15.07.2026 அன்று – புதுச்சேரியில், திரு. முகுல் வாஸ்னிக் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை நிலைக்குழுவின் கூட்டத்தில் பங்கேற்றேன்.
இக்குழு, புதுச்சேரி அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், பொதுத்துறை வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டது.
புதுச்சேரியில் பெண்களின் மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெடுப்புகளை ஆய்வு செய்ததுடன், புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் பெண்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு (CSR) சார்ந்த திட்டங்களையும் இக்குழு ஆய்வு செய்தது.


No comment