மத்திய அரசின் #SAGY திட்டத்தின் கீழ் தத்தெடுக்கப்பட்டுள்ள, சோழிங்கநல்லூர் – சித்தாலப்பாக்கம் ஊராட்சியில், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூ.10,50,000 (10 லட்சத்து 50 ஆயிரம்) மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மூன்று உயர் கோபுர மின்விளக்குகளை, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இயக்கி வைத்தார். இந்நிகழ்வில் MLA அரவிந்த் ரமேஷ் , பிரபாகர் ராஜா , செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு.ராகுல் நாத் இ.ஆ.ப,புனித தோமையர்மலை தெற்கு ஒன்றியச் செயலாளர் மேடவாக்கம் திரு.ரவி, கழக நிர்வாகிகள், முன்னணியினர், அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
No comment