786828515 1643298590698228 7048019352083892130 n

25.08.2026 அன்று, கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் கூட்டத்தில் கலந்து கொண்டேன். இக்கூட்டத்தில், 2026ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் செயல்பாடு மற்றும் 2030ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள விளையாட்டு உள்கட்டமைப்பு மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்த எனது கருத்தை முன்வைத்தேன். இத்திட்டங்களை தாமதமின்றி விரைந்து நிறைவேற்றுவதுடன், மாநிலத்தில் உள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு வசதிகளுக்கு மேலும் வலுவான ஆதரவு வழங்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினேன்.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *