திருப்பூர் புத்தக கண்காட்சி பேச்சு – 01.02.2012

திருப்பூர் புத்தக கண்காட்சி பேச்சு - 01.02.2012

	உலகத்தில் எந்த மொழியிலும் இல்லாத கவிதை இலக்கணம். தமிழில் மட்டும் உள்ளது. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பாவும் அதற்குரிய செப்பல், அகவல், துள்ளல், தூங்கல் ஓசையும், தளை, தொடை அமைப்பும். உலகில் வேறு எந்த மொழிகளிலும் இல்லை. கே.இராமகிருஷ்ணன் என்னும் அறிஞர் (Studies in Dravidian Philologist) என்ற நூலில் ஆசிரியர் இந்தியாவிற்கு வந்த குடியேறியபோது திராவிடர்களுடன் கலந்து வாழ்ந்தனர். இக்கலப்பால் ஆரிய மொழியும், திராவிட மொழியும் கலந்து பலவகைத் திரிபுற்ற புது மொழிகள் ஏற்பட்டன என எழுதியுள்ளார். 
	கவிதைகள் பிறப்பது எவ்வாறு என்னும் தலைப்பில் மயாகோவ்ஸ்கி எழுதி வெளியிட்ட சிறு வெளியீட்டில் ‘சமூக ஆணை’ பற்றி விளக்கம் தருகிறார் மயாகோவ்ஸ்கி. ஒரு விஷயத்தைச் சொல்வதற்குக் கவிதையைக் தவிர வேறெந்த வழிகளும் இல்லாமலிருக்கும் போது மட்டுமே உங்கள் பேனாவைத் தொடுங்கள். ஒரு தெளிவான சமூக ஆணையை நீங்கள் உணரும் போதுதான், நீங்கள் தயாரித்து வைத்துள்ள விஷயங்களை உங்களால் கலைப் படைப்பாக மாற்ற முடியும். 
	சமூக ஆணை என்பது சமூக யதார்த்தத்தில் கலைஞனின் தலையீடு ஆகும். அரசியலில் அறிவியல் சோசலிசம் அப்படியோ அது போலக் கலையில் சமூக ஆணை. 
	‘சமூக ஆணை’யும் மென்மையான மானுட உணர்ச்சிகளும் எதிரும் புதிருமாக இருக்க வேண்டியதில்லை என்பதற்கு மயாகோவ்ஸ்கியின் வாழ்க்கையும் கவிதைகளுமே சாட்சி. போரும் அமைதியும், என்னும் அவரது கவிதையில் வெளிப்படுகிற ஆழமான மனித நேய மென்னுணர்வு இது: 
	எனது பெரும் விழிகள் 
    எல்லோருக்கும் திறந்துவிடப்பட்ட கோவில் கதவுகள்
	மக்கள்
	நேசிக்கப்பட்டோர் 
	நேசிக்கப்படாதோர் 
	தெரிந்தவர் 
	தெரியாவதர் 
	எல்லோரும் 
	எனது ஆன்மாவில் புகுகின்றனர் 
	முடிவில்லாத ஊர்வலமாக.
	மனிதனிடத்தில் உடல், உள்ளம், சிந்தனை ஆகிய மூன்றிலும் படி மலர்ச்சி உண்டு. உடலியல் படி மலர்ச்சியை லமார்கும், டார்வினும் விளக்கினர். அறிவு சார்ந்த சிந்தனை வளர்ச்சியை ஃபூகோ முன் மொழிந்தார். 
	18ம் நூற்றாண்டிற்கு முன் மனிதன் என்பவன் இல்லை (Man does not exist) என்று அறிவிக்கிறார். 20ம் நூற்றாண்டின் சிந்தனைப் போக்கைப் பெரிதும் மாற்றிய French சிந்தனையாளர் Foucoult அதற்கு முன்னால் மனிதன் என்றும் உயிரினம் இருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் அப்பொழுது பிரபஞ்சத்துக் கடவுள்தான் மையமாக இருந்தார். நீட்ஷே கடவுளின் மரணத்தை அறிவித்தபோது மனிதன் தனித்துவிடப் பட்டான் கடவுள் இல்லாத இந்த 19ம் நூற்றாண்டின் இலக்கிய வெளிப்பாடு,  என்கின்ற இரண்டு குறிப்பாக கவிதையில் புதுக்கவிதை, நவீனக்கவிதை வடிவங்களாக உருக்கொண்டது மிக முக்கியத்துவம் வாய்ந்தது.  
	பழந்தமிழ் இலக்கியங்கள் காட்டும் ஐந்நிலப் பாகுபாடு என்பது தமிழகத்தின் படிமுறையான வளர்ச்சியைச் சுட்டுவதுதான் என்று பி.டி.சீனிவாச ஐயங்கார், இராமச்சந்திர தீட்சிதர், கமில் சுவலபில் போன்றவர்கள் வரலாற்றியல், சமூகவியல், மானிடவியல் அடிப்படையில் சரியாகச் சுட்டிக் காட்டினர். இதனை என்.சுப்பிரமணியன், ஒரு பரந்த நிலப் பரப்புக்கு உரித்தான பணியை மிகச் சிறிய பகுதியில் அமைந்த தமிழ் நாட்டுக்குப் பொருத்திப் பார்ப்பது பொருந்தாது என்றார்.உண்மையில் திணைப் பாகுபாடு என்பது ஒரே காலகட்டத்தில் வேறுபட்ட வளர்ச்சி நிலை இருப்பதை விளக்கிக் காட்டுவதுதான். அதனைச் சிவத்தம்பி செய்கிறார். 
	இந்திய நாகரிகத்தின் பிறப்பு (the birth of Indian civilization) என்ற நூலில் புகழ்பெற்ற தொல்லியல் அறிஞர் ஆல்ச்சின் (allchin) இந்தியாவின் தென் பகுதியில் இருந்த புதிய கற்காலப் பண்பாட்டின் முல்லை நில வாழ்வுத் தன்மையைக் காட்டுவதற்குச் சான்றாகப் பெரும் பாணாற்றுப்படையில் 147 முதல் 196 வரையுள்ள வரிகளைத் தருகின்றார். சமகாலத்து வாழ்வில் வேறுபட்ட நில அமைப்புகளில் வேறுபட்ட கலாசாரமும் நிலவி வந்ததைக் காட்டும் பகுதிகள் அவை. திணைக் கோட்பாட்டின் மையமான பகுதியை விளக்குவதற்கு ஆல்ச்சினுடைய மேற்கோள்தான் சிவத்தம்பி அவர்களுக்குத் தூண்டுதலை அளித்துள்ளது என்று கூறலாம். 
	இந்திய இலக்கிய வரலாற்றில் எந்த மொழியிலும் இல்லாத திணைக் கோட்பாட்டை உலகளாகவிய உற்பத்தி முறைகளுள் ஒன்றுடன் பொருத்திக் காட்டிய பேராசிரியர், இந்தக் கொள்கைகளைக் கொண்டிருக்கும் சங்க இலக்கியங்களும் தொல்காப்பியமும் வரலாற்றில் எந்தக் காலகட்டத்தைச் சார்ந்தவையாக இருக்க முடியும் என்பதை ஆராய்கிறார். 
	தமிழ்நாட்டின் எழுத்து வராறும் சமூக வராறும் கி.பி. ஒன்றுக்கு முந்தைய காலகட்டம் என்று இந்த ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால் அன்றைய தமிழ்ச் சமூகத்தில் சமூக நிறுவனங்களும் அரசுருவாக்கம் என்பதும் இலக்கிய உருவாக்கம் என்பதும் எவ்வாறு இருந்தன என்பதை யாரும் விளக்கவில்லை. 
	உலகத்தில் மனிதனுடைய முதல் நாகரிகம் தோன்றிய இடம் மெசப்பொத்மியா - இன்றைய ஈராக் கிறிஸ்து பிறப்பதற்கு 5,000 வருடங்களுக்கு முன் தோன்றிய நாகரீகம். கி.மு.1700 இல் - இங்கேதான் ஹமுராபி என்ற மன்னன் ஆண்டு உலகத்தின் முதல் சட்டத்தைத் தொகுத்தான். பின் உருக் என்ற நாட்டைக் கில்காமேஷ் என்ற அரசன் கிமு 2750-2500 ஆண்டிருக்கிறார். அவனைப் பற்றிய காவியம் அதற்குப் பின் எழுதப்பட்டது இதுதான் உலகத்திலேயே எழுத்தில் பாதுகாக்கப்பட்ட ஆதிகாவியம். சுமேரியர்களின் (cumieprm) ஆப்பு எழுத்தில் எழுதப்பட்டு, இன்றுவரை இவை 11 மண் தட்டைகளில் பாதுகாக்கப்பட்டுகின்றன. கில்காமேசை பலதடவை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்கள். சமீபத்திய மொழிபெயர்பின் முதல் வரிகள் இப்படி ஆரம்பிக்கின்றன –The one who saw all; I will declare to the world; The one who knew all; I will tell about. கவிதை எனும் மாக்கடலின் வீச்சு குறித்து அப்படி என்னால் ஒரு மணி நேரத்தில் உரையாட முடியாது. அதிலே என் தடம் என்ன என்று சுட்டுவது மட்டுமே இங்கு என் வேலை. 
	1933ம் ஆண்டு - ஜெர்மனியின் பெர்லின் நகர வீதியில் ஹிட்லரின் நாஜி படைகள் விலை மதிப்பற்ற அரிய புத்தகங்களை கொளுத்தின. பெர்லின் நகரமே சாம்பலால் நிறைந்தது. அதே, ஆண்டு யாழ்ப்பாணத்திலிருக்கும் 1933- கே.எம். செல்லப்பா எனும் மனிதர் பொதுமக்களுக்காக பயன்பாட்டிற்கான இலவச நூலகத்தைத் தொடங்குவதற்கு நிதியும், நூல்களும் திரட்டுகிறார். 849 நூல்களோடு யாழ்ப்பாண மத்திய நூலகமாகிய, மாநகர சபையின் கீழ் அந்த நூலகம் உருவாக்கப்பட்டுப் பராமரிப்பிற்கு வந்தது. அதற்கானதொரு புதிய கட்டிடத்தைப் பொறுப்பேற்று உருவாக்கியவர் யார் தெரியுமா S.R.ரங்கநாதன் என்கிற இந்தியர். உலகின் தலைசிறந்த நூலக விற்பன்னர் அவர். 
	1954 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 1959ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 11ம் நாள் உலகம் ‘யாழ் பொதுநூலகம்’ தேதி திறக்கப்பட்டது யாழ்ப்பான நூலகம். புதிய நூலகத்திற்கான வரைபடம் தமிழ் நாட்டைச் சேர்ந்த நரசிம்மனால் வடிவமைக்கப்பட்டது. மே 31 1981 ஆம் ஆண்டு யாழ் நூலுகம் தீக்கிரையானது.
	97ம் ஆயிரம் புத்தகங்கள் கொளுத்தப்பட்டன ‘யாழ்ப்பாணப் பொதுசன நூலகம்’ 1000 ஆண்டு ஓலைச்சுவடிகள், வரலாற்று ஆவணங்கள், பழமையான நூல்கள் தட்டுத் தட்டாய்ச் சாம்பலானது. தாவீது அடிகளால் அந்த அதிர்ச்சியில் இறக்கின்றார். அதுகுறித்த இந்தக் 	கவிதையைப் பாருங்கள்: 
		1981 ஜூன் 1 இரவு 
	நேற்று என் கனவில் புத்தர் 
		பெருமான் சுடப்பட்டு 
		இறந்தார். 
	சிவில் உடை அணிந்த அரச காவலர் 
		அவரைக் கொன்றனர்.
	யாழ் நூலகத்தின் படிக்கட்டு அருகே 
		அவரது சடலம் குருதியில் 
		கிடந்தது. 
	இரவின் இருளில் அமைச்சர்கள் 
		வந்தனர். 
	"எங்கள் பட்டியலில் இவர் 
			பெயர் இல்லை? 
	பின் ஏன் கொன்றீர்? 
	என்று சினந்தனர்.
	இல்லை ஐயா தவறுகள்
	ஏதுவும் நிகழவில்லை
	இவரைச் சுடாமல் ஒரு 
	ஈயினைக் கூடச் சுடமுடியாது
	போயிற்று எம்மால் 
	ஆகையினால் தான்" 
	என்றனர் அவர்கள். 
	சரி உடனே மறையுங்கள் 
	பிணத்தை என்று கூறி 
	அமைச்சர்கள் மறைந்தனர். 
	சிவில் உடையாளர் பிணத்தை 
	உள்ளே இழுத்துச் சென்றனர். 
	90,000 புத்தகங்களினால் 
	புத்தரின் மேனியை மூடி 
	மறைத்தனர். 
	அவோகவாத சூத்திரத்தினைக் 
	கொளுத்தி எரித்தனர். 
	புத்தரின் சடலம் அஸ்தியானது -
	தம்மபதமும் தான் சாம்பலானது. 
 	தத்துவம்  மொழியை அதன் அன்றாட விவரிப்பு கலிருந்தும், கோட்பாடுகள் - பிரச்சினைகளில் 	இருந்தும் பிரித்துக் கொண்டு போய்விடுகிறது. கலையோ பாதிப்புக்களையும், உணர்கைகளையும் உருவாக்குகின்றது. கவிதையோ, 
	"மனிதக் கண்களில், 
	பார்வையின் புதிய 
	சாத்யங்களைத் திறந்து 
	வைக்கிறது"  
மேற்சொன்ன கவிதை இதற்குச் சாட்சி! 
	"நட்பிலும் சரி, காதலிலும் சரி, ஓருவர் மற்றவரைப் பேணுவதும், தங்கள், தங்கள் அன்பைத் தெரிவித்துக் கொள்வதும் மற்றவருக்குச் சுகம் கொடுக்க வேண்டும் என்பதற்கோ இன்பம் ஊட்ட வேண்டும் என்பதற்கோ அல்ல. 
	தம்முடைய சுயநலத்தை உத்தேசித்துத் தான். என் அன்பே என்று காதலன் அழைப்பது காதலிக்காக அல்ல. அவள் சந்தோஷப்படுவதற்காக அன்று. 
	அப்படிச் சொல்வதில் அவனுக்குத் தான் இன்பம், இல்லையா? அதுபோல, முக்கியமாக என் சுயநலத்தை உத்தேசித்துத்தான் இக்கடிதம் எழுதுவது என்று வைத்துக் கொள்ளேன்."" 
	என கு.அழகிரிசாமி இராஜநாரயணனுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். 
	கவிதை - உணர்வுகளின் பாதை - உறவுகளின் பாதை. சங்ககாலத்தில் இது திணைகளின் பாதை. காப்பியகாலத்தில் இது பற்றுகளின் பாதை. சமய இலக்கிய காலத்தில் இது பக்திகளின் பாதை, விடுதலைக்கு முன்னும் பின்னும் நவீனத்துவத்தின் பாதை, இன்றோ இது பின் நவீனத்துவத்தின் பாதை. 
	தமிழில் புதுக்கவிதை தோன்றுவதற்கான நியாயமான சமூகப் பின்களம் குறித்துத் தமிழவன் கூறியுள்ள கருத்துக்கள் முக்கியமானவை. அவர் கூறுவன : 
1.	இன்றைய தமிழ் வாழ்க்கையில் ஏற்பட்ட புது அம்சத்தை முதன் முதலாகச் சொன்ன இலக்கிய வடிவம். 
2.	நவீன யுகத்தில் நெருக்கடி மிக்க வாழ்க்கையை வாழும் தமிழனைக் காட்டுகிறது. மாறிய வாழ்க்கை அதனால் ஏற்பட்ட நெருக்கடி, தனிமை, அவலம், வாழ்வின் மீதான அவநம்பிக்கைபற்றி முதன் முதலில் சொன்னது. 
3.	இவற்றைச் சொல்ல முடியாத நிலையிலிருந்தான். ஏனெனில் இந்த உணர்வை இவனுக்கு முந்திய ஒரு தலைமுறைக்கு இவன் சொல்ல முடியாது. சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டார்கள். இப்படிச் சொல்ல முடியாமல் இருந்த ஒரு தலைமுறையின் வாயாக விளங்கியதுதான் புதுக்கவிதை.
	இந்தச் சமூக உணர்வோடு, இன்னொரு முக்கிய நோக்கும் செயல்பட்டது. அது, கவிதைக்கலை பற்றியது. சங்ககாலக் கவிதைகள் போலச் செறிவாக நுட்பமாக உருவாக வேண்டுமென்ற நோக்கமாகும். கவிதைக்கலை இசை - சந்தப் போக்குகளின் தாக்கமின்றித் தனிக்கலையாக உருவாக வேண்டுமென்ற நோக்கம் இது. தொடக்க காலத்தில் புதுக்கவிதையை வளர்த்த சி.சு. செல்லப்பா, க.நா. சுப்பிரமணியம் ஆகிய இருவரும் இதுகுறித்து நிறைய எழுதியுள்ளனர். 
	புதிய கவிதையைச் சங்ககாலக் கவிதைமரபின் வாரிசாகக் காலத்திற்கேற்பப் புதிய உருக்கொடுப்பதே அவர்களின் முதல் தலையாய நோக்கம் எனலாம். சங்க காலத்தின் சுருக்கச் செறிவான, கூர்மையான மொழி வேண்டும், இசையின் பிடியிலிருந்து கவிதை சற்று விலகித் தனிமொழியினை உறுதிப்படுத்த வேண்டும். 
	"புதுக்கவிதைக்குச் சரியான உதாரணம் சங்கக் கவிதைகள் என்பது என் முடிவு. அவை வெகு நவீனமாக இருக்கின்றன. அமைப்பிலும் நடையிலும் தொனியிலும் அகத்துறைக் கவிதைகளுக்குச் சிறந்த அமைப்பு, தோரணை. காவியகாலம், பக்திகாலம் வரவும் வேறுபல உள்ளடக்கங்கள் சேர்க்க வேண்டி ஏற்பட்டதன் விளைவாக உருவம் பல்வேறு விதமாக அமைய வேண்டியதேற்பட்டது. ஆழ்வார்கள், நாயன்மார்கள் முதல் கம்பன் வழியாகப் பாரதி வரை புது உள்ளடக்கங்களைக் கொண்டு புது உருவங்களைப் பெறுவதற்கான யாப்பு விதிகளைத் தேவைப்படுத்தியது. இதனால் லாபம் நிறைய உண்டு என்றாலும் நஷ்டமும் உண்டு. சிலப்பதிகாரம் வரை காணமுடிகிற இறுக்கம், பேச்சுப் பாங்கு தோரணை நடை, நடப்பியல்பாங்கு குறைந்து வந்து இன்று கவிதை நடை நெகிழ்ந்து போயிருப்பதாகப் படுகிறது. எனவே தற்காலப் புதுக்கவிதைதான் சங்க இலக்கியத்தின் வாரிசாக மீட்சி ஏற்படுத்துகிறதாகப்படுகிறது எனக்கு".
க. நா. சு. 1959இல் இப்படி எழுதினார் : 
	"இந்தப் புதுக்கவிதையிலே புதுசாக இன்றைய வாழ்வுச் சிக்கலைப் பூரணமாகப் பிரதிபலிக்கும் ஒரு வார்த்தைச் சிக்கலும், இன்றையப் புதுமைகளை எல்லாம் தொட்டு நடக்கும் ஒரு நேர்நடையும், அகவல் சந்தம் என்ற நாம் சொல்லக்கூடிய ஒரு பேச்சு நடை, அடிப்படைச் செய்யுள் வேகமும், எல்லாவற்றிற்கும் மேலாக, இடைக்காலப் பழமைக்கு மேலாக, பண்டைக்கால, ஆதிகாலப் பழமையைப் போற்றும் ஒரு திறனும் காணக்கிடக்கின்றன". 
	இரண்டாவது முக்கியக் கருத்து, இசையி-னின்றும் வேறான தனிக்கவிதை மொழி பற்றியதாகும். சி.சு. செல்லப்பா கூறுவது:
	"வசனத்துக்கும் கவிதைக்கும் உள்ள வித்தியாசத்தைப் போலவே கவிதைக்கும் சங்கீதத்துக்கும் வித்தியாசம் உண்டு. பாரதி தன் கவிதைக்குள் பலவற்றில் சங்கீதத்திற் குரிய இசையம்சம் ஏற்றியிருப்பதைப் பார்க்கலாம். இந்த அளவு இசையம்சம் உள்ள அவர் படைப்புக்கள் கவித்தரம் குறைந்து தான் காண்கின்றன என்பதைச் சொல்லித்தான் ஆக வேண்டும். இன்று அவரது அத்தகைய படைப்புக்களைப் பின்பற்றி எழுதப்படும் மெட்டுப் பாட்டுக்கள் எல்லாம், கவிதைகள் என்று கருதும் ஒரு ஏற்புநிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலை கவிதை வளர்ச்சிக்குப் பெரிதும் பாதகமாக இருக்கக் கூடியது. எனவே கவிதைக்கு வேண்டிய இசைத் தன்மை பிச்சமூர்த்தி கூறியது போலச் சவுக்கைத் தோப்பின் வழியே காற்று பாய்ந்து சென்று பிறகு தோன்றும் ஓயும் ஒலி என்பதுதான் முக்கியம்". அந்தப் பாயும் ஒலி எது என மிகச் சமீபத்தில் காநி ஆனந்தன் கேள்வி எழுப்புகிறார். 
	இசைக்குட்பட்டியங்காதவாறு சங்ககால, சிலப்பதிகார மரபுக்கு முக்கியத்துவம் தருகிறார், க.நா.சு. அவர் கூறுவது : 
	"….தமிழ்க் கவிதைக்கு கோபால கிருஷ்ணபாரதியாரும் சுப்பிரமணிய பாரதியாரும் ஓரளவு புத்துயிர் தந்தார்கள். பக்தி விஷேசம் இசை முதலிய வற்றால் முந்திய பாரதியாரும் சமூகவெறி சுதந்திர வேகத்தினால் பிந்திய பாரதியாரும் தமிழ்க்கவிதைக்குப் புதுமை தர முயன்றார்கள். இருவருக்கும் இசைநயமும் உதவியது. 
	தமிழ்க்கவிதை மரபில் பொதுநெறி வேர்கள் கொண்டது சங்ககால மரபேயாகும். இடைக்கால, நிலப் பிரபுத்துவ கால மிகை அலங்கார அணி மரபுக்கு அலங்கார அணி மரபுக்கு எதிரானது எனலாம். நிலப்பிரபுத்துவ மனாபாவச் சங்கீதத்தை மீறி, தனிக்கவித்துவமாக உருவான புதுக்கவிதை" 
	பிரமிளின் மொழியில் கூறுவதானால். படித்த உடன் பரபரப்பான ளுநவேinஅநவேயட ஆன உடனடிக் கிளர்ச்சி தருவதல்ல நல்ல கவிதை. அது அனுபவத்தினூடாக நுட்பமான புத்துணர்வைத் தருவது" இவ்வாறு அமையும் நிலையில்தான் கவிதை அலங்காரமற்ற, சத்தமற்ற, திட்பமாகச் செதுக்கப்பட்ட செறிவமைப்புடன் சங்ககால மொழி போல அமைந்து நவீன உள்ளடக்கத்தோடு புதிய வீச்சுகள் பெற்றுப் புதுக்கவிதையாகிறது எனலாம்.
	Shakespeare இன் பிறந்த தினத்தை உலகப் புத்தக தினமாகக் கொண்டாடுகிறோம் நாம். Born 1564, April – Died April 1616 - Stratonஇல் இருக்கின்ற Parish Register இல் Shakespeare ஞானஸ்நானம் (baptized) செய்யப்பட்டது 26 ஏப்ரல் 1564 என்ற பதிவு இருப்பதால், அதற்கு மூன்று நாட்கள் முன்பாக அவர் பிறந்து இருக்கலாம் என யூகிக்கப்பட்டுள்ளது. 18th நூற்றாண்டின் ஐரோப்பிய விமர்சகர்கள் ஷேக்ஸ்பியர் ‘Rules’ என்ற நாடக விதிகளை புறக்கணித்தார் என்றார்கள். கிரேக்க நாடக ஆசிரியர்கள் உருவாக்கிய விதிகளை மறுதலித்த எவரையும் மறுமலர்ச்சி காலகட்ட விமர்சகரும், 18-ம் நூற்றாண்டு விமர்சகர்களும் குறைபாடுள்ள படைப்பாளியாகவே பார்த்தனர். ஆனால் before the spirit of art, இவை அனைத்தையும் மீறி, இன்று Shakespeare நிலைத்து நிற்கிறார். அவருக்கு எதிராக புகழ்பெற்ற எழுதாளர்கள் Rowe உம், Pope உம் வைத்து முதல் விமர்சனமே - 
	கல்வி என்ற தளமற்றவர் அவர். அவர் படிந்த Stratford Avon படித்தவர்களற்ற,  unbookish rustics-களால் நிறைந்திருந்தது என்பதாகும். 	ஆனால், மாறாக Shakespeare’s father John Shakespeare, Stratford on Evan இன் Common Council உறுப்பினராக இருந்தவர், பின்னர் வில்லியம் என்றழைக்கப்பட்ட Shakespeare உம் ஒரு School Master ஆக இருந்தவர் என்பது உறுதிப் படுத்தப்பட்டு உள்ளது - Audrey என்கிற அவரது சுயசரிதையை எழுத்தாளரால். 
	"Shakespeare was the
	Rerest of all things, 
	a whole man" என்கிறார் - Raleigh.
அவரது காலத்தால் அழியாத கவிதை இது. 
	ஏன் என்னால் இந்த 
	காலத்தின் விரைவிற்கும் 
	மாற்றங்களுக்கும் ஏற்ற 
	புதிய கருவினை எழுத 
	முடியவில்லை? 
	ஏன் புதிய கண்டு பிடிப்புகளை 
	மறுதளித்து 
	அவை பயணிக்கின்ற தடத்தையும்
	 புறக்கணித்து - 
	உன்னைப் பற்றி மட்டுமே 
	எழுதுகிறேன். 
	ஓ-
	காதலே, காதலியே 
	எனது ஒரே வாதமும்,
	பிரதி வாதமும் நீங்களே. 
	என்னால் முடிந்ததெல்லாம், 
	ஆதி உணர்வான 
	உன்னை, 
	சமீபத்திய புதிய வார்த்தை 
	எனும் அழகு ஆடைகளால், 
	அலங்கரித்து, அதில் தோற்பது தான்-
	ஏற்கனவே தீர்ந்து போனவற்றை 
	மறபடியும் தீர்ப்பது -
	எழுதித் தீர்ப்பது -
	எழுதியே தீர்ப்பது - 
	ஆனாலும் என்ன, 
	சூரியன் தினமும் 
	பழயதும், புதியதும் 
	தானே - 
	என் காதலும் அப்படித்தான் -
	சொன்னதைச் சொல்வது 
	புதிதாய் - 
	தீராததாய்!    
 	அனுபவத்தை விண்டு பார்க்கும் போது அவற்றிற்கு இரண்டு முகங்கள். ஒன்று பிறருக்கு விளக்குவது, மற்றொன்று தனக்குத்தானே அரற்றிக் கொள்வது. இதன் ஒரு முகம் கவிதை என்றால் மற்றொரு முகம் தத்துவம். அனுபவத்தை மூளையால் அள்ளும்போது குறைந்து போகும் பகுதியைக் கலைஞன் நிரப்புகிறான். மேலான தத்வஞானி. மேலான கலைஞனை, எப்போதும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு வந்திருப்பது இதனால்தான் தத்துவம் கவிதை இழந்து குறைபட்டு நிற்கிறது. தத்துவத்தின் மூன்னுருவங்களான கவிதைகள் கலைஞர் களிடமே சிக்கி இருக்கின்றன.
	கவிதை கவிதையாக மட்டும் இருப்பதில் பெரிய பயன் இல்லை. அது சமூக மாற்றங்களைப் பதிவு செய்து வைக்கையில், கால மாற்றங்களைக் கருத்து கொள்கையில், நேற்றிருந்தது இன்று இல்லை எனக் காட்டுகையில், வரலாற்று ஆவணமாயும் ஆகிவிடுகிறது. நிறைய யோசிக்க வைக்கிறது. 
	நம் காலத்து வாழ்வு, நம் காலத்துச் சிக்கல், நம் காலத்து அவஸ்தை, தத்தளிப்பு எல்லாம் கலந்தவையே கவிதைகள் "வாழும் காலத்தின் பங்காளியாகவும், சாட்சியாகவும் கவிஞன் இயங்கியதற்கான அடையாளங்கள் கவிதையில் புலப்படவேண்டும். 
	"யதார்த்தவாதியாக இல்லாத கவிஞர்கள் செத்துப்போனவர்கள். ஆனால், யதார்த்த வாதியாக மட்டுமே இருக்கும் கவிஞர்களும் கூட செத்துப் போனவர்கள் தாம். அறிவுக்குப் புரியாத வகையில் எழுதும் கவிஞர்களின் கவிதைகள் அவர்களுக்கும், அவர்களை நேசிப்பவர்களுக்கும் மட்டுமே புரியும். இது மிகவும் வருந்தத்தக்கது. அறிவுக்குப் புரியும் வகையில் மட்டுமே எழுதும் கவிஞர்களைக் கழுதைகளாலும் கூடப் புரிந்துகொள்ள முடியும். இதுவும் வருந்தத் தக்கதுதான்" - எஸ்.வி.ராஜதுரை.
	சார்த்தரின் ‘ஈக்கள்’ நாடகத்தில் கிரேக்கக் கடவுள் ஜீயஸ் கூறுவது போல, "மனிதனின் இதயத்தில் சுதந்திரம் என்னும் தீப்பந்தம் ஒளியை ஏற்றிவிட்டால் அவனுக்கு எதிரே கடவுள்கள் சக்தியற்றவர்களாகி விடுவார்கள்". அந்த சுதந்திரத்தின் முதல் ஒளியாய் கவிதை இருக்க வேண்டும். 
	தனது முதல் நூலான பூஜ்ய பாகைக் கோண எழுத்துவில் பார்த், ‘இலக்கியம் என்பது பாஸ்பரஸ் போன்றது’ என்று எழுதினார். அது தனது சாகும் தருவாயில், உச்சபட்ச பிரகாசத்துடன் எரிகிறது என்று குறிப்பிட்டார். 
	பார்த்தைப் பொறுத்துவரை இலக்கியம் என்பது தந்தையின் மரணத்துக்குப் பின் பிறக்கும் குழந்தையைப் போன்றது. இதையே அவர் தனது புகழ்பெற்ற கட்டுரையான ‘ஆசிரியனின் மரண’த்தில் விளக்குகிறார். 
	பேசுவது ஆசிரியன் அல்ல மொழியே, விசாரணை, யதார்த்தம், இலக்கியம், பிரதியியல் மொழி என்று அனைத்தையும் பகுத்துப் பார்க்கிறார். 
	பால்சாக்கின் ‘சராசின்’ என்னும் கதையில் வரும் பெண் வேட மணிந்த ஒரு கதாபாத்திரம், கீழ்க்கண்ட வாக்கியத்தை எழுதுகிறது. ‘திடீர் அச்சங்களுடனும், பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஆசைகளுடனும், உள்ளுணர்வில் இருக்கும் கவலைகளுடனும் பின் விளைவுகள் பற்றி கவலைப் படாமல் இயங்கும் துணிவுடனும் இருக்கும் இவள் ஒரு பெண்ணே. இதைச் சொல்வது யார்? கதையின் நாயகனா? அல்லது பெண் வேடமிட்டிருக்கும் அந்தப் பாத்திரமா? ஓருவேளை பால்ஸாக்கேதானா?. 
  
* * * * *

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *