07.08.2026 அன்று, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பாராளுமன்ற மாளிகை இணைப்புக் கட்டிடத்தில் நடைபெற்ற கல்வி, மகளிர், குழந்தைகள், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறைக்கான துறைசார் நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டேன்.
கூட்டத்தில் “தேசிய தேர்வு முகமை (NTA) சீர்திருத்தம் மற்றும் வலுப்படுத்துதல்” குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் நியாயமான, நம்பகமான தேர்வு முறையை உறுதி செய்வது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது.





No comment