும் இதில் ஒரு பாடமுளது.
	இந்நாள் தமிழர்களும் உயர்ந்தோர் - தாழ்ந்தோர் என்ற வருணாசிரமம் கடந்து, மதங்கள் - கட்சிகள் என்ற மாச்சரியம் மடிந்து, முதுலியார் - கவுண்டர் - நாடார் - தேவர் - பிள்ளை - நாயக்கர் என்ற சாதி பேதம் அழிந்து தமிழர் என்ற ஒற்றை அடையாளத்தை உயர்த்திப் பிடித்தால் உலகமயமாதல் என்ற பெரும்போரிலும் நாமே வெல்வோம்; வெல்ல வேண்டும்.

விமர்சனம்:
	உயர்திணைக்கு உதாரணம் சொல்ல வந்த தொல்காப்பியர், தேவர், நரகர் என இன வேறுபாடு காட்டியிருப்பதும் ஐந்திணைகளுக்கும் கருப்பொருளாக உயர்ந்தோர், தாழ்ந்தோர் என பாகுபாடு காட்டியிருப்பதும், எண்ணத்தக்கதாகும். மேலும் ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன (தொல்.கிளவி-20) என்கிறார். “பெருமையும் உரணும் ஆடு உமென” (தொல்.கிளவி-95) என ஆணினின் பெருமை பேசிய அதே வேளையில், ‘அச்சமும் நாணும் மடமும் முந்துறுதல் மிச்சமும் பெண் பாற்கு உரியன என்ப’ (தொல்.கிளவி-96) எனப் பெண்ணைச் சிறுமைப் படுத்துகிறார்.
	“அடியார் பாங்கினும் விளைவலர் பாங்கிணும்” (தொல்.கிளவி-25) எனும் புறத்திணை பொருளுக்குரிய நூற்பாவுக்கு விளக்கம் கூறவந்த இளம்பூரணர், ஒரு பிரிவு மக்களை தொழிலினடிப்படையில் இழிபிரிவினராக்கி பொருந்தாக் காமத்தைக் கூறும் புறத்திணைகளுக் குரியவர்களாக்கி இருப்பதை மனித நேயமுள்ள எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாததே. இப்படி, இன, வர்ண, சாதிய, பாலின வேறுபாட்டை வளர்க்கும் சில பாடல்கள் தமிழிலக்கியங்களில் உள்ளன. (தமிழ் காட்டுமிராண்டி மொழியா..? - முகிலன் (வாங்க பேசலாம் - ஏப்ரல் 2018)
சங்கப்பாடல்களைப் பயிலும் போது இது இன்ன திணைக்குரிய பாடல் என்பதை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் போன்றவற்றை முறையே நோக்கிப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு நிலத்திற்கான முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் போன்றவையே திணைக் கோட்பாட்டிற்கான காரணியாக அமைந்துள்ளமையை அறிய முடிகிறது. “அக்காலத்தில் திணைப்பாடல்கள் வட்டாரப் பாடல்களாகத் திணை தோறும் வழங்கிவந்தன. நிலமே அதன் அடிப்படைப் பாகுபாட்டிற்குக் காரணமாகும் (தொல்.959) நூற்பாக்களால் நிலவழிச் சார்ந்த திணைப் பாங்கினை உணரலாம்” என்னும் தமிழறிஞர் தமிழண்ணல். (தொல்காப்பியச் சுரங்கம் - உ.சண்முகநாதன்: 42)
	‘படைப்பு-படிப்பு எனும் இரு தளத்தைப் பிரதிபலிக்கின்ற நோக்கு எனும் உலகளாவிய, உயரிய கோட்பாட்டைத் தமிழில் தொல்காப்பியர் சொல்லிச் சென்றது தமிழுக்கும் தமிழினத்துக்கும் பெருமையாகும்’ (தொல்காப்பியச் சுரங்கம் - உ.சண்முகநாதன்: 07)
	அரிஸ்டாட்டிலுக்கு இணையாகத் ‘தொல்காப்பியர் கவிதையியலுக்கு’ சிறப்புச் சேர்க்கும் நோக்குக் கோட்பாட்டை தொல்காப்பியர் மட்டுமே கூறும் செய்யுள் உறுப்பு நோக்கு; தமிழ் மொழிக்கே உரியது. தமிழ்த்திறனாய்விற்கு வழிவகுத்துக் கொடுப்பதுl; அடியின் சிறப்பே பாட்டெனப்படுமே என்று ஒவ்வோர் அடியின் அர்த்தப் புலப்பாட்டிற்கு அழகூட்டுவது.
	நோக்கியல் திறனாய்வைச் செம்மைப்படுத்திக் காட்டுகிறது. அத்துடன் படைப்பாளி படிப்பாளி என்ற நோக்கு இன்றைய வாசிப்புக் கோட்பாட்டைத் தொட்டுக் காட்டுகிறது. (தொல்காப்பியச் சுரங்கம் - உ.சண்முகநாதன்: 09-11)
	இது உலக இலக்கியக் கொள்கையுடன் ஒப்புநோக்கவுள்ள “தமிழ்முறைத் திறனாய்வு”. (தொல்காப்பியச் சுரங்கம் - உ.சண்முகநாதன்: 17)
மேலை நாட்டாரின் கொள்கைகளைக் கொண்டு நம் இலக்கியத்தை ஆராய்வதை விட, தமிழ் இலக்கியக் கொள்கைகளான உவமை, உள்ளுறை, இறைச்சி, மெய்ப்பாடு, நோக்கு, முன்னம் போன்றவற்றைக் கொண்டு ஆராய்ந்தால் தமிழ் ஆராய்ச்சியில் புது வெளிச்சம் பிறக்கும் என்பார் இரா.மோகன். (தொல்காப்பியச் சுரங்கம் - உ.சண்முகநாதன்: 28)
தொல்காப்பியருக்கு முன்பே ஐந்திரனார் தமிழுக்கு ஐந்திரம் என்னும் இலக்கண நூல் எழுதினார். பிராகிருத மொழியின் காதந்திர இலக்கணமும் பாலி மொழியின் கச்சாயண இலக்கணமும் திபெத்திய மொழியின் சன்சுப இலக்கணமும் தாம் ஐந்திர இலக்கணத்தைப் பின்பற்றியதாகக் கூறுகின்றன. ஆதலால் ஐந்திர இலக்கணம் இந்திய மொழிகள் அனைத்துக்கும் ஆரியமொழிக் கலப்புக்கு முன்பு பொது இலக்கண நூலாகத் திகழ்ந்தது. என்னும் உண்மை உறுதிப்படுகிறது. அதன் வழிவந்த தொல்காப்பிய இலக்கணக்கூறுகள் திராவிட மொழிகளில் மட்டுமல்லாமல் பிற இந்திய மொழிகளிலும் ஊடாடியுள்ளன.
‘போல’ என்று பொருள்படும் சிவணுதல் என்னும் சொல்லை தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். இச்சொல் குச்சர (குஜராத்தி) மொழியில் ஜேவுண் என்று வழங்கிவருகிறது. செல்லிய, உண்ணிய என்பவை செல்லுங்கள் உண்ணுங்கள் என்னும் பொருளில் சங்க காலத்தில் வழங்கிய செந்தமிழ்ச் சொல்லாட்சிகள், கன்னட மொழியில் உண்ணிய என்றும் இந்தியில் செலிய என்றும் தொல்காப்பியர் வகுத்த இலக்கணப்படியே இன்றும் வழங்கி வருகின்றன.
	இப்பொழுதுள்ள ‘ஐ’ பல்லவர் காலத்தில் வடிவமைக்கப்பட்ட கிரந்த எழுத்தின் வடிவமாகும். தொல்காப்பியர் காலத்தில் ‘ஐ’ என்பதை ‘அஇ’ என இரண்டு உயிர்க்குறில் எழுத்துகளாக எழுதினர். இதனை தொல்காப்பியர் ‘அகர இகரம் ஐகாரமாகும்’ என எழுத்ததிகாரத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
இன்றும் இந்தி மொழியில் அகர இகரம் சேர்த்து ஐகாரம் எழுதப்படுகிறது. சென்னை என்பதை இந்தியில் ‘சென்னஇ’ என்று எழுதுகிறார்கள்.
எனவே தொல்காப்பியம் இந்திய மொழிகளின் இலக்கண நூல்களுக்கு முதல் நூலாகவும், வழிகாட்டி நூலாகவும் அமைந்துள்ளது. தொல்காப்பியம் தேசிய ஒருமைப்பாட்டுக்கு வித்தாகும்; விளைச்சலுமாகும். அந்நாள் வரின் அது தமிழர்கள் மட்டுமல்லாமல் இந்திய மக்கள் அனைவரும் கொண்டாடும் நாளாக மலரும் என உறுதியாக நம்பலாம். (தொல்காப்பியம் இந்திய மொழிகளின் வழிகாட்டி - பேராசிரியர் இரா.மதிவாணன் )
	ஒரு மொழிக்கு இலக்கணம் கூறப்புகும் ஆசிரியன், வழக்கிலும் செய்யுளிலும் அம்மொழி நடைபெற்று வளரும் திறத்தினை ஆய்ந்துணர்தல் வேண்டும். வழக்காவது, கற்றார் கல்லாதவர் என்ற வேறுபாடின்றி எல்லா மக்களும் பொருளுணர்ந்து பேசுமாறு எளிய சொற்களாலாகிய மொழிநடை;
	செய்யுளாவது, மேற்கூறிய வழக்கியல் மொழியினை அடிப்படையாகக்கொண்டு உணர்வினில் வல்ல புலவன் ஒருவன் திருந்திய சொற்களால் சீர்வகை யமையத் தான் கருதிய பொருளைத் திட்பநுட்பம் செறியச் சுவைபெறப் பாடும் சொன்னடையாகும். இதனைத் தொல்காப்பியர் ‘செய்யுள் மொழி’ என்பர். (தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை - சுப்பு ரெட்டியார்: 3) 
	சாவிலும் நான் திருக்குறளைச் சார்ந்திருக்க வேண்டும். என் வாழ்வின் நிறைவிற்குப் பிறகு என் தாய்மண்ணின் இரண்டாம் கருக்குழியில் நான் கிடத்தப்படும்போது என் நெஞ்சில் திருக்குறளை வைத்து, என் இரு கைகளையும் அதை அணைத்துக் கொள்ளுமாறு இணைத்துவிடுங்கள். இதுஎன்ன மூடநம்பிக்கை என்று சிலபேர் எள்ளலாம். இது 63 வயதில் நான் எழுதிய உயில் என்றும் கொள்ளலாம். 
	“தமிழ் இலக்கண மரபில் தொல்காப்பியத்திற்கு அடுத்த நிலையில் எத்தனையோ தமிழ் இலக்கண நூல்கள் தோன்றிய போதும் ஆலமரமாய் புதுமைக்குப் புதுமையாய்; பழமைக்குப் பழமையாய் நிலைத்து நிற்பதைப் புரிந்து கொள்ளமுடிகிறது. நன்னூல் தோன்றியதால் தொல்காப்பியம் வழக்கற்றுப் போகவில்லை என்னும் அறிஞர் சி.இலக்குவனாரின் கூற்று. (தொல்காப்பியச் சுரங்கம் - உ.சண்முகநாதன்: 57)
	ஒருவேளை இந்த உலகில் புத்தகம் படிப்பது தடை செய்யப்பட்டுவிட்டால் என்ன நடக்கும் என்பதை ரே பிராட்பரி ‘பாரன்ஹீட் 451’ என்ற நாவலாக எழுதியிருப்பார். அதில் ஒவ்வொரு மனிதனும் தனக்குப் பிடித்தமான ஒரு புத்தகத்தை மனப்பாடம் செய்து மனதில் நிறுத்திக்கொண்டு, தானே நடமாடும் புத்தகமாக மாறிவிவான். புத்தகங்களின் சிறப்பைச் சொல்வதற்கு இதற்கு நிகரான நாவலை நான் வாசித்ததே இல்லை.
	ஜப்பானின் பிரபல எழுத்தாளர் ஹருகி முரகாமி, கார்டியன் இதழில் ‘எவ்வளவு காலத்துக்கு இலக்கியம் வாசிக்கப்படும்’ என்ற கேள்விக்கு பதில் தந்திருக்கிறார்.
	‘உலகம் முழுவதும் 5 சதவீதம் பேரே தீவிரமாகப் புத்தகம் படிப்பவர்கள். அவர்கள் டி.வி-யில் உலகப் கோப்பைப் போட்டிகளோ, பொழுது போக்கு நிகழ்ச்சிளோ எது நடந்தாலும் புத்தகம் படித்துக் கொண்டே இருப்பார்கள். புத்தகம் படிப்பதே தடைசெய்யப்பட்டால் கூட அவர்கள் காட்டுக்குள் சென்று நாங்கள் படித்த புத்தகங்களை நினைவு கொண்டபடியே இருப்பாகர்கள். அவர்கள் மீது நம்பிக்கை வைத்தே நான் எழுதுகிறேன்’ என்று கூறுகிறார்.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *