76765611 3404192672931873 590776784539090944 n

04-11-2019 அன்று, காலை 10 மணி அளவில் , தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட, சோழங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி, மண்டலம் 14 புழுதிவாக்கம் மாநகராட்சி அலுவலகத்தில், எனது தலைமையிலும், சோழங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அரவிந்த்ரமேஷ் முன்னிலையிலும், கழக பகுதிச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் சென்னை மாநகராட்சி உதவி ஆணையர், மண்டலம் 14, சோழங்கநல்லூர் வட்டாட்சியர், கண்காணிப்பு பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியம் தெற்கு, கே.கே. நகர், சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை, துப்புறவுத்துறை, வருவாய்த்துறை, போக்குவரத்து மற்றும் சாலைத்துறை, குடும்பநலத்துறை, பூங்காதுறை, மழைநீர் வடிகால்வாய் துறை, மக்கள்நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்ட “மாபெரும் மக்கள் குறை தீர்க்கும் முகாம்” நடைபெற்றது. இம்முகாமில் பொதுநலச்சங்க நிர்வாகிகள், தன்னார்வத் தொண்டு நிறுவன நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களின் கோரிக்கை மனுக்களை அளித்தார்கள்; அவற்றை உரிய துறை அதிகாரிகளிடம் கொடுத்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.


No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *