COVID – 19


தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட, மயிலாப்பூர் – 173வது வட்டம், கோவிந்தசாமி நகர், இளங்கோ தெருவில் வசித்து வரும் 130 குடும்பங்களின் குடும்ப அட்டைகள், இடம்பெயர்வு காரணமாக பெரும்பாக்கம் நியாய விலை கடைக்கு மாற்றப்பட்டுள்ளன. எனினும் இளங்கோ தெரு மக்கள் தொடர்ந்து அங்கு வசிக்க நீதிமன்றத்தில் முறையீடு செய்து வழக்கு நிலுவையிலுள்ளது, இளங்கோ தெரு மக்கள் தாங்கள் வசிக்கும், சென்னை – மயிலாப்பூர் KG025 நியாய விலை கடையிலேயே கொரோனா நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, என்னிடம் கோரிக்கை வைத்தனர்.உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் டாக்டர் இரா.ஆனந்தகுமார் இ.ஆ.ப, அவர்களை தொடர்பு கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுத்து, நிவாரணம் கிடைக்க ஆவன செய்யுமாறு நான் கேட்டுக்கொண்டதின் பேரில்,இன்று (22.05.2021), அப்பகுதி மக்களுக்கு மயிலாப்பூர் KG025 நியாய விலை கடையிலேயே, கொரோனா நிவாரணம் முதல் தவனை ரூபாய் 2000 வழங்கப்பட்டது.இந்நிகழ்வை, தென்மேற்கு மாவட்டப் பொறுப்பாளர், மயிலை திரு.Mylai velu எம்.எல்.ஏ -வுடன் கலந்துகொண்டு துவக்கி வைத்தேன்.உடன், பகுதிச் செயலாளர்கள் திரு.முரளி, நந்தனம் திரு.மதி, கழக நிர்வாகிகள், முன்னணியினர், உடன்பிறப்புகள்.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *