வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் – 25.01.2022

‘என்னுடைய உடன்பிறப்புகள் தூங்கினால் கும்பகர்ணன், எழுந்தால் இந்திரஜித்’ என்று. வருகின்ற இடைத் தேர்தலிலே இந்திரஜித்தாக பணியாற்ற இருக்கின்ற, அன்பு கழக உடன்பிறப்புகளே - அனைவருக்கும் என்னுடைய வணக்கம்.
‘கலைஞரின் கட்டளைகளைக் கண்போல காப்போம்! தமிழரை உயர்த்தித் தமிழை வாழ வைப்போம்! அடக்குமுறையை அடித்து நொறுக்குவோம்! மதவாதம் மாய்த்து, மானுட நேயத்தை வளர்ப்போம்! வளமான தமிழகத்தை வளர்த்தெடுப்போம்!’ என விண்ணதிர ஐந்து முழக்கங்களைத் தளபதி முன்வைத்தபோது.
திராவிட முன்னேற்றக் கழகம் என்பது வெறும் அரசியல் கட்சி மட்டுமல்ல, சமுதாய மறுமலர்ச்சி இயக்கம். அதையும் தாண்டி திராவிட முன்னேற்றக் கழகம் என்பது ஒரு பாசமிக்க, குடும்ப உணர்வோடு கூடிய மிகப்பெரிய ஆலமரம். தலைவர் கலைஞர் தன்னுடைய உடன்பிறப்புகள் மீது, அவர்களுடைய உடல் நலத்தின்மீது, அவர்களுடைய குடும்ப நிகழ்வுகளின்மீது அப் பாச உணர்வோடு, ஒரு குடும்பத் தலைவராக  மாறாத அக்கறை கொண்டிருந்தவர். 
1980 ஆம் ஆண்டு சங்கரன் கோவில் சுப்பையா எனும் சட்டமன்ற உறுப்பினர் கார் விபத்தில் மரணமடைகின்றார். இரங்கல் தெரிவிப்பதற்காகச் சென்ற தலைவர் கலைஞர் ‘சங்கரன் கோவில் சுப்பையா குடும்பத்தை திராவிட முன்னேற்றக் கழகம் சுவீகரித்துக்கொள்ளும்’ என்று அறிவித்தார். அப்படி அறிவித்ததோடு மட்டுமல்லாமல் சுப்பையாவின் சகோதரர் தங்கவேலுவுக்குச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பும், மந்திரி பதவியும் கொடுத்து அழகு பார்த்தவர். கழகத்தின் மூத்த முன்னோடி சி.பி.சிற்றரசு மேலவைத் தலைவராக இருந்தவர். சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியில் ஒரு அருமையான சிலையை தலைவர் கலைஞர் சி.பி.சிற்றரசுவிற்கு வடிக்கச் செய்தார். சி.பி.சிற்றரசு ஆஸ்திரேலியா சென்ற சமயத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்ற செய்தியைக் கேள்விப்பட்டு, ஆஸ்திரேலிய தூதரகம், வழியாகத் தொடர்புகொண்டு, பிரிஸ்பேனில் மருத்துவமனையில் இருந்த சிற்றரசுவிடம் தொலைபேசியிலே பேசிய பிறகு தூங்கச் சென்றவர்தான் நம்முடைய கலைஞர். கழகத்தின் மூத்த தலைவர் என்.வி.என்.நடராஜன் உடல் நலம் குன்றியிருந்த சமயம். சென்னை மருத்துவர்களைவிட சண்டிகரிலிருந்து ஒரு மருத்துவர் வந்து சிகிச்சை அளித்தால் நல்லது என்று சொல்லப்படுகிறது. அதற்குரிய ஏற்பாட்டை உடன் செய்தவர் கலைஞர்.
“பெரியாரின் துணிவுதனைப் பெறுதல் வேண்டும்
பேரறிஞர் அண்ணாவின் தெளிவுதனை
உணரல் வேண்டும்
பேரெதிர்ப்புக் கஞ்சாத உறுதி வேண்டும்
என்றுமே பெரியார் அண்ணா - நம்
இதயத்தில் வாழ வேண்டும்”
அதனால் அண்ணா மறைவிற்குப் பிறகு, தான் முதலமைச்சர் பொறுப்பேற்றதைக் கூறும் பொழுது தன்னைச் சாதாரண ஏழைக் குடும்பத்தில் இருந்து வந்தவன், ஏழையின் துன்ப துயரங்களை அறிந்தவன்தான் என்பதை,
	சௌமியா மறைந்து சாதாரண வந்ததுபோல்
	சௌமியன் மறைந்து இந்தச் சாதாரணன் வந்துள்ளேன்...
என்று தெரிவிக்கிறார்.
“எட்டாண்டு முடிவதற்குள் காடு சென்று சிங்கத்தை தாய்போல இழுத்து வந்தவனென்றும் இருபது வயதில் இரும்புத்தூணை உடைத்தவன் என்றும், பகை நுழையா அரண் அமைத்து தமிழ் மன்றம் கண்டவன், போரில் இந்திரன் இவனிடம் தோற்றோடியதால் இந்திரஜித்தன் என்ற பெயருக்குத் தகுதியானவன் என்றும்” கூறும் கலைஞர் தன் கவிதையில் இராவணன் இந்திரஜித் இருவரையும் எடுத்துக்காட்டுகிறார். அவர்கள் வீரத்தைப் புகழ்கிறார்.
நான் உண்ணும் ஒரு பிடி அன்னம்
கலைஞரது பெயரெழுதிய உயிர் நெல்மணிகளால் விளைந்தது.
நான் அருந்தும் ஒரு துளி நீர்
கலைஞரது பெயரெழுதிய மூலக்கூறால் விளைந்தது.
நான் சுவாசிக்கின்ற சிறு மூச்சு
கலைஞரது பெயரெழுதிய உயிர்க்காற்றால் பிறந்தது.
நான் துயிலும் ஓரிரவு உறக்கம்
கலைஞரது பெயரெழுதிய நற் கனவுகளால் நிறைந்தது.
என் ஊனிலும், உயிரிலும் கலந்திருக்கின்ற ஒப்புயர்வற்ற ஒரே தலைவர், முத்தமிழறிஞருக்கு முதல் புகழ் வணக்கம்!
	போருக்குச் சென்றால் தளபதிக்குக் கட்டுப்படு. அரசவைக்குச் சென்றால் அரசனுக்குக் கட்டுப்படு. இன்றைக்கு நமக்குத் தளபதியாகவும், அரசனாகவும் இருக்கின்ற அவருக்கு மட்டுமே கட்டுப்படுவோம். தளபதியின் கரத்தை வளுப்படுத்தி, ஆட்சியிலே அமர்த்துவோம். என்னுடைய உயிர் உள்ள அளவு முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுடைய புகழை போற்றுவேன்; பாடி வணங்குவேன். அந்த ஒப்பற்ற ஒரே தலைவருக்கு என்னுடைய புகழ் வணக்கம்...
	நான் எங்கோ இருந்து தமிழகத்தை ஆளவந்தவன் இல்லை.  ஆண்டவனால் அனுப்பட்ட அவதார புருஷனும் அல்ல.  உங்களிடமிருந்து வந்தவன்.  உங்களில் ஒருவன் உங்கள் உடம்பு, சதை, ரத்தம், எலும்பு, மூச்சு.
	அவர் செருமானிய மொழிக்கு நயமும், இத்தாலிய மொழிக்கு இனிமையும், வடமொழிக்கு வீறமைதியும், இந்துஸ்தானிக்கு ஆண்மையும், பாரசீக மொழிக்குச் சந்த நயம், தெலுங்குக்குச் சந்த நயம், கன்னடத்திற்கு மென்மை, மலையாளத்திற்குக் கவர்ச்சியுணர்வு, தமிழுக்கு நுண்ணயம்.
கி.மு.இரண்டாம் நூற்றாண்டில், ஹெல்லனிக் உலகத்தை ரோம் வென்றபோது, தனது சக கிரேக்கர்களுக்கு இந்தப் புதிய உலகத் தலைவன் எப்படிப்பட்டவன் என்று கிரேக்க வரலாற்றாசிரியர் பாலிபியஸ் விளக்கினார்.
	“எல்லா அசாதாரணமான சூழ்நிலைகளையும் தாங்கி நிற்கக் கூடிய வலிமையைக் கொண்டுள்ள”.
நெருப்பினிலே தமிழ் செய்து 
	நீசர்களின் முன் போட்டான்!
	தண்ணீரில் தமிழ் செய்து
	தவித்தவர்கள் முன்வைத்தான்!
				- காசி ஆனந்தன்
துணிவையும் - தன்னம்பிக்கையையும் இரண்டு கால்களாகக் கொண்டு எவ்வாறு மாஜினி தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினானோ அது போன்ற அரசியல் பயணத்தைத் தொடங்கிய பெருமைக்கு - இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழகத்தின் தலைமையை ஏற்றுள்ள கலைஞர் கருணாநிதி உரியவர்.
அவன் பிறந்த ஜூன் திங்களில் தான் நமது கலைஞரும் பிறந்தார்.  மாஜினியைப் போலவே இளம் பருவத்திலேயே எழுச்சிமிக்க உணர்ச்சிகளால் உந்தப்பட்டு, கற்றத் தமிழுக்கும், பெற்ற தாய் நாட்டிற்கும் தொண்டாற்ற வேண்டும் என்ற லட்சிய உள்ளத்தோடு உரிமைக்குரல் எழுப்பியவர்.

பல ஆண்டுகளுக்கு முன்பாக, ரோம் நகரத்தில் ரோம் நாட்டு பிரபு ரோஹன் ஏற்பாடு செய்திருந்த விருந்து ஒன்றில், அழைப்பில்லாவிட்டாலும் எப்படியோ கலந்துகொண்ட இளைஞன் ஒருவன், விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்த மற்ற பிரபுக்களோடு ‘கலகல’வென்று பேசிக்கொண்டிருந்தானாம். அந்த இளைஞனின் நடவடிக்கையை கவனித்த ரோஹன் பிரபு, ‘யார் இந்த இளைஞன் கூவிக் கூவிப் பேசிக்கொண்டிருக்கிறானே’ என்று கேட்ட பொழுது, தன்னுடைய நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு ரோஹன் பிரபுவிற்கு முன்பாக வந்து நின்று, ‘பரம்பரைப் பெருமையோ, பட்டமோ, குடும்பப் பின்னணியோ இல்லை எனக்கு. ஆனால் என்னுடைய சாதாரண பெயரிலேயே அதற்கான அத்தனை பெருமைகளையும், அதற்குரிய அத்தனை மரியாதைகளையும் நான் தேடிக்கொள்வேன் என்கின்ற நம்பிக்கை எனக்கு உண்டு. என்னுடைய பெயர் வால்டேர்’ என்றான். பிற்காலத்தில் புகழ்பெற்ற ஃபிரெஞ்ச் வரலாற்று ஆசிரியனாக, தத்துவவாதியாக உயர்ந்தவன் அந்த இளைஞன் வால்டேர். 
அதற்குப் பற்பல ஆண்டுகளுக்குப் பின்பாக ‘நான் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்குவளை என்கின்ற சாதாரண கிராமத்தில், ஒரு சாதாராண இசைக் குடும்பத்திலே பிறந்தவன். மிகச் சாதாரணமான விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவன். அப்படி வந்தவனாகிய நான், இன்றைக்கு மிட்டா, மிராசுதாரர்கள் எல்லோருக்கும், அவர்கள் அடிபணிய வேண்டும் என்கின்ற சட்டத்தை இயற்றுகின்ற இடத்திலே இருக்கின்றேன்.  சட்டத்தை இயற்றுகின்ற இடத்திலே இருக்கிறேன் என்று ஏன் பெருமிதமாகச் சொல்கிறேன் என்றால், அந்த சட்டங்கள் ஏழைகளை வாழ்விக்க, பாட்டாளிகளை உயர்விக்க, ஒடுக்கப்பட்டவர்களை ஏற்றமடைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற சட்டங்கள்! ஆகவே அந்த இடத்திற்கு - மிட்டா, மிராசுதாரர்களுக்கு சட்டமிடுகின்ற இடத்திற்கு வந்ததை நான் பெருமையாக, உண்மையிலே மகிழ்ச்சியாக நினைக்கின்றேன்.’ என்று சொன்னார் ஒப்பற்ற ஒரு தலைவர், அவர் முத்தமிழறிஞர் கலைஞர்!  
சில நாட்களுக்கு முன்பாக, ‘இன்று நான் புதிதாகப் பிறந்தேன். என் தமிழகம் புதிதாக பிறக்கட்டும்’ என்று அறிவித்துக்கொண்ட ஒரு தலைவர், ‘நான் கலைஞர் இல்லை, அவரைப்போல எழுதவோ, பேசவோ அல்லது கூட்டத்தைக் கட்டிப்போடுகின்ற அளவிற்கு சொல்லாற்றலோ எனக்கு இல்லை. ஆனால் எனக்கு உழைக்கத் தெரியும். உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்கின்ற, நம் தலைவர் கலைஞர் எனக்குக் கொடுத்த முத்திரையின்படி எனக்கு உழைக்கத் தெரியும்’ என்று அறிவித்தார். 
ஃபிரெஞ்ச் வரலாற்று ஆசிரியர் வால்டேர், முத்தமிழறிஞர் கலைஞர், இன்றைய கழகத் தலைவர் தளபதி, இந்த மூன்று பேரின் குரல்களையும் ஒரு நேர்கோட்டில் வைத்துப் பாருங்கள். மூன்று குரல்களையும் இணைக்கின்ற ஒரே சரடு தனித்தன்மை, தன்னம்பிக்கை. தன்னுடைய முன்னோர்கள் தமக்குக் கொடுத்த செரிவான காலடிகளை எடுத்துக்கொண்டாலும் தன்னம்பிக்கையுடன், தன்னுடைய தகுதி எது, தனக்கு முன்னால் இருக்கின்ற உலகம் எது என்பதைத் தெரிந்திருக்கின்ற நிதானத்தினாலும், தன்னம்பிக்கையாலும் வருகின்ற குரல் அந்தக் குரல். 
தலைவர் கலைஞர், பேரறிஞர் அண்ணா பங்குபெறாத ஒரு மாநாட்டில் தலைமையேற்றபோது, ‘அண்ணா அவர்கள் சென்ற மாநாட்டிலே வெண்ணையாக இருந்தார். இந்த மாநாட்டிற்கு என்னை தலைமை தாங்கச் செய்திருக்கிறார். வெண்ணையாக இருந்த இடத்தில், இன்றைக்கு நான் சுண்ணாம்பாக உங்கள் முன்பாக நிற்கின்றேன். நான் சுண்ணாம்பாக இருந்தாலும், சுண்ணாம்பும் பயன்படாமல் போகாது. வெற்றிலையாக இருக்கின்ற கழக உடன்பிறப்புகளை, பாக்காக இருக்கின்ற பேராசிரியர் போன்றவர்களை என்னோடு இணைத்துக்கொண்டு, 	சுண்ணாம்பாக நான் பணி புரிந்தால், நல்லதொரு தாம்பூலமாக தமிழக மக்களுக்குக் கிடைப்பேன்’ என்றார். தலைவர் கலைஞர் நமக்குக் கொடுத்திருக்கின்ற தாம்பூலம்தான் நம்முடைய இன்றைய கழகத் தலைவர் தளபதி!
இந்தியன் எக்ஸ்ப்ரஸ் நாளேடு தலைவர் கலைஞரிடம், ‘நீங்கள் தளபதியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று ஒரு கேள்வி கேட்கின்றது. ‘ஒரு தந்தையாக நான் தளபதிக்கு எந்தவிதமான கடமையும் ஆற்றவில்லை. ஆனால் ஒரு மகனாக எல்லா கடமைகளையும் அவன் எனக்கு சரிவர ஆற்றியிருக்கிறான்’ என்று பதிலுரைத்தார் கலைஞர். அவர் ஆற்றிய அத்தனை கடமைகளிலும் மிகத் தலையாயக் கடமை, கலைஞருக்கு மெரினா கடற்கரையில் பேரறிஞருக்கு அருகில் நீள்துயில் கொள்கின்ற அந்த இடத்தை சற்றும் நிதானம் தவறாமல், ஒரு தலைவருக்கே உரிய பொறுப்புணர்வோடு பெற்றுத் தந்ததுதான். 
ஆப்ரஹாம்லிங்கன் குறித்து மார்க் டெர்ரான் எனும் அமெரிக்க எழுத்தாளன், ‘இரும்பிலே செய்யப்பட்டிருந்த கொள்கையைப் பேசுபவனாக இருந்தாலும், மிருதுவான மனித மலர்போன்ற இதயத்தைக் கொண்ட தலைவன் அவன்’ எனக் குறிப்பிட்டார்.
எந்த வரலாற்றுச் சம்பவத்தோடு அதை ஒப்பிடலாம் என்றால், தேசிய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த முன்னோடிகளில் ஒருவர், ருஷ்ய அதிபர் லெனினின் நெருங்கிய நண்பரும், ரேடிகல் டெமாக்ரடிக் கட்சித் தலைவருமான எம்.என்.இராய், 1941 ஆம் ஆண்டு தந்தை பெரியாரைச் சந்தித்து, நாஜிகளுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத அத்தனைபேரையும் சேர்த்து மிகப்பெரிய கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்வதற்கு முயற்சி செய்தார். அதனை ஒத்திருந்தது தளபதி அத்தனை தலைவர்களையும் அழைத்து, அன்றைக்கு மதவாதத்திற்கு எதிராக அறைகூவல் விடுத்து, அதே சமயம் ஒப்புயர்வற்ற தலைவருக்குப் புகழ் அஞ்சலியையும் நடத்திய அந்த நிகழ்ச்சி.
ஒரு தலைவன் தன்னுடைய வழிகாட்டிகளாக இருக்கின்ற தலைவர்களிடமிருந்து கொள்கைப் பிடிப்புகளை மட்டுமல்ல, அவர்கள் விட்டுச் செல்கின்ற, அவர்கள் நமக்கு கையளித்துச் செல்கின்ற மானுடப் பன்புகளையும், நேயமான விழுமியங்களையும் - திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒரு குடும்பமாக கட்டிக் காக்கின்ற உணர்சிமிகு உறவுப் பந்தத்தையும் கையெடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு முழு உதாரணமாக தளபதி நம்மோடு இருக்கிறார்!
தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் ஒன்றைச் சொல்கிறேன்: எப்படிப்பட்ட தலைவரை நீங்கள் உங்களுடைய அரசியல் தலைவராக எதிர்காலத்திற்கு தேர்ந்தெடுக்க இருக்கிறீர்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள். இன்றைக்கு அரசியல்வாதிகள் அவதாரம் எடுத்திருக்கின்ற நடிகர்கள் அல்லது புதிது புதிதாக வருகின்ற ‘காளான் தலைவர்கள்’ அத்தனை பேரையும் ஒரு தட்டிலும், எங்களுடைய தளபதியை மறு தட்டிலும் வைத்துப் பார்த்து, சமூகநீதி, சமத்துவம், பகுத்தறிவு, சுயமரியாதை என்கின்ற இந்த நான்கு தூண்களை தலைவர் கலைஞர் வழியில் எவ்வாறு தளபதி எடுத்துச் செல்கிறார் என்பதை எண்ணிப் பாருங்கள்! மதவாத சக்திகள் தலை தூக்குகின்ற காலகட்டத்திலே, நம்முடைய முதல் அரசியல் எதிரி பாரதிய ஜனதா கட்சி என்பதை ஆணித்தரமாகச் சுட்டிக்காட்டிய ஒரே தலைவர் - தமிழகத்தில் தளபதி மட்டுமே! ‘ஆங்கிலேயருக்கு வேறு எதுவுமே புரியாது. அவர்களுக்குப் புரிந்ததெல்லாம் அவர்களை எதிர்த்து நிற்பது ஒன்றுதான்’ என்று சொல்லப்படுவதுண்டு. அவ்வகையில் தான் தளபதி, மதவாத எதிர்ப்பைப் பிரதானமாகக் கையிலெடுக்கின்றார். பகுத்தறிவு பாதையிலே வந்தவர்கள் நாம். பிறருடைய உணர்வுகளை மதிப்பவர்கள் - ஆனால் மூட நம்பிக்கைகளை முற்றாக எதிர்ப்பவர்கள் என உறுதியாக நிற்கிறார்! அந்தத் தெளிவும், துணிவும் இங்கு வேறு யாருக்குண்டு? நாம் கடவுள் எதிர்ப்பாளர்கள் அல்ல - கடவுள் மறுப்பாளர்கள் என்பதைச் சுட்டிக்காட்டி, அனைத்து மதத்தினரையும் அரவணைத்துக் கொள்கிறார். இப் பெருந்தன்மை பேரறிஞரும், கலைஞரும் காட்டிய வழி அல்லவா?
“வான்கோ பதிக்கும்
ஒரு ஆரஞ்சுப் புள்ளி
சூரியனாகிவிடுகிறது.
மற்றவர்கள் தீட்டும்
சூரியன்
ஒரு ஆரஞ்சுப் புள்ளியாகவே
நின்றுவிடுகிறது.”

Dravidian Demathesus அண்ணா:
எண் திசையிலும் இந்தி எதிர்ப்புத் தீ சுடர் விட்டுப் பரவ அதற்கு முழுமுதற்காரணம் மாணவர்களை தூண்டி விட்ட கலைஞரே என்று எண்ணிய காங்கிரஸ் அரசு தலைவரை பாளையங்கோட்டை தனிமைச் சிறையிலே பூட்டி வாட்டியபோது அவரைக் கண்டு திரும்பிய காஞ்சியின் கரிபால்டி அண்ணா,
	“என் தம்பி கருணாநிதி இருக்கும் பாளையங்கோட்டை சிறைச்சாலை, நான் மேற்கொள்ளும் யாத்திரை ஸ்தலம்”
	அப்படி செய்து கொண்டிருந்த நேரத்திலேதான் புதுக்கோட்டையிலே ஒரு கூட்டத்திலே பேச ஒப்புக் கொண்டிருந்தேன். பத்மா என்ற என் முதல் மனைவிக்கு உயிர் போகக்கூடிய நிலை. கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த அருணாசலம் என்ற அருமை நண்பர் என்னை அழைக்க வந்தார். என் மனைவியினுடைய உடல் நிலையைச் சொன்னேன், காட்டினேன். பார்த்துவிட்டு அவரும் சேர்ந்து அழுதார். இருந்தாலும் நீங்கள் கூட்டத்திற்கு வரவேண்டும், மக்கள் ஏமாந்து விடுவார்கள் என்றார், வருகிறேன் என்று புதுக்கோட்டைக்குச் சென்றேன். திரும்பி வர வாகனங்கள் கிடைக்கவில்லை.
ஒரு லாரியிலே ஏறி திருவாரூர் வந்தேன். வந்தபோது நான் பார்த்தது என் மனைவியினுடைய பிணத்தைத்தான். அந்த மனைவிக்கு பிறந்த குழந்தைதான் மு.க.முத்து, அந்தக் குழந்தையை எடுத்துக் கொஞ்சி, அய்யோ பாவம் இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தப்பட்ட, அந்த நேரத்திலும் இந்த சாதாரண தொண்டன் வீட்டிற்கு ஈரோட்டில் இருந்து வந்து ஆறுதல் சொன்னவர்தான் தந்தை பெரியார். எப்படி இந்த இயக்கம் வளர்கிறது என்று எண்ணிப்பாருங்கள்.
ஒரு ஏழைத்தொண்டன்; விளம்பரம் ஆகாத ஒரு தொண்டன், அவன் வீட்டிலே ஒரு துன்பவியல் ஏற்பட்டுவிட்டது என்றால் அவருக்குக்கூட ஆறுதல் சொல்ல நான் வருவேன் என்று அய்யா பெரியார் வந்தாரே அதுதான் இந்த இயக்கத்திற்கு ஊற்றப்பட்ட நீர், எரு. அப்படித்தான் பாளை சிறையிலே நான் இருந்தபோது என்னை வந்து பார்த்து, ‘என் தம்பி "கருணாநிதி அடைப்பட்டிருக்கின்ற பாளையங்கோட்டை சிறைச்சாலை எனக்கு யாத்திரை ஸ்தலம்" என்று அறிஞர் அண்ணா குறிப்பிட்டார். அதுதான் என்னை இன்னும் பல பாளையங்கோட்டை சிறைச்சாலைக்கு போகத் தயார் என்று சொல்லுகின்ற உறுதியை மேற்கொள்ளச் செய்த வார்த்தைகள் அந்த வார்த்தைகள்.
எண் திசையிலும் இந்தி எதிர்ப்புத் தீ சுடர் விட்டுப் பரவ அதற்கு முழுமுதற்காரணம் மாணவர்களை தூண்டி விட்ட கலைஞரே என்று எண்ணிய காங்கிரஸ் அரசு தலைவரை பாளையங்கோட்டை தனிமைச் சிறையிலே பூட்டி வாட்டியபோது அவரைக் கண்டு திரும்பிய காஞ்சியின் கரிபால்டி அண்ணா,
	“என் தம்பி கருணாநிதி இருக்கும் பாளையங்கோட்டை சிறைச்சாலை, நான் மேற்கொள்ளும் யாத்திரை ஸ்தலம்”
	1967ல் நடைபெற்ற சென்னை விருகம்பாக்கம் மாநில மாநாட்டில் வேட்பாளர் பட்டியல் அறிவித்து வரும்போது சைதாப்பேட்டை தொகுதி என்று நிறுத்தி மக்கள் ஆர்வமுடன் யார் என எதிர்பார்க்கும் வினாடிக்குள் “சைதாப்பேட்டை ‘பதினோரு லட்சம்’ என அறிவித்து”
நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள், கோவையில் இரண்டு மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு விழாவிலே ஒரு கருத்தை சொன்னார் - "திமுக என்பது உணர்வுகளின் கலப்பு, உணர்வுகளின் சங்கமம், ரத்தக் கலப்பு மிகுந்த இயக்கம் திமுக. சாதாரண ரத்தக் கலப்பு அல்ல, சுத்தம், சுயமான தமிழ் இரத்தக் கலப்பு மிகுந்த இயக்கம்" என்று சொன்னார்.
உலகில் எத்தனையோ மாபெரும் மனிதர்கள் பிறக்கிறார்கள், வாழ்கிறார்கள், இறக்கிறார்கள். ஆனால் தமக்கு முன்பாகச் சென்றவர்கள் விட்டுச் சென்ற அந்தக் காலடிகளில் பின்பாகத் தொடர்ந்து சென்று, அவர்களுடைய அடியொட்டியே நடந்து செல்பவர்கள் யாரும் பிறவித் தலைவர்களாக உருமாறுவதில்லை; தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. தனக்கு என்று தனித்ததொரு முதல் பயணத்தை துவக்கி, அதுகாரும் யாரும் நடந்து செல்ல முடியாத, நடந்து செல்ல தேர்வு செய்திறாத பாதையை தேர்வு செய்து, தீயை தாண்டுகின்ற துணிச்சலான முடிவை எடுக்கின்றவனே உலகத்தின் மிகப் பெரிய தலைவனாகிறான்.
தலைவர் கலைஞர் அவர்களுடைய வாழ்க்கையில் சுயமரியாதையையும், பகுத்தறிவையும், எப்படி தமிழ்நாட்டையும் தமிழனையும் இரு கண்கள் என பாவித்து வந்தாரோ, அதுபோலவே இறுதிவரை பாவித்தவர். ஒரு முறை தலைவர் கலைஞர் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. ‘குமுதம் பத்திரிகை உங்களையும், திரு.கி.வீரமணி அவர்களையும், அவர்கள் ஆத்திகர்களாகி நெடுங்காலமாகிவிட்டது என்று சொல்லியிருக்கிறதே, அது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?’ அதற்கு தலைவர் கலைஞர் அவர்கள் பதில் சொல்கின்றார் ‘குமுதம் இரவிலே மலருகின்ற ஒரு மலரல்லவா, இருட்டிலே அதற்குக் கருப்புச் சட்டை தெரியாது’ என்று சொன்னாராம். தலைவர் கலைஞர் அவர்களிடம் மாப்பிள்ளைக் குப்பம் என்ற ஊரிலிருந்து கி.முருகன் என்பவர் ஒரு கேள்வி ‘தேசிய நீரோட்டம் என்கிறார்களே அதற்கு விளக்கம் என்ன? தலைவரே எனக்கு விளங்கவில்லை.’ என்று கேட்கின்றார். அதற்கு ‘காது கிழிய, வாய் நீட்டி தேசியத்தைப் பற்றிப் பேசிவிட்டு, காவிரி நீர் ஒரு துளிகூட தரமாட்டோம், தரமாட்டோம் என்று சொல்வதுதான் தேசிய நீரோட்டம்’ என்று பதில் சொல்கின்றார். இன்றைய காலகட்டத்திற்கும் பொறுத்தமான தலைவர் கலைஞர் அவர்களுடைய பதில்களும், witch அல்லது humor என்று சொல்லப்படுகின்ற அந்த நேரத்திலே வருகின்ற தெரிப்பான அதே சமயம் அரசியல் பூர்வமான பதில்களும் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டு இளைஞர்களும் யுவதிகளும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள். அதனைத்தான் நாங்கள் இந்தப் புகழ் வணக்கத்தின் மூலம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
“இந்திய வரலாறு என்பது என்ன - 30 அடி உயரமுள்ள அரசன் 30 ஆயிரம் ஆண்டுகள் அரசாண்டான் என்று சொல்வது தானே?”
இந்திய புவியியல் மட்டுமென்ன? பாற்கடல் பற்றியதும், வெண்ணெய்க் கடல் பற்றியதும் தானே" என்று எள்ளி நகையாடியது யார் தெரியுமா? Lord Macaulay. இன்றைக்கு நாம் தூக்கிச் சுமந்து கொண்டிருக்கின்ற ஆங்கிலக் கல்வியின் பிதாமகன். அவனது கூற்றுக்கு மாறாக மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான தமிழனது அகம், புற வரலாற்றை ஐந்தினைப் புவியியிலைத் தன் பேச்சிலும், எழுத்திலும், மூச்சிலும் உயர்த்திப் பிடிக்கின்ற, இந்திய அரசியல் வரலாற்றை மாற்றுகின்ற, தீர்மானிக்கின்ற தமிழகச் சக்தியாக விளங்குகியவர்.
இளைஞர் மனதைக் கெடுத்த குற்றத்திற்காக மரணதண்டனை விதிக்கப்பட்டபோது, தத்துவஞானி சாக்ரடீஸ் ஏதென்ஸிற்குத் தப்பியோடுவதற்கு உதவ முன்வந்த உதவிகளை மறுத்தார். தப்பியோடுதல் தன் வாழ்வு முழுவதும் அந்நகரின் மீது கொண்டிருந்த உறுதிப்பாட்டுக்கு மாறானது என்றும், அதுவரை வலியுறுத்திய பகுத்தறிவுக்கு எதிரானது என்றும் கூறினார்.
கிரேக்கத்தின் அரசியல் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டது ரோமானியர்களின் அரசியல் அன்பை அடிப்படையாகக் கொண்டது. தலைவர் கலைஞரின் அரசியலோ பகுத்தறிவும், அன்பும் இணைந்ததொரு அற்புதக் கலவை.
சே தனது பெற்றோர்க்கு எழுதிய கடிதத்தில் “நொய்ந்து போன என் கால்களையும், ஓய்ந்துபோன எனது நுரையீரலையும் நுட்பத்தோடு சரிசெய்து வைத்திருக்கிறேன்.”
‘’சரியான தலைவன், தனது சிந்தனைகளைத் தன் குருதிக்குள், ஆத்மாவுக்குள் உடம்புக்குள் வாழ்ந்து பழகுவான்.” பிறகே அதைத் தன் மக்களுக்கு வழங்குவான்.
நிறத்தாலும் குருதியாலும் (இரத்தத்தாலும்) இந்தியர்களாகவும் அறிவாலும் உணர்வாலும், சிந்தனையாலும் ஆங்கிலேயர்களாகவும் உள்ள ஒரு சமூக அமைப்பை உருவாக்குவதே ஆங்கிலக் கல்வியின் நோக்கம் என்பதை மெக்காலே தெளிவுப்படுத்தினார்.
 
தலைவர் கலைஞர் அவர்கள் 1989 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்கின்றார். அதிகாலை முதலே சிந்தனை வயப்பட்டவராக இருந்த தலைவர் அவர்கள், தன்னுடைய உதவியாளர் அய்யா திரு.ராஜமாணிக்கத்தின் மூலம் ‘தொலைபேசியிலே கணபதி சபதியை தொடர்பு கொள்ளுங்கள்’ என்கிறார். கணபதி சபதி தொலைபேசியிலே அவருக்குக் கிடைத்த உடன், அவரிடத்திலே ‘சபதியாரே வள்ளுவருக்கு கன்னியாகுமரியிலே ஒரு சிலை அமைக்க வேண்டும். ஏனென்றால் நாடு இங்கே முடிகிறது என்கிறார்களே, அது அப்படி அல்ல. நாடு இங்கேதான் தொடங்குகிறது என்பதுபோல இங்கே சிலை வைக்க வேண்டும். இந்தியா தமிழ்நாட்டிலிருந்துதான் தொடங்குகிறது என்பதுபோல சிலை வைக்க வேண்டும். அந்தச் சிலை வள்ளுவர் குமரியிலிருந்து இமயத்தைப் பார்ப்பதுபோல அமைய வேண்டும்’ என்கின்றார். நாம் வள்ளுவரையும், இளங்கோவையும், கம்பனையும் அத்தனை சங்கத் தமிழ் புலவர்களையும் பாராட்டுபவர்கள்தான். ………………… என்ற நாடகத்தை எழுதியவர் ஜார்ஜ் பெர்னாட்ஷா. அந்த நாடகத்தில் வருகின்ற கதாநாயகி ஒரு பூக்காரி. தன்னுடைய தாய் மொழி ஆங்கில மொழியினுடைய பெருமையைக் குறித்து அந்தக் கதாநாயகி அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, அந்தக் கதாநாயகியிடம் ‘உன்னுடைய தாய்மொழி ஷேக்ஸ்பியரின் உன்னத மொழி, மில்டனுடைய கவித்துவ மொழி, பைபிளில் கடவுளின் மொழி இதனை நீ நினைவிலே வைத்துக்கொள்ள வேண்டும்’ என்றார். ஒரு படைப்பாளியாக, எழுதுவதற்கு உந்துதல் கொடுக்கின்ற எத்தனையோ படைப்புகளை எனக்கும் இந்த தமிழ் கூறும் நல் உலகத்திற்கும் அளித்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். நான் எப்பொழுதும் மிகப் பெருமையோடு சொல்வேன், ‘என்னுடைய தமிழ்மொழி சங்கப் புலவர்கள் பெற்றெடுத்த மொழி. வள்ளுவரும், தொல்காப்பியரும், இளங்கோவும், கம்பனும் வார்த்தெடுத்த மொழி. பாரதியாரும் அவருக்குப் பின்னான பாரதிதாசனும் புத்துயிர் ஊட்டிய மொழி. ஆனால் திராவிடச் சூடேற்றி, மானுடம் என்கின்ற மயிலிறகு மூலம் தமிழக மக்களுக்கு இனமான உணர்வை ஊட்டிய தலைவர் கலைஞர் அவர்களுடைய தனிமொழி நான்காம் தமிழ்மொழி, அதனைப் பேசுகின்றவள் நான்.’

தளபதி அவர்கள் தலைவராகப் பொறுப்பேற்றவுடன், ‘நான் இந்த உலகத்தைப் புதிதாகப் பார்க்கின்றேன். எனக்கு ஒரு நல்ல இனிமையான கனவு இருக்கிறது’ எனத் தொடங்கி, ‘எனக்குப் பின்பாக வரும்படி நான் உங்களை அழைக்கவில்லை. என்னோடு இணைந்து வாருங்கள்.’ என்றழைத்து, ‘நாம் முன்னேற்றப் பாதையிலே தொடர்ந்து முன்னேறுவோம்.
லெனின் வாழ்வில் நடந்ததாக ஒரு சம்பவம் சொல்லப்படுவதுண்டு. ஒரு முறை லெனின் அவர்கள் தன்னுடைய வரவேற்பரையைில் கடிதம் ஒன்றை எழுதிக்கொண்டிருக்கும்பொழுது, மிக முக்கியமான நபர் அவரைச் சந்திக்க வருகின்றார். அந்த நபரைப் பார்த்து ‘சற்று காத்திருங்கள். நான் ஒரு முக்கியமான வேலையாக இருக்கிறேன். சற்று பொறுத்து உங்களைச் சந்திக்கிறேன்’ என்று சொல்கிறார் லெனின். அந்த முக்கியமான நபரும் லெனினுக்காகக் காத்திருக்கின்றார். காக்க வைக்கப்பட்ட அந்த நபர் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கி. லெனின் அவரை காக்க வைப்பதற்காகச் சொன்ன காரணம், ‘நான் மனம் சோர்ந்து இருக்கின்ற என் கட்சித் தொண்டனுக்கு உற்சாகத்தையும், ஆர்வத்தையும் தந்து ஒரு கடிதத்தை எழுதிக்கொண்டிருக்கிறேன். அதனை முடித்துவிட்டு உங்களைப் பார்க்கிறேன்.’

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *