ஒன்றிய அரசின் #SAGY திட்டத்தின் கீழ் நான் தத்தெடுத்துள்ள, சித்தாலப்பாக்கம் கிராமத்தில், எனது முன்னெடுப்பில், #UnitedWayofChennai & #SymrisePvtLtd நிறுவனத்தின் நிதி உதவியில், 1 கோடி மதிப்பீட்டில், புணரமைக்கப்பட்ட நல்ல தண்ணீர் குளம், குளக்கரை மற்றும் 100 சோலார் விளக்குகளை,MLA அரவிந்த் ரமேஷ் , செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தோம். இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் – ஒன்றியக் குழு உறுப்பினர் திரு.ரவி ஒன்றியச் செயலாளர் திரு.வெங்கடேசன், ஒன்றியப் பெருந்தலைவர் திருமதி.சங்கீதா பாரதிராஜன் சித்தாலப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.ரவி, மாவட்ட கழக, ஒன்றிய கழக நிர்வாகிகள்,முன்னணியினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர் .நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற சமூக அக்கறையுடன்,CSR நிதி மூலம், குளம் சீரமைப்பு மற்றும் சோலார் விளக்குகள் அமைத்து தந்த #UnitedWayofChennai & #SymrisePvtLtd குழுவினருக்கு எனது அன்பும், நன்றியை தெரிவித்துக்கொண்டேன் .
No comment