601371641 1433203125041110 8875783439254202741 n

16.12.2025 அன்று, மாண்புமிகு ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு. ஜெ. பி. நட்டா அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து காசநோய்க்கு (Tuberculosis) எதிரான போராட்டத்தில் இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நடைபெற்ற கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களின் தலைமையின் கீழ், தமிழ்நாடு சுகாதாரத் துறை மேற்கொண்டு வரும் சிறப்பான பணிகள் மற்றும் அடைந்துள்ள முன்னேற்றங்களை நான் வலியுறுத்திப் பேசினேன்.

குறிப்பாக, பாதிப்புக்குள்ளாகக்கூடிய மக்களை மையமாகக் கொண்டு, சமூகத்தின் பங்களிப்புடன் கூடிய விழிப்புணர்வை வலுப்படுத்துதல், காசநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல் மற்றும் தொடர்ந்து பொதுச் சுகாதார ஆதரவை உறுதி செய்தல் குறித்து மேலும் விவாதங்கள் நடைபெற்றன.


No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *