அல்வா + அருவா = ஆண்கள்

கவிஞர்.முனைவர்.தமிழச்சி தங்கபாண்டியனோடு  ஒரு ஜாலி பேட்டி…கல்கி வார இதழுக்கு எடுத்தது…
பேட்டி: அமிர்தம்சூர்யா
——————————————————————————————
தம்பி தங்கம் தென்னரசு தலையில் கொட்டியது உண்டா?
“போன மாதம் கூட காதைப் பிடிச்சித்
திருகினேன். ரொம்ப
சேட்டை பண்ணுவான்.”

ஆசைப்பட்டுப் போட்டுப் பார்த்த டிரஸ்?
“அப்பாவின் சட்டை, தம்பியின் லுங்கி. தங்கப் பதக்கம் சிவாஜி @பால் இருக்கும் கணவரின் காக்கிச் சட்டையைத்தான் தொட்டதே இல்லை.”

உங்க அப்பா-அம்மா, உங்க தம்பி எல்லோரும் காதல் கலப்பு மணம்.    ஒருவேளை உங்க மகள் காதல் கலப்பு மணம் ர்செய்தால் ராமதாஸை அழைப்பீங்களா?
“அவரை ஏம்பா வம்புக்கு இழுக்கிறே? நான் கூப்பிட்டா என் அன்புக்கு வருவாரு.”

தமிழக முதல்வரை நேருக்கு நேர் சந்தித்தால் என்ன கேட்பீர்கள்?
“எல்லா திறமையும் இருக்கு. இன்னும் ஏன் எழுத்தாளரா மாறலைன்னு    கேட்பேன்.”

கவிஞர், ஆதரவாளர், பேச்சாள ரான அம்மணிக்கு இவ்வளவு அலங்காரம்
தேவையா?
“இந்தத் தகுதியில் உள்ள வங்களுக்கு அலங்காரம் அவ சியமில்லைன்னு யாரும் தீர் மானிக்க முடியாது.”

இல்ல… கொஞ்சம் ஓவரா இருக்கே?
“அதிகம் என்பது உங்க பார்வை. சங்கக் காலப் பெண்களைப் போல அளவாதான் என்னை நான் அலங்கரிச்சிக்கிறேன். நான் எனக்காக, என் மகிழ்ச்சிக்காக, என் ரசனைக்காக அலங்கரிச்சிக்கிறேன். மற்றவர்களுக்காக இல்லை.”

தமிழச்சி, தங்கத்தைப் பயன்படுத்தாதது ஏன்? சமீபத்தில் செய்த ஷாப்பிங்?
“தங்கம் எனக்குப் பிடிக்காது. அது பகட்டானது. ஒரு வன்முறை யான கவர்ச்சி தங்கத்தில் உண்டு. கபாலீஸ்வரர் கோயிலைச் சுற்றி யுள்ள குறத்திகள் என் தோழிகள். அவர்களிடம்தான் நான் ஆபரணங்கள் வாங்குவேன். சமீபத்தில் குறத்திக் கலைஞர்களிடம் நெல்லில் செய்த மணி வாங்கினேன்.”

உங்க கட்சித் தலைவர் எல்லோரும் சீருடைதான் போடணும்னு உத்தரவு
போட்டால்…?
“ஐயா மன்னிச்சுடுங்க… என்பேன்.”

ரசித்த நடிகர்கள் யார்?
“நான் கமலின் ரசிகை. மம்முட்டி, அர்ஜுன் ரொம்பப் பிடிக்கும்.”

ஆக… தமிழச்சிக்கு மலையாள, கன்னட நடிகரைத் தான் பிடிக்குது?
“ஏம்பா… இப்படி வில்லங்கமாக்குறே..!”

அழகா இருக்கேன்னு யாராவது லவ் பண்ணா என்ன பண்ணுவீங்க?
“அது அவங்களோட பிரச்னை. கண்ணியமான புன்னகையால் அக் காதலைத் தவிர்த்துடுவேன்.”

புறக்கணிச்சிடுவீங்க?
“இல்லை அந்தச் சொல்லில் வன்மம் இருக்கு… தவிர்த்துவிடுவேன்.”

உங்களோட நிக் நேம் என்ன?
“”ம்ஸ், சில பேர் டாலி, பலர் லட்டுன்னு கூப்பிடுவாங்க.”

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ன்னு கேட்டுட்டா?
“என் மீசைக்கார புருஷன், கேக்கிறவனை பூந்தியாக்கிடுவாரு.”

காதல் கவிதைகள் எழுதியதுண்டா?
“படிக்கிற காலத்திலேர்ந்து பாதுகாப்புக்கு ஆட்கள் கூட@வ இருந்தா எங்க காதலிக்கிறது? காதலிக்கவே இல்லையே. அப்புறம் எப்படி காதல் கவிதை? உனக்காக ஒரு புனைவு காதலை உருவாக்கினாத்தான் உண்டு.”

சமையல்கட்டுக்குப் போனதுண்டா?
“கடைசியா நான் சமைச்சது கல்யாணம் ஆன புது”ல. அப்போ என் கணவர், ‘அப்பாவுக்கு வாய் வழியாக இதயத்தை அடையும் வழியைச் சொல்லிக் கொடுங்க’ என்று கடிதம் எழுதினார். வாய் வழியா கவிதை சொல்லி என்னால் இதயத்தை அடைய முடியும். இதயத்தை அடைய சமையல்கட்டு தேவையில்லை
என்றேன்.”

விவசாய வேலை செய்ததுண்டா?
“களை பிடுங்கி இருக்கேன்…”

ஒழுங்கா இருந்தா எதுவும் பிடிக்காதோ?
“எதுவும் ஜடத்தன்மையோடு ஒழுங்கா இருந்தா அதுவும் மியூஸியம்தான் – நிலமா இருந்தாலும் அப்பப்போ கலைத்துப் போட்டால்தான் புதுசா துளிர்க்கும்.”

கடவுள் நம்பிக்கை உண்டா?
“கடவுள்னா எனக்கு அலர்ஜி.”

பாலா துணை இயக்குனர் வேலைக்குக் கூப்பிட்டா…?
“உடனே போவேன். சரண்யா மாதிரி நடிக்க ஆசைதான். ஆனால் அலங்காரம் பண்ண முடியாதே. அதனாலே இப்போ நடிக்கிற ஐடியா இல்லை.”

ஸ்லிம் சீக்ரெட்! என்ன?
“காலை: – வெந்நீரில்  தேனும், எலுமிச்சம் பழமும் கலந்து வெறும் வயிற்றில் குடிப்பேன். பிறகு, ஊறவைத்த பாதாம்-2, பூண்டு-2 பல் சாப்பிடுவேன். பிறகு ஒரு மணி நேரம் உடற்பயிற்சி. அப்புறம் சுண்டல் – 1 கப், கொஞ்சம் பப்பாளி, 2 தம்ளர் ஆரஞ்சு ஜூஸ்… மதியம்: ஒரு கப் சாதம் கீரையோடு.
இரவு:  கொஞ்சம் சின்ன வெங்காயத்தோடு கூழும், மலைவாழை – 1,  இதுதான் என் டயட் சீக்ரெட். பல வருஷம் இப்படித்தான்.”

ஒரு வரியில் ஆண்களை வர்ணிக்கவும்…
அல்வா + அருவா = ஆண்கள்

சும்ஸுக்குப்  பிடித்த ஜீவன்?
“கறுப்பு யானை.”

________

ORIGINAL ARTICLE