கதை பிரபஞ்சத்துத் துளிகள்:

இவை மொழிபெயர்ப்புக் கதைகள் என்பதைத் தாண்டி இந்தக் கதைகளுக்குள்ளாக வேறு எந்த வெளிப்படையான சரடும் இல்லை. ஆனால் உலகின் எழுதப்பட்ட எல்லா கதைகளையும் பிணைத்திருக்கும் அடிப்படையான விஷயமான கதை சொல்லுதலிலும் கதை கேட்டலிலும் உள்ள லயிப்பு இவற்றையும் பிணைத்திருக்கிறது. அதோடு தேச, இன, கலாச்சாரங்களின் தூலமான எல்லைகளைத் தாண்டி பரவி நிற்கும் வாழ்வெனும் பேரனுபவம் உலகின் எல்லா மொழிகளிலும் ஒன்றுபோலத்தான் கதைகளாக எழுதப்படுகிறது என்ற புரிதலும். எழுத்தாளர்கள் தேச இலக்கியங்களைப் படைக்கிறார்கள் மொழிபெயர்ப்பாளர்களோ பிரபஞ்ச இலக்கியங்களைப் நினைத்துப் பார்க்கலாம்.

 

அடுத்து நீங்கள் கேட்க விருப்பது‘ – ஜார்ஜ் சம்னர் ஆஸ்பி:

மதகுருமார்கள் யாரும் இதுபற்றி கருத்து தெரிவிக்க முன்வரவில்லை. ஆங்லிக்கன் பிஷப் ஒருவர் மட்டும் இவ்வாறு சொன்னார்: “அந்தக் குரல் கடவுளுடைய குரலாக இல்லாமல் போனாலும்கூட நாம் மறந்து போன பலவற்றை அது நமக்கு நினைவூட்டுவதாய் இருக்கிறது.” (நீல நாயின் கண்கள்அசதா: 08)

ஈரம் சொட்டச் சொட்ட நனைந்திருக்கிறேனே, தெரியவில்லை.” கோபமாகக் கத்தினார் கர்னல். “சனியன் இந்தக் கடல் நேராக வந்து என் அறைக்குள்ளாகவா பாயும்” என்று அலுத்துக் கொண்டவர் அறிவிப்பாளரை பார்த்துக் கேட்டார். “உங்களிடம் ஒரு டவல் இருக்குமா?”

ஒரு காரேஜ் முதலாளி தன் மெக்கானிக்குகளை அழைத்து பின் வருமாறு சொன்னார். “இனி நம் வாடிக்கையாளர் ஒருவரிடம் டிஸ்ட்ரிபியூட்டர் காயிலுக்காக கட்டணம் வசூலிக்கும்போது உண்மையிலேயே அந்தக காயிலை அவர் வண்டியில் பொருத்துவோம். (நீல நாயின் கண்கள்அசதா: 13)

இந்த பூமி ஒரு பள்ளிக்கூடம். வாழுங்கள், என் இனிய குழந்தைகளே, கற்றுக்கொள்ளுங்கள். இதோ நாம் மறுபடியும் நாம் சந்திக்கும்வரை விடைபெறுகிறேன். குட்பை.” ஏழாவது நாளும் மக்கள் காத்திருந்தனர். ஆனால் அதற்கப்புறம் கடவுள் பேசவில்லை. (நீல நாயின் கண்கள்அசதா: 14)

எமலிக்காக ஒர ரோஜா‘ – வில்லியம் ஃபாக்னர்

எமிலி க்ரையர்ஸன் இறந்தபோது மொத்த நகரமுமே இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டது. (நீல நாயின் கண்கள்அசதா: 25)

கண் உறுத்தல்களுக்க மத்தியில் அமைந்த கண் உறுத்தல். இப்போது எமிலியும் பெருமைமிக்க அப்பெயர்களின் பிரதிநிதிகளோடு சேர்ந்துகொள்ள ஸீடர் மரங்கள் மண்டிக்கிடக்கும் கல்லறைத் தோட்டத்தில் ஜெஃபர்ஸன் சண்டையில் மாண்ட தகுதிபெற்றவர்களும் பெயர் தெரியாதவர்களுமான யூனியன் மற்றும் கான்ஃபெடரேட் படைவீரர்களது கல்லறைகள் நடுவே சென்று அடங்கிவிட்டாள். உயிரோடிருந்தபோது எமிலி ஒரு பாரம்பரியம், ஒரு கடமை, ஒரு கரிசனம். (நீல நாயின் கண்கள்அசதா: 26)
கடைசியில் மிஸ் எமிலி மீது அவர்களால் பரிதாபம் கொள்ள அவர்களுக்கு வாய்ப்பு. வறிய நிலையில் தனித்து விடப்பட்ட சூழல் அவளை மனிதத்தன்மை மிக்கவளாக மாற்றும். ஒரு ரூபாய் கூடவோ குறையவோ இருப்பதன் சந்தோஷம் அல்லது துக்கத்தை இனி அவளும் உணர்வாள். (நீல நாயின் கண்கள்அசதா: 31)

இவ்வாறாக அவள் மனதுக்கு நெருக்கமானவள், தப்பிக்க இயலாதவள், ஊடுறுவ முடியாதவள், எதனாலும் பாதிக்கப்படாதவள், ஒழுங்குகளை மீறுபவள் என ஒருதுலைமுறையிலிருந்து மற்றதற்கு கடந்து சென்றாள். (நீல நாயின் கண்கள்அசதா: 38)

வால்டர் மிட்டியின் ரகசிய வாழ்க்கை‘ – ஜேம்ஸ் தர்பர்

வால்டர் மிட்டி வேகமாக நடந்து ஒரு கடைக்குள் நுழைந்தார். “சிறிய குட்டி நாய்களுக்கான பிஸ்கெட் வேண்டும்”

“எந்த பிராண்ட் சார் ?”

உலகிலேயே மிகச் சிறந்த துப்பாக்கி சுடும் நிபுணர் ஒரு வினாடி யோசித்தார். “உறையின் மீது நாய்கள் இந்த பிஸ்கெட் கேட்டு குரைக்கும் என எழுதியிருக்கும்” என்றார். (நீல நாயின் கண்கள்அசதா: 49)

ஆசிரியையின் விருந்தாளி‘ – இஸபெல் ஆலண்டே

அக்காலத்தில் கிராமப்புறங்களில் திரிந்து தங்கள் பொருட்களை விற்க வந்த வியாபாரிகளில் ஒருவர் ஹலாபி. திசைக்காட்டி கருவியோ, வரையறுக்கப்பட்ட பயணத் திட்டமோ அற்ற வியாபார யாத்ரீகர்.

அராபிய வந்தேறி. அந்நகரின் ஒரே பள்ளி ஆசிரியையான ஐனேஸ் குறுகிய காலமே நீடித்த காதலுறவில் பிறந்த பன்னிரண்டு வயது மகனுடன், திடமான இடுப்பும் பீடுடைய தோள்களும் அமைந்த இளம் பெண்ணாகவே இருந்தார். யாரோ ஒருவருடைய தோட்டத்தில் விழுந்து கிடந்த மாம்பழத்தை எடுக்கச் சென்றபோது அவ்விடத்தின் சொந்தக்காரனான யாருக்கும் அறிமுகமில்லாத வெளியாளான அந்த நபர் பையனை அச்சுறுத்த வேண்டி துப்பாக்கியால் சுட அதுவோ அவனது நெற்றியின் நடுவே கருந்துளையை உண்டாக்கி அதன் வழி வேகமாக அவனது உயிரையும் வெளியேற்றியது. (நீல நாயின் கண்கள்அசதா: 53)

அவள் ரொம்பவும் மாறிப் போயிருந்தான் – நாம் கூட வளர்ந்து விட்டோம் என்றே நினைக்கிறேன். ஆனால் சட்டென்று அவனை நான் அடையாளம் கண்டு கொண்டேன். இத்தனை வருடங்களும் அவனுக்காக நான் காத்திருந்தேன்; எப்டியும் அவன் வருவான் என எனக்குத் தெரியும். இவன் அந்த மாம்பழங்களுக்குச் சொந்தக்காரன்,”

“அல்லா நம்மைக் காப்பாராக,” மெல்ல முணுமுணுத்தார் (நீல நாயின் கண்கள்அசதா: 58)
நிலவொளியில் வண்டியைச் செலுத்தியபடி பல ஆண்டுகளுக்கு முன் ஒரு மாம்பழத்தை எடுப்பதற்காக ஆசிரியையின் மகன் நின்ற அந்த இடத்துக்கு வந்தனர், (நீல நாயின் கண்கள்அசதா: 60)

“நன்றி, துருக்கியரே அவள் சொன்னாள்.”

“ஏன் நீங்கள் என்னைத் தேடி வந்தீர்கள், ஐனேஸ்?”

“ஏனென்றால் இந்த உலகிலேயே நான் அதிகம் நேசிக்கும் நபர் நீங்கள், அதோடு என் மகனுக்குத் தந்தையாக இருந்திருக்க வேண்டியவரும்.”

நல்ல அண்டை வீட்டுக்காரர்களால் காப்பாற்றப்பட்ட ஒரு ரகசியம், அதனை மாறாத வைதாக்கியத்துடன் காத்து நீதியின் புகழ்மிக்கக் கதையாக பல ஆண்டுகளுக்கு வைத்திருந்தோம் – ஆசிரியை ஐனேஸின் மரணம் எங்களை அப்பொறுப்பினின்று விடுவிக்கும் வரை. எனவே இப்போது அந்தக் கதையை நான் சொல்கிறேன்,(நீல நாயின் கண்கள்அசதா: 62)

அவர்கள் சுமந்தவை‘ – டிம் பிரையன்

ஏப்ரல் மாதம் முதல்வாரத்தில், லேவண்டர் இறப்பதற்குமுன் மார்த்தாவிடமிருந்து லெப்டினெண்ட் ஜிம்மி க்ராஸூக்கு நல்லதிர்ஷ்ட அன்பளிப்பு ஒன்று வந்தது. அது சாதாரண சுழாங்கள், அதிகம் போனால் ஒரு அவுன்ஸ் இருக்கும். தொடுவதற்கு மென்மையான ஆரஞ்சு மற்றும் வயலட்நிறபுள்ளிகளுடன் கூடிய பால் வெள்ளை நிறத்தலான சிறு முட்டை போல தோன்றிய கூழாங்கல். உடன் இருந்த கடிதத்தில் மார்த்தா அதை ஜெர்சி கடற்கரையில் துல்லியமாக நிலமானது உயர்ந்த அலைகளைத் தொடும் இடத்தில், இரண்டு விஷயங்கள் ஒன்று கலப்பதும் அதே நேரத்தில் இரண்டும் பிரிந்து நிற்பதுமான அந்த இடத்தில் கண்டெடுத்ததாக எழுதியிருந்தாள். பிரிந்திருந்தும் சேர்ந்திருப்பதான இந்த விஷயமே அந்தக் கூழாங்கல்லை எடுத்துக்கொள்ளத் தூண்டியதாகவும் பலநாட்களுக்கு தனது நெஞ்சருகே சட்டைப்பையில் வைத்திருக்கச் செய்ததாகவும் எழுதியிருந்தாள். அங்கே அது எடையற்று இருந்ததாகவும் அதை அவனுக்கான தனது உண்மையான உணர்வுகளின் அடையாளமாக வான்மடல் வழி அனுப்புவதாகவும் குறிப்பிட்டிருந்தாள். (நீல நாயின் கண்கள்அசதா: 71)

அவமானத்திற்கு ஆளாவாது குறித்த அச்சமே அது. அவர்கள் கொன்றனர், கொல்லப்பட்டனர் – அவமானத்திற்கு ஆளாகக் கூடாது என்பதற்காக. அவர்களை இந்த யுத்தத்திற்குள் அழைத்த முக்கிய விஷயமே அதுதான். அவர்களுக்கான விஷயங்கள் ஏதும் அதில் இல்லை. பெருமை புகழ் குறித்த கனவும் இல்லை. அபகீர்த்தியினால் வரும் அவமானம் உண்டாகக்கூடாது, அவ்வளவு தான். அவமானத்தால் சாகக்கூடாது என்பதற்காகவே அவர்கள் யுத்தத்தில் செத்தனர். (நீல நாயின் கண்கள்அசதா: 87)

இது வேறு உலகம், இங்கு அழகான கவிதைகளோ, இடைதேர்வுகளோ கிடையாது. இது கவனமின்மையாலும், முட்டாள்தனத்தாலும், மனிதர்கள் சாகும் இடம்.

மனிதர்கள் தமக்குள் சுமக்கும் விஷயங்கள். தாங்கள் செய்யாத அல்லது செய்யவேண்டும் என நினைத்த விஷயங்கள். (நீல நாயின் கண்கள்அசதா: 91)

இக்கதைகள் வியட்நாமில் ஆசிரியரது போர்க்கால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் பகுதி சுயசரிதைத் தன்மையுடைவை. (நீல நாயின் கண்கள்அசதா: 93)

நீலநாயின் கண்கள்‘ – கேப்ரியல் கார்சியா மார்க்கேஸ்

அவள் சொன்னாள், தாழ்வாரம் கடினமான கனவுகளால் நிரம்பியிள்ளது. நான் அவளைக் கேட்டேன்: “உனக்கு எப்படித் தெரியும்?” அவள் என்னிடம் சொன்னாள்: “சற்று முன் நான் அங்கிருந்தேன், என் இதயத்தின் மீது நான் உறங்குவதைக் கண்டுணர்ந்தபோது நான் திரும்பிவிட்டேன்”,
அவளிடம் சொன்னேன்: “வெளியே தாழ்வாரம் ஏதும் இருப்பதாகக் தெரியவில்லை. எனக்கு நாட்டுப் புற வாசமடிக்கிறது,” என்னிடமிருந்து சற்றுத் தள்ளியிருந்த அவள் சொன்னாள்: உங்களைவிட எனக்கது நன்றாகவே தெரியும். என்ன நடக்கிறதென்றால், அங்கே ஒரு பெண் நாட்டுப்புறம் பற்றிக் கனவு கண்டுகொண்டிருக்கிறாள். தணலின்மீதாக கைகளை அவள் குறுக்காக வைத்தாள் பேச்சைத் வேண்டுமேன்று விரும்பிய ஆனால் ஒருபோதும் நகரத்தை விட்டு நீங்க முடியாமல் போன ஒரு பெண்.” அப் பெண்ணை நான் இதற்குமுன் கண்ட சில கனவுகளில் பார்த்திருந்தது நினைவுக்கு வந்தது. (நீல நாயின் கண்கள்அசதா: 102)

தாமஸ் வர்காஸின் தங்கம்‘ – இஸபெல் ஆலண்டே

தாமஸ் வர்காஸின் தங்கக் கட்டிகள் பாதுகாப்பான மறைவிடத்தில் புதைக்கப்பட்டிருந்தன. பனாமா தொப்பி அணிந்து விலைமிக்க சிகரெட்டுகளை அவர் புகைக்க அவரது குழந்தைகளோ பசியில் வாடினர், மனைவி கந்தலாடைகள் அணிந்து உலவினாள். பிள்ளைகளுக்கு பள்ளிக் கட்டணம் கட்டக்கூட அவர் மறுத்தார். (நீல நாயின் கண்கள்அசதா: 105)

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *