ஒன்றிய அரசின் SAGY திட்டத்தின் கீழ் நான் தத்தெடுத்துள்ள சித்தாலப்பாக்கம் கிராமத்தில், “ஜல் ஜீவன் மிஷன் (JJM) 2021 – 2022” திட்டத்தின் கீழ், ரூ.459.95 இலட்சம் மதிப்பீட்டில் 9 மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா .சுப்பிரமணியன் திறந்து வைத்த நிகழ்வில் முன்னிலை வகித்து, MLA அரவிந்த் ரமேஷ் – வுடன் நானும் கலந்துகொண்டேன்.இந்நிகழ்வில், ஒன்றியச் செயலாளர், ஒன்றியக் குழு உறுப்பினர் திரு.ரவி, ஒன்றியக் குழுத் தலைவர் திருமதி.சங்கீதா பாரதிராஜன், ஊராட்சி மன்றத் தலைவர் திரு.ரவி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திருமதி.அம்சவேணி குணா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திருமதி.ரமணி கணேசன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
No comment