திமுக இளைஞர் எழுச்சி நாள் கூட்டம் – YMCA நந்தனம் – 01.03.2017

தமிழ் இலக்கிய உலகிலே தமிழிலே பெயர் பெற்றிருந்த மூன்று மீசைகள் உண்டு.  ஒன்று ரசிகமணி மீசை, அதுவும் தமிழுக்காக கொஞ்சம் தொங்கி தாழ்ந்துதான் இருக்கும்.  அடுத்தது மா.பொ.சி மீசை, அதுவும் தமிழைச் சுமப்பதற்காக சற்று தொய்ந்துதான் இருக்கும். தமிழுக்காக கூட தொய்யாமல் எப்போதும் உயர்த்தியே இருக்கின்ற, தமிழுக்காகவே வாழ்ந்த ஒரே ஒரு மீசை எங்களுடைய ஊர்க்காரர், எங்களுடைய குடும்பத்திலே ஒருவரான நக்கீரன் கோபால் அவர்களுடைய மீசைதான்.
``தொட்டால் சிந்தனை சுரக்கும் ஈரோட்டுப்
பட்டறை தந்த கட்டிப் பிளாட்டினம்!
பகுத்தறிவு என்னும் காஞ்சிப் பாசறை விட்டே
பகைவரை விரட்டிட துள்ளி எழுந்தவேல்!
தமிழாய்ந்த எம் தனிப்பெரும் தலைவா.....
நீங்கள் அன்று தமிழுக்காகத் தலைவைத்த தண்டவாளத்தில்தான்
இன்று வரை திராவிட இரயில் சீராக ஓடிக் கொண்டிருக்கிறது''
உயிர்மூச்சே! உங்களுக்கு என் முதல் வணக்கம்.
``ஓர் இலட்சிய வீரனின் ரத்தம், உலகப்புகழ் பெற்ற எழுத்தாளனின் எழுத்தைவிட வன்மையானது'' என்பது போல், இலட்சிய உத்வேகத்துடன், ``நீங்கள் விரும்புகின்ற உலகத்தின் எந்தப் பகுதிக்கும் எங்களை அழைத்துச் செல்லுங்கள்'' என்று Alexander பின்னே அணிதிரண்ட மாசிடேனிய வீரர்கள் போல, அணிவகுக்கின்ற நம் கழகத்து இளைஞர்களை விடிவெள்ளியாய் வழி நடத்துகின்ற தளபதி, `இலியாட்' எனும் பெருங்காப்பியத் தலைவன் Achilessற்கு ஒப்பாக, தமிழகத்தை வழிநடத்துகின்ற நம் தளபதி.
	`கல்லடியா கவலைப்படமாட்டார்!
	சொல்லடியா சோர்வடையமாட்டார்!
	பகைவரின் படையா பயப்படமாட்டார்! - மா.சு
கழகமே மூச்சு, மனித நேய வீச்சு, பாசப்பிணைப்பு, பெரு நட்பின். 
"அர்னால்டின் ஒவியங்கள்  வரையப்பட்ட பின்  ஐரோப்பாவின் மலைக் காட்சிகள்  மேலும்  அழகு பெற்றுத்  திகழ்கின்றன" என கார்க்கி சொன்னது போல, பெரியாரும், பேரறிஞரும்,  இன்றைக்கு  வாழ்ந்து  கொண்டிருக்கிற  வரலாறாய்  நம் தலைவரும், வந்த பின்பே நம் திராவிடத்  தென் தமிழ்நாட்டின்  வரைபடம்  திருத்தமுறத் தெரிந்தது உலகிற்கு. - அதுபோலச் செயல் தலைவர்  
	"யார் யார் சனாதனக் கோட்பாடுகளைத் தகர்த்தெறிய வேண்டுமென்று  கருதுகிறார்களோ, யார், யார் மக்கள் உள்ளத்தில் படிந்துள்ள மாசுகளைத் துடைத்துச்  சீர்திருத்த வேண்டும் என்று   நினைக்கிறார்களோ அவர்களெல்லாம் திராவிடர்கள்"  என்று அறிவித்த பேரறிஞர் அண்ணா. - காலில் விழவேண்டாம், சால்வைகள் வேண்டாம்
கார்டினல் நியூமன்  எனும்  ஆங்கிலப்  பேராசிரியர், ரோம் நாட்டுப் புகழ்மிக்க பேச்சாளராக  சிசரோவைப் பற்றிக் குறிப்பிடும் போது,  "லிவி, டாசிடெட், செனக்கா, பிளினி, குவின்டியலியன் போன்றவர்களின் எழுத்துக்களிலே லத்தின் மொழியைத்தான்  காண்கிறேன். ஆனால், சிசரோவின் எழுத்துக்களில், பேச்சில் ரோம் நாட்டு மக்களையே  காண்கிறேன்"  என்று  கூறியுள்ளார் - 1961 இல் அண்ணன் நேருவின் முன்
	மார்க்ஸ், எங்கெல்ஸின் கடிதங்களுக்கு இணையான தரம் ஜெர்மனியில் புகழ்பெற்ற கவிஞன் ஹென்றி ஹைனேவின் கவிதைகளில் கூட இல்லை என்று வரலாறு சொல்கிறது.  அது போலவே, பேரறிஞர் 'தம்பிக்கு எழுதிய' மடல்களும், இன்று வரை நமை எழுப்புகின்ற நம் தலைவரது 'உடன் பிறப்பே' எனும் முரசொலி மடல்களும் நமது சகாப்தத்தின் சங்க நாதமாகும். - உங்களில் ஒருவரை பட்டாளத்துச் சிப்பாய்
பூம்புகாரில், இந்திர விழா நடக்கும்போது, ஏன் இந்த அரசியல் விழா என்று அரசியலிலே தலைவர் கலைஞருக்கு எதிராக இருக்கின்றவர்கள் கேள்வி வைக்கின்றார்கள். எதற்கு ஆர்ப்பாட்டமாக இந்த விழா என்று கேட்கிறார்கள். அதற்கு தலைவர் கலைஞர் அவர்கள் பதில் சொல்கின்றார். ``திருவாரூரிலே தேரோட்டம் நடக்கின்றது, அதிலே அரசியல்வாதிகளுக்கு அக்கறை இல்லை, மதுரையிலே மீனாட்சியம்மனுக்கு திருவிழா நடக்கின்றது,  அரசியல்வாதிகளுக்கு அதிலே அக்கறை இல்லை, மைலாப்பூரில் அறுபத்து மூவர் விழா நடக்கின்றது, அதிலே அரசியல்வாதிகளுக்கு அக்கறை இல்லை. ஆனால் இங்கு மட்டும் ஏன் அக்கறை, விமர்சனம் என்றால், இது பக்தி திருவிழா அல்ல, இது ஆண்டவனுக்கு எடுக்கும் விழா அல்ல, தமிழகத்தை ஆண்டவர்களுக்கு எடுக்கும் விழா'', என்று சொன்னார்.
முதலாளித்துவத்திற்கு எதிரான ஒன்றாக, ரஷ்யா மட்டுமல்ல, உலகமெங்கும்  பாட்டாளியினுடைய கொடி பறக்கவேண்டும் என்று நம்பியவர் ரஷ்யாவின் லெனின். இதே கருத்தைத்தான் தமிழகத்தில் முன்வைத்து, எப்பொழுதும் உழைக்கின்ற மக்களுக்காகவும், அதுகாறும் ஆதிக்கம் செலுத்திய மேல் சாதியினுடைய ஆதிக்கத்தை ஒடுக்கி, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கடைசிவரை, தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதற்குமே சேர்த்து குரல் கொடுத்தவர்தான் பேரறிஞர் அண்ணா. இருவருமே பொருளாதார, மெய்ப்பொருள் சொற்களை உருவாக்கி புதிதாக அதனை பேச்சு வழக்கிலே கொண்டுவந்தவர்கள். இருவருமே இளமைக் காலத்திலே பாடத்தை ஒழுங்காகப் படித்து வகுப்பிலே முதல் மாணவனாக வந்தவர்கள். லெனின் எப்பொழுதும் சொல்வார், `நமது ஆயுதம், அறிவு, ஆற்றல் என்பதுதான்'. அண்ணாவும் நம்மிடத்தே எப்பொழுதும், குறிப்பாக இளைஞர்களிடத்தில் அறிவையும், அது தருகின்ற ஆயுதத்தையுமே வலியுறுத்திப் பேசியவர். - கலைஞர், தளபதி
 "எது முறையோ, அதன் வழி நடவுங்கள்,
அறிவிற்கு ஒத்ததைக் கொள்ளுங்கள்,
எதிர்ப்பிற்கு அஞ்சாதீர்கள்,
மதத்தின் முன் மண்டியிடாதீர்கள்,
மானமே மனிதனை மனிதனாக்குகிறது''
என முழங்கிய அண்ணாவின்...
அண்ணாவினுடைய அரசியல் முன்னோடி, தத்தவ முன்னோடிகள் பலர் இருந்தாலும், சிந்தனாபூர்வமாக - இனவழிச் சிந்தனை, நிலவழிச் சிந்தனை, பொருளாதாரச் சிந்தனை ஆகிய மூன்றிற்கும் அவர் தன்னுடைய முன்னோடியாக எடுத்துக்கொண்டது ஹெரால்ட் லாஸ்கி என்கின்ற இங்கிலாந்து நாட்டு அரசியல் நிபுணருடைய புத்தகங்களையும், அவருடைய கருத்துக்களையும்தான். இங்கிலாந்து நாட்டின் தொழிற்சங்கத் தலைவராக இருந்த லாஸ்கி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும், யேல் பல்கலைக்கழகத்திலும் பணிபுரிந்த மிகச் சிறப்பிற்குரிய ஒரு பேராசிரியர். அவருடைய தனிச்சிறப்பு என்னவென்றால் - வரிசைக்கிரமமாக, தர்க்கரீதியாகக் கருத்துக்களைத் தொகுத்துக்கொண்டு, பின்னர் எதிராளியை எதிர்கொள்வது என்பதாகும். அண்ணாவும் தன்னுடைய பேச்சு நடையிலும், உரைநடையிலும் இந்த ஒரு கருத்தாக்க முறையையே பயன்படுத்தினார்.
மிக முக்கியமாக அவர் ஹெரால்ட் லாஸ்கியிடமிருந்து எடுத்துக்கொண்ட கருத்து ``சமத்துவம் என்பது எல்லோரையும் ஒரே விதமாக நடத்துவது அல்ல, எல்லோருக்கும் சம வாய்ப்பு தருவதாகும்.  Equality is not identity of treatment, but affording equal opportunity for all" என்பதுதான். சமூக நீதிக்கான முதல் வித்தாக.
'இந்தியாவின்' சுயராச்சியம் என் பிறப்புரிமை என்று முழுங்கியவரும்.   காங்கிரசின் தீவிரவாதப் பிரிவின் தலைவராகத் திகழ்ந்தவருமான திலகர் 'கேசரி' (சிங்கம்) என்ற இதழை நடத்திவந்தார்.  அம்பேத்கர் தொடங்கிய மூக்நாயக் (ஊமையர்களின் தலைவன்) என்ற இதழுக்கான விளம்பரத்தை, அதற்குரிய கட்டணத்தைச் செலுத்தி வெளியிடுமாறு வேண்டியபோது, திலகர் மூக்நாயக்கின் விளம்பரத்தைக் கூட வெளியிட மறுத்து விட்டார்.  இந்த நிகழ்ச்சியோடு இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் நடத்திய பறையன் இதழுக்கு ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சியையும் ஒப்பிட்டால் அப்போது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இருந்த 'நிலைமை' எப்படிப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ளமுடியும்.
	பறையன் ஏடு தொடங்கப்பட்டு முதல் இதழ் திறனாய்விற்காகச் சுதேசமித்திரன் பத்திரிக்கைக்கு அனுப்பிவைப்பட்டது.  அப்போது அதன் பத்திரிகை ஆசிரியராக சி.ஆர்.நரசிம்மன் இருந்தார்.  அவரது மேசைமேல் திறனாய்விற்கு அனுப்பப்பட்டிருந்த பறையன் இதழ் இருந்தது.  அதனை அவர் கையில் எடுத்துப் பார்க்காமல் தொட்டு எழுதும் கட்டைப் பேனாவைக் குச்சிபோலப் பிடித்து அதனைக் கொண்டு அப்பத்திரிக்கையைப் புரட்டிப் பார்த்தாராம்.
	இதே சுதேசமித்திரன் தான், அம்பேத்கர் 1935 வாக்கில் மதம் மாற உள்ள தம் விருப்பத்தை முதன் முதலாக வெளிப்படுத்தியபோது 'மூக்குமயிர் போனால் ஆள்பாரம் குறைந்து விடுமா?' என வினாத் தொடுத்தது.
	பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்களாகவே இருந்ததால், மாணவர்களிடையே அவர்கள் எவ்வாறு நடந்து கொண்டனர் என்பதை ஒரு நிகழ்ச்சியின் வாயிலாக எடுத்துக்காட்டுவார் தனஞ்செய்கீர்.  பள்ளிக்கு ஆய்வாளராகச் சென்ற அதிகாரி, வகுப்பறையில் குச்சிகளும் சில மண்கட்டிகளும் வைத்திருந்ததைப் பார்த்து ‘இவற்றை இங்கே வைத்திருப்பதற்கான காரணம் யாது' எனக் கேட்க வகுப்பாசிரியரான, பார்ப்பனப் பண்டிதர்,
சாதி இந்துக்களைக் கண்டிக்கும் போது நான்
	இந்தக் குச்சியைப் பயன்படுத்துவேன்.  இதே
	குச்சியின் மூலம் தீட்டு என்னைத் தாக்கிவிடுமே,
	அதனால் என் உடம்பு முழுதும் தீட்டாகி
	விடுமே.  அதனால்தான், ஒரு மகார் மாணவன்
	சரியான விடைகளைச் சொல்லாதபோது 
	அவன் மீது வீசி எறிவதற்காக இந்த மண்
	கட்டிகளை வைத்திருக்கின்றேன்.
என விடையளித்தார்.
	1952 ஜூன் 29இல் திருவான்மியூர் (சென்னை) சலவைத் தொழிலாளர் மாநாட்டில் பேசிய இராசகோபாலாச்சாரியார்,
எல்லோரும் படித்துவிட்டால் வேலை எங்கிருந்து கிடைக்கும்?
அவரவர்
குலத் தொழிலை அவரவர் செய்ய வேண்டும்
என்று பேசினார்.  இந்தப் பேச்சின் செயல்வடிவமாக ஒரு புதிய கல்வித் திட்டத்தையும் ஆச்சாரியார் புகுத்தினார்.  அதுதான் குலக்கல் வித் திட்டம் என்று அழைக்கப்பட்ட புதிய வருணாசிரமத் திட்டமாகும்.
	"உ-127'' என்ற இலக்கமிட்ட ரயில்வே எஞ்சினை ரஷ்ய உள்நாட்டுப் புரட்சிப் போரின்போது செஞ்சேனை வீரர்களும், கொரில்லா வீரர்களும் அறிந்திருந்தார்கள்.  சோர்வில்லாமல் உழைத்து, வெண்படையின் குண்டுகளால் துளைக்கப்பட்டு பழுதுபட்ட அந்த எஞ்சினை, சோவியத் மக்கள் நினைவுகூர்ந்து, செப்பனிட்டுப் புதிதாக்கி, கம்யூனிஸ்டுகளுக்குப் பரிசளித்தார்கள். லெனின் அதன் கௌரவ டிரைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
	ஹானர்களின் மன்னராக லியுபாங் முடிசூட்டிக்கொண்டவுடன் தன் தளபதிகளில் ஒருவருடன் தளபதிகளின் ஆற்றல் பற்றி விவாதித்தார். 'என்னைப் போன்றவர்கள் எத்தனை சிப்பாய்களுக்கு தலைமையேற்க முடியும்? என்று மன்னர் கேட்டார். 'மேன்மை தாங்கிய பிரபுவே! நீங்கள் ஒரு லட்சம் சிப்பாய்களுக்கு மட்டுமே தலைமை ஏற்க முடியும்' என்றார் அவர். மன்னர் மறுபடியும் 'நீங்கள் எத்தனை பேரை வழிநடத்த முடியும்?' அதற்கு அந்த தளபதி, 'என்னைப் போன்றவர்களுக்கு இன்னும் சற்று கூடுதலாக சிப்பாய்கள் இருந்தால் நல்லது' என்றார். 
	'என்னைவிட அதிகமானவர்களை நீங்கள் வழிநடத்த முடியுமென்றால் நீங்கள் ஏன் என் தலைமையின் கீழ் பணியாற்ற வேண்டும்?' என்று சிரித்துக்கொண்டு மன்னர் லியுபாங் கேட்டார். அதற்குத் தளபதி, 'உங்கள் கம்பீரம் சிப்பாய்களுக்கு கட்டளையிடுவதில் இல்லை, எங்களைப் போன்ற தளபதிகளுக்கு ஆணையிடுவதில் இருக்கிறது. அதனால்தான் நாங்கள் உங்கள் குடிமக்களாக வாழ்கிறோம்' என்று விடையளித்தார். மன்னருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. எதிரிநாட்டைத் தாக்க அவர் கேட்ட துருப்புகளைக் கொடுத்தனுப்பினார்.
	வழக்கமான சிந்தனைகளுக்குள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்கு அராபிய சம்பவம் ஒன்று சான்று.  துருக்கியரக்ளுடைய பலம் உலக உச்சத்திலிருந்தபோது, துருக்கியின் சுல்தான் ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு விஜயம் செய்ய எண்ணினார்.  அவருடைய திட்டத்தைக் கேட்ட வசீர் அதிர்ச்சி அடைந்தார்.
	'பிரபுவே! தங்கள் பயணம் சர்வதேச உறவுகளைச் சிக்கலாக்கி விடும்' என்றார் தலையைச் சொறிந்தார்.
	'ஏன்'? என்றார் சுல்தான்
	'நம் நாட்டுப் பாரம்பரியப் பழக்கபடி, துருக்கியின் சுல்தான் எந்த மண்ணை மிதித்தாலும் அது துருக்கிய சாம்ராஜ்யத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிட வேண்டும்.  இதனால் எல்லைப் பிரச்சினையும், போரும் ஏற்பட வாய்புகள் உண்டு' என்று சொன்னார்.  ஆனால், 'நான் கட்டாயம் போகத்தான் வேண்டும்' என்று கறாராகச் சொல்லி சுல்தான் சென்று விட்டார்.
	மந்திரி பலரையும் இது குறித்துக் கலந்தாலோசித்தார்.  பதவியில் இருப்பவர்களிடமிருந்து பயனுள்ள ஆலோசனை வரவில்லை.  ஆனால் மெத்தக் கற்ற ஞானமுள்ள ஒரு பெரியவர், 'நம் விதியை மாற்ற முடியாது.  நீங்கள் சுல்தானுடைய காலணியில் இரண்டு அடுக்கு வைத்துத் தைக்க ஏற்பாடு செய்யுங்கள்.  அவற்றின் இடையே நம் நாட்டு மண்ணை நிரப்புங்கள்.  எனவே எத்தனை வெளிநாடுகள் சென்றாலும், அவர் துருக்கிய மண்ணையே மிதிப்பார்.  இதனால் எந்தப் பிரச்சனையும் வராது' என்று ஆலோசனை சொன்னார்.  அது நடந்தேறியது.  எந்தச் சிக்கலும் எழவில்லை.
	தமிழினம் உலகிலேயே மிகக் குறைவான மூட நம்பிக்கை கொண்ட இனமென்று கால்டுவெல் பாராட்டி உள்ளார். ஆனால் ஒரு சம்பவம் - உங்களோடு பகிரவிரும்புகிறேன். திருமதி சண்பகம் துரைசாமி (சில ஆவணங்களில் சண்பகம் துரைராசன் என்று காணப்படுகிறது) என்னும் பார்ப்பனப் பெண் கணவனை இழந்தவர். பி.ஏ. பட்டம் பெற்று சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் (அப்போது அவருக்கு வயது 37க்குள் இருக்கலாம். கல்லூரியில் சேர முடியாத வயது), மருத்துவ கல்லூரிக்கு விண்ணப்பித்திருந்ததாகவும், தமக்கு தகுதி இருந்தும், தமிழ்நாடு அரசு பின்பற்றி வரும் இடஒதுக்கீட்டின் காரணமாகத் தமக்கு இடம் கிடைக்காமல் போய்விட்டது என்றும், எனவே இட ஒதுக்கீடு, மாணவர்களின் தகுதி திறமையைப் புறக்கணிக்கிகறது என்றும், தனக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க வகுப்பு வாரி உரிமை தடையாக இருக்கக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். 
	திருமதி சண்பகம் துரைசாமியைப் போலவே சி.ஆர். சீனிவாசன் என்னும் பார்ப்பனரும் பொறியற் கல்லூரியில் சேர விண்ணப்பத்திருந்தும் தான் ஒரு பார்ப்பனராக இருப்பதால் தமக்கு இடம் மறுக்கப்பட்டது என்றும் எனவே இடஒதுக்கீடு கூடாது என்றும் வழக்குத் தொடுத்தார். திருமதி சண்பகம் துரைசாமிக்காக வாதாடிய வழக்கறிஞர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் என்பவர். இவர் இந்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரலும், இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்களுள் ஒருவரும் ஆவார். சீனிவாசன் தரப்பில் வாதாடியவர் நீதிபதியாக இருந்து ஒய்வு பெற்ற வி.வி. சீனிவாச அய்யங்கார் என்பவர். 
	சமூக நீதிக்கு எதிராக வாதாடிய அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரை, அந்த வழக்கில் அவர் அதி திறமையாக வாதாடியபோதும், 
முதல்தரமான வழக்குறைஞர் (First Grade Lawyer) இரண்டாந்தர அரசியல்வாதி (Second Grade politician) மூன்றாந்தர அரசதந்திரி (Third Grade Statesman). 
எனப் பழம்பெரும் காங்கிரசுக்காரரான திரு. செங்கல்வராயன் வருணித்தார். ஆனால் சமூக நீதி, மதச் சார்பின்மை என்கின்ற இரண்டு தளங்களிலும் மிக உறுதியாக நிற்கின்ற வழக்குறைஞர், நம் மத்திய அமைச்சர்.
 
1. மான்புமிகு சுயமரியாதைக் காரன் - கலைஞர்
2. சென்டிமென்ட் - பேரன் இன்பாவின் சிரித்த முகம் தேர்தல் களம் - தலைவரின் வாழ்த்து.
3. கோபம் அதிகமானால் - தனிப்பட்ட நபர் மீதான கோபத்தைவிட சமூக நீதிக்கான கோபம் அதிகமாக வேண்டும்
4. பாக்கெட்டில் எவ்வளவு பணம் வைத்திருப்பீர்கள்? தேவையான அளவு
5. பிடித்த ஊர் - தலைவரைத் தந்த திருக்குவளையும் அவரை வளர்த்த திருவாரூம்
6. எதைப் பெருமையாக நினைக்கிறீர்கள்? உலகத் தரைவராக இருக்கும் கலைஞரின் மகன் என்பதை விடவும், அவரது தலைமையிலான இயக்கத்தின் தொண்டனாக இருப்பதை.
7. பயப்படும் விழயம் - ஜனநாயகம் - மக்கள்
 
பிற்படுத்தப்பட்டோருக்கான பரிந்துரைகளை வழங்கிய கலேல்கரின் குழுந்தை அறிக்கையைப் பாராளுமன்றத்தில் வைப்பதற்கு முன் வராத நேரு, இட ஒதுக்கீடு குறித்த சுற்றறிக்கை ஒன்றை மாநில அரசுகளுக்கு அனுப்பி வைத்தார்.  அது வருமாறு:-
	தேசிய ஒருமைப்பாடு பற்றிப் பரிசீலிக்க அண்மையில் முதலமைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பொருளாதாரக் காரணங்களாலன்றிச் சாதி அடிப்படையில் உதவி வழங்கப்படக்கூடாது என்று வரையறை செய்யப்பட்டது.  தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பழங்குடியினர், ஆகியோருக்கு உதவி செய்தல் குறித்துச் சில விதிகளுடனும் மரபுகளுடனும் நாம் பிணைக்கப்பட்டிருக்கிறோம் என்பது உண்மைதான்.  அவர்கள் உதவி பெற வேண்டியவர்கள்தாம்.  ஆயினும்கூட நான் எல்லாவகையான இட ஒதுக்கீட்டையும் அதுவும் குறிப்பாகப் பணித்துறையில் (service) இட ஒதுக்கீட்டை விரும்பவில்லை.  திறமைக் குறைவுக்கும் இரண்டாந்தர நிலைகளுக்கும் இட்டுச் செல்லும் அனைத்தையும் நான் கடுமையாக எதிர்க்கிறேன்.  எனது நாடு எல்லாவற்றிலும் ஒரு முதல்தர நாடாக இருப்பதையே நான் விரும்புகிறேன் இரண்டாந்தரத்தை எந்தக் கணத்தில் நாம் ஊக்குவிக்கிறோமோ அக்கணமே நாம் ஒழிந்து விடுவோம்.
	ஆனால் நாம் வகுப்பு மற்றும் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடுகளைச் செய்யப் போனால், புத்திசாலித்தனமும் திறமையும் கொண்டவர்களை மூழ்கடித்து விடுவோம்.  சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது எவ்வளவு தூரம் சென்றிருக்கிறது என்பதை அறிந்து நான் வேதனைப்படுகிறேன்.  பதவி உணர்வும்கூடச் சில சமயங்களில் வகுப்பு அல்லது சாதி அடிப்படையில் தரப்படுகிறது என்பது மட்டுமல்ல, பேரழிவும் ஆகும்.  நாம் எல்லா வழிகளிலும் பிற்பட்ட வகுப்பினருக்கு உதவி செய்வோமாக, ஆனால் ஒரு போதும் திறமையைப் பலிகொடுத்து அல்ல.  இரண்டாந்தர மனிதர்களைக் கொண்டு நமது பொதுத் துறையையோ நாம் எப்படிக் கட்டப்போகிறோம்.
	இக்கடிதத்தை மேற்கொள்ள காட்டி, மண்டலுக்கு எதிரான நெருப்பை மூட்டியவர்களுள் முதலிடத்தில் நின்றவர் செய்தியாளர் அருண்சோரி மேல்சாதியைச் சார்ந்தவர் ஆவார்.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *