இலக்கிய விழா கருத்தரங்கம் – 30.12.2008

"பயிர் போன்றார் உழவருக்குப்
பால் போன்றார் குழுந்தைக்குப்
பசுந் பொற் கட்டித் தயிர் போன்றார்  பசித்தவர்க்குத், 
தயிர் போன்றார்  ஏழையவர்க்குத், 
தகுந்தவர்க்குச் செயிற் தீர்த்த தவம் போன்றார்,
செந்தமிழ் நாட்டில் பிறந்த மக்கட்கெல்லாம்
உயிர் போன்றார்"" - என் தலைவர் 
நம் தமிழினத் தலைவர் -
"மொழி வலிமை காக்கும் அறப்போர் முகத்தும்,
இன உணர்வுச் சூடேற்றும் அறிவுப்போர் முகத்தும்,
சமூக நீதி காத்திடும் கடமையாற்றும் களத்தும்,
மக்களாட்சி மாண்புறச் செய்யும் சட்டமன்றக் களத்தும்,
கலை உலகில் மறுமலர்ச்சி மணம் பரப்பும் தடத்தும்,
இலக்கிய உலகில் தமிழ்ச்சுவை பெருக்கும் தடத்தும்,
அவர்தம் அறிவுத்திறன் படைத்த சாதனை பலப்பல"
எனப் பேராசிரியரால் புகழப்பட்ட இன்று, தைத்திருநாளைத் தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்து,
நம் தலைவரது தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின், தலைமை இலக்கிய அணி எழுச்சியுடன் நடத்துகின்ற தமிழர் திருநாள்  - பொங்கல் பெருவிழாவின் விழா நிறைவுப் பேருரையாற்ற வந்திருக்கின்ற கழகத்தின் பொதுச் செயலாளர், மாண்புமிகு நிதியமைச்சர்
‘பன்மொழியில் பல்கலையில் ஆய்வும் பழந்தமிழாம்
பொன் மொழியைத் தம்முயிராய்ப் போற்றும் பெரு மாண்பும்
இன்மொழியில் நாட்டின் இருளகற்றும் நற்றினறும்
என் மொழிவேன் ! அன்பழகர் இந்நாட்டின் பொன் மணியே !
எனப் புரட்சிக் கவிஞர் புகழ்ந்துரைத்த ....
வணக்கம்,
	தொடக்கவுரையாற்றிய கழகத்தின் பொருளாளர் மாண்புமிகு நா.வீராசாமி அவர்களுக்கும், அறிமுக உரையாற்றிய கழகத் துணை பொதுச் செயலாளர் அன்பிற்குரிய திருமதி. எஸ்.பி.சற்குணபாண்டியன் அவர்களுக்கும், என் மரியாதையும், வணக்கமும்.
	விழிவின் தலைவர் பேராசிரியர் முனைவர் மு.பி.மணிவேந்தன் அவர்களுக்கும், வரவேற்புரையாற்றிய தஞ்சை கூத்தரசன் அவர்களுக்கும், கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய மதிப்பிற்குரிய பேராசிரியர் சாலமன் பார்பையா அவர்களுக்கும், புலவர் திருமதி இந்திரகுமாரி, போராளி பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களுக்கும், கவிச்சுர் கவிதைப்பித்தன் அவர்களுக்கும், நன்றியுரையாற்ற இருக்கின்ற என் தந்தையின் நெருங்கிய தோழர், பெரியவர் திரு.அமுதன் அவர்களுக்கும் மற்றும் வாழ்வில் முன்னிலை வகிப்போருக்கும் வணக்கம். அரங்கத்தில் தமிழர் என்றும் உணர்வுடையாராய்க் கூடியுள்ளவர்க்கும், நம் கழகத் தோழர்களுக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
	``ஒரே தாயின் வயிறு நம்மையெல்லாம் பெற்றெடுக்க வலிமையுடையதாக இருக்காது - தாங்காது என்பதால்தான் நாமெல்லாம் வெவ்வேறு தாய்மார்களின் வயிற்றில் பிறந்திருக்கிறோம்`` என்று நம்மை ஒரு குடும்பமாக உணர்த்திய பேரறிஞரின் கூற்றுப்படி இங்கு மங்கல இசையுடன் ஆரம்பிக்கப்பட்ட இவ்விழா சர்.பிட்டி.தியாகராயரின் பெயரைத் தாங்கிய - தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தைத் தோற்றுவித்த - சர்.பிட்டி.தியாகராயரின் பெருமைமிகு பெயர் தாங்கிய அரங்கத்திலே நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
	சர்.பிட்டி.தியாகராயர் பெரும் செல்வந்தர்.  அவர் வாழ்விலே நடந்ததொரு திருப்புமுனை நிகழ்ச்சி ஒன்றினை நம் மதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்கள் ஓரிடத்திலே ‘கும்பாபிஷேக நன்கொடை’ எனக்குறிப்பிடுகிறார்.  தியாகராயருடைய தொழிற்சாலையிலே தயாரிக்கப்பட்ட தோல், பிட்டி என்ற அடையாளமிடப்பட்டு இலண்டன் மார்கெட்டுக்குச் செல்லுகிறபோது, அந்த அடையாளத்தைப் பார்த்தாலே தரமான தோல் என்று அதிக விலை கொடுத்து வாங்குவார்கள்.  அப்படிப்பட்ட தியாகராயர், மைலாப்பூர் கோயில் குடமுழுக்கு ஒன்றுக்குத் தன்னிடம் நிதி கேட்டபோது, 5000 ரூபாய் நிதி கொடுத்தார்.  ஆனால் குடமுழுக்கு நடைபெற்ற இடத்தில் பரண்கள் போடப்பட்டு, அதில் பிராமணர்கள் ஏறி நிற்க, செட்டியாரைக் கீழே ஓர் ஓரத்திலே உட்கார வைத்தனர்.  அன்று வேதனைப்பட்ட தியாகராயர், சமூக நீதிக்காகத் தொடங்கி வைத்த அந்த இலட்சியத்தைத்தான், இன்றைக்கும் நமது கழகம் வளர்த்துக் கொண்டிருக்கிறது.  இதோ அவரது பெயரிலேயே நிறுவப்பட்ட அரங்கிலே நாமனைவரும் ஒன்று கூடி,
	``தென்திசையைப் பார்க்கிறேன்
	என்சொல்வேன் என்றன் சிந்தையெல்லாம்
	தோள்களெல்லாம் பூரிக்குதடா!
எனும் ``வீரத் தமிழன்`` குறித்துச் சிறப்பித்த பாரதிதாசனின் வரிகளோடு தமிழர் திருநாளை நினைவு கூர்கின்றோம்.
	1973ஆம் ஆண்டு, சென்னையில் இளங்கோவடிகள் விழாவில், நமது தலைவர் ``தமிழன் உயர்கிறான், தமிழ் உயர்கிறது, தமிழர்களின் வரலாறு உயர்கிறது, தமிழனின் தன்மானப்பற்று உயர்கிறது என்பதற்கெல்லாம் அடையாளமாகத்தான் இன்று இந்த விழா நடைபெறுகிறது`` எனச் சொன்னார்.  தமிழனை உலகளவில் உயர்த்திய வரலாற்றுப் பெரு நிகழ்வாய் - தைத் திருநாளை - தமிழ்ப் புத்தாண்டாய் அறிவித்திட்ட அவர் தம் ஆட்சி, தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் எனும் கோரிக்கையின்போது, ``இமிழ் கடல் வரைப்பில் தமிழகம் - என்று சிலப்பதிகாரத்தில் இருக்கிறது`` என்று உலகத்திற்குத் தமிழகத்தின் பெருமையை உணர்த்திட்ட, நம் தலைவரது ஆட்சி -  ஒரு பொற்கால ஆட்சி. பேரரசன் அகஸ்டஸ் காலமே ரோமப் பேரரசின் பொற்காலம் என்பார்கள் அதன் இலக்கிய வரலாற்றிலே.  அத்தகைய அகஸ்டஸ் காலமான இன்றுதான் தமிழர் திருநாளும் - பொங்கல் திருநாளும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டு நினைவு கூறப்படுகிறது.  நமது கழகத்தின் இலக்கிய அணியினரால் இப்படிச் சிறப்பான முறையில் மகிழ்ச்சியினைக் கொண்டாடும் முகமாகத்தான் இன்று இந்த விழாவும் நடைபெறுகிறது.
	உலக மக்களுக்கு நாகரிகம் கற்பித்தவர்கள் தமிழர்கள்.  முதன் முதலில் உழவுத் தொழிலையும், கடல் வாழ்வையும் வளர்த்த தமிழர்கள்தான்,  உலகெங்கும் பேரோடியிருக்கும் பண்பாட்டிற்கு தொப்புலாய் இருந்தவர்கள். உலகில் முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும், நகரமைப்பும், நாடமைப்பும் கண்டவர்கள் நாம்.  உலகில் முதன்முதலில் மொழியிலக்கணமும், கலையும், ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும், பிற கூறுகளும் வகுத்தவர்கள் நாம் என்பதை மூதறிஞர் ந.சி.கந்தையா பதிவு செய்கிறார்.
	வியன்னா அருங்காட்சியகத்தில் 1,500 ஆண்டுகளுக்கு முன் நடந்த தமிழரொருவரின் கடல் வணிகம் குறித்த பதிவு ஒன்று இருப்பதை, தொல்லியல் அறிஞர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.  ஹோசோனர் எனும் ஜெர்மன் ஆசிரியர் ஐரோப்பாவிலும், மேற்கு ஆசியாவிலும் அநேக இடப்பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக இருப்பதைக் காட்டி இருக்கின்றார்.
	கடல் கொண்ட குமரிக் கண்டத்திலே தோன்றிய தமிழர் நாகரிகத்தின் தென்னாடில் திராவிட நாகரிகமாக மலர்ந்து, சிந்துவெளி நாகரிகமாகப் படர்ந்து, பின் சுமேரியன் நாகரிகமாக விரிந்தது என்கிறார் புகழ்மிக்க வரலாற்று ஆராய்ச்சியாளர் ழநுசுருளு - அனைத்து நாகரிகங்களுக்கும், தாய்மையானதாக, முன்னோடியாக விளங்கியது ``திராவிட நாகரிகமே`` என்று சொன்ன அவர், அதனால் தம்மை ``நான் ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்த ஒரு திராவிடன்`` என்று சொல்வதிலே பெருமை கொண்டார்.
	``மிகத் தொன்மை வாய்ந்த தொல் தமிழே - அனைத்து மொழிக் குடும்பங்களுக்கும் (இந்தோ - ஆரிய மொழிகள் உட்பட) மூலமான மொழியாகக் கருதப்பட வேண்டும்`` என்ற கோட்பாட்டை ஆழமாக, விரிவாக ஆய்ந்து நிறுவினார்கள்.
	இன்று சிந்துவெளி நாகரிகத்தை ஆரியர் நாகரிகம் என வர்ணிக்கும் முயற்சியில் பி.பிலால், ராஜாராமன் போன்ற பலர் ஈடுபடத் தொடங்கியுள்ள நிலையில், ‘சிந்து வெளியில் முந்து தமிழ்’ நூலில் பூர்ணசந்திர ஜீவாவும், தமது ஐனேரள ளுஉசiயீவ னுசயஎனையைn நூலில் இரா.மதிவாணணும், அந்நாகரிக முத்திரை எழுத்துக்கள் தொல் தமிழே எனவும், தொல்காப்பிய மொழியியல் தரவுகளைப் பயன்படுத்தி நிறுவி உள்ளனர்.  அவற்றை ஆழமாய் நிறுவிட நமது ஆதிச்சநல்லூர் தாழிகளைவிட, மயிலாடுதுறையில் கிடைத்துள்ள தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட கற்கோடாரியினைவிட வேறெவை வேண்டும்.
	தமிழர்கள் இனத்தாலும், பண்பாட்டாலும், மொழியாலும், நீண்ட நெடிய தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டவர்கள்.  இம்மண்ணில் காலங்காலமாக நிலவி வந்த தினைப் பண்பாடுகளின் (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) அறுபடாத் தொடர்ச்சியும், அயற்பண்பாடுகளின் பரவலும் குறித்த விழிப்புணர்வுடன், தினைப் பண்பாடுகளும், அயற்பண்பாடுகளும் தொடர்ந்து உறவாடியதால் இன்று உருவாகியுள்ள பன்மைப் பண்பாட்டுச் சூழலிலே, நாம் நமது வேர்களையும், அடையாளங்களையும் மீட்டெடுப்பதுடன், அவற்றை இந்த தலைமுறைக்கு நினைவூட்டுகின்ற ஒரு முயற்சியாகவே இப்பொங்கல் விழாவினையும், தமிழர் திருநாளையும் கொண்டாடவேண்டும்.
	(தமிழ்ச் சூழலில் நாட்டார் வழக்கற்றியல் உள்ளிட்ட பண்பாட்டியல் ஆய்வுகள் வளர்ந்துவரும் இன்றைய சூழலில், தமிழ்ப் பண்பாட்டுப் பரப்பினை நிலம், சமூகம், வழிபாட்டு முறை, தெய்வங்கள், திருவிழாக்கள், பிற வழக்காறு மரபுகளை வைத்து ஆய்ந்தறிதல் வேண்டும் என்கிறார் ஞா.ஸ்டீபன் என்கின்ற ஆய்வாளர்.
	உலகின் முதன் முதலில் வேளாண்மைக்கு நீர்ப்பாசனம் பயன்படுத்தப்படத் தொடங்கியது தென்னிந்தியாவில்.  தென்னிந்திய நெல் நாகரிகம் தென் சீனாவிலும் இந்தோனேசியாவிலும் இருந்த நெல் நாகரிகங்களோடு ஒப்பிடத்தக்கது.  கோதுமை நாகரிகத்தின் மையம் சிந்துவெளி.  தென்னிந்திய அகழ்வாய்வுகளில் கிடைத்துள்ள கல்லான ‘உழு’ என்பதிலிருந்தே உழவன் எனும் சொல் உருவாகி இருக்கலாம்
	அவ்வகையில் வேறெதற்கும் தன்னை ஒப்புவிக்காமல், மனிதனுக்கும், இயற்கைக்கும் மட்டுமே தன்னை முழுவதும் அர்ப்பணிக்கின்ற விழா ஒன்றுதான் - அது தைத்திருநாள் எனப்படும் மருத நில மக்களின் ‘பொங்கல் விழாதான்.
	மருதநில மக்கள் பயிர் வளம்பட வேண்டி இந்திரனை வழிபட்டனர்.  இந்திரன் இரும்புத் தண்டைக் கையில் ஏந்தியவன்.
	‘வச்சிரத் தடக்கை நெடியோன்’ எனப் புறநானூறு சொல்கிறது.  இந்திரனுக்குக் கொடியேற்றித் திருவிழாக்கள் நடைபெற்றன எனச் சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய நூல்களால் அறிகிறோம்.  ஆயின், தொல்காப்பியத்தில் ‘வேந்தன்’ என்னும் பெயரே உள்ளது. உழவர் வயல்களில் பருப்போடு அரிசி இட்டுப் பொங்கிய சோற்றைப் படைத்து, இந்திரனுக்கு வழிபாடு செய்தனர் எனக் குறிப்பிருந்தாலும், அரசனையே அது குறித்தது என்பதே உண்மையாகும்.  தமிழர்களது சடங்குகளை ஆய்வுபடுத்திப் பார்க்கும்பொழுது, அவை நீண்ட படிமலர்ச்சி (நஎடிடரவiடிn) கொண்டவை எனப்புரியும்.  தமிழ்ச் சமுதாயத்தைப் பொருத்தவரை அதன் சடங்குகளின் பொருண்மையானது வேளாண் வாழ்வை மையமாகக் கொண்டது.  பெரும்பாலும் அவற்றில் தாவரங்களும், தாவரப் பொருட்களுமே குறியீடுகள்.
	பொங்கலின்போதான கொண்டாட்டத்தில் மாவிலை, குருத்தோலை கட்டுதல், வாழை மரங்களும், பனங்குலைகளும் கட்டுதலும் இவ்வகையானவையே.
	ஒரு கட்டத்தில் முதன்மைக் கூறாகத் திகழ்ந்த இவை, மேலை நாட்டுத் தொழிற் சமூக மலர்ச்சியில், வெறும் பின்தங்கிய எச்சங்களாகி விடக்கூடாது என்பதே தமிழர்களாகிய நமது தனிப் பெருங்கவலை.
	கம்பர் வேளாண் மரபுகளை விளக்கி, ஏரெழுபது என்னும் அரிய நூல் ஒன்றினை எழுதியிருக்கிறார்.
	சமயத் திருவிழாக்களில் காளை உருவம் கொண்டு சொல்லப்படுவதை மொகஞ்சதாரோ  தாயத்துக்கள் இரண்டு காட்டுகின்றன.  காளை, பொதுமக்களால் வழிபடப்பட்டதால் - திருவிழாக்களிலும் காளைக்குப் பங்களிக்கப்பட்டது.  எருதைப் பிடித்து அடக்கும் திருவிழாவும் இவற்றில் ஒன்று என அறிகிறோம்.
	அக்கவலைக்கெல்லாம் ஒரு அருமருந்தாய் நமது பண்பாட்டுக் கூறுகளையும், மண்சார் கலைகளையும் மீட்டெடுக்கின்ற அரிய நிகழ்வாய் ‘பொங்கலை ஒட்டி’ நமது மாண்புமிகு மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி அவர்களது ஒருங்கிணைப்பில் நடைபெற்ற ‘சென்னை சங்கமத்தை’ப் பெருமிதமுடன் பார்க்கின்றோம்.  நம்முடைய தமிழினத் தலைவர் பூம்புகாரிலே சிலப்பதிகாரக் கலைக் கூடத்தைத் திறந்து வைத்துப் பேசும்பொழுது சொன்னார் :
	``மயிலாப்பூரில் அறுபத்து மூவர் விழா நடக்கின்றது,  அரசியல்வாதிகளுக்கு அக்கறையில்லை.  திருவாரூரில் தேரோட்ட விழா நடக்கிறது, அரசியல்வாதிகளுக்கு அக்கறையில்லை.  மதுரையில் சித்திரைத் திருவிழா நடக்கிறது,  அரசியல்வாதிகளுக்கு அக்கறையில்லை. ஆனால் இந்த விழாவில் அரசியல்வாதிகளுக்கு அக்கறை வரக் காரணம் - இது நாம் இருக்கின்ற விழா, தமிழர்கள் இருக்கும் விழா, இந்த பூம்புகார்த் திருவிழா புராணத் திருவிழா அல்ல; பக்தித் திருவிழா அல்ல, ஆண்டவர்களுக்கு எடுக்கும் விழா. பழந்தமிழகத்தை ஆண்டவருக்கு எடுக்கும் விழா``  (இந்திர விழா என்ற பெயரில் ஏனிந்த விழா என்ற சில அரசியல்  ரீதியிலான காழ்ப்புணர்ச்சிக் கேள்விகளுக்குப் பதிலளித்து)
	நமது பொங்கல் விழாவான சென்னை சங்கமமோ, சென்னை வாழ் மக்களது அமோக ஆதரவைப் பெற்ற சாமான்யர்களுக்கான, பழம் பெரும் கலைகளுக்கான விழா.
	ஆங்கில வழிக் கல்வி கற்ற வர்க்கத்திற்கு முளப்பாரி, பந்தக்கால், பொய்க்காலாட்டம், எம்.ஆர்.ராதா, படிகாரம், புதுமனை புகுவிழா - எதுவும் தெரியாது.  செலின் தியோன், சிட்னி ஷெல்டன், சிலிக்கன் பள்ளத்தாக்கு, சீன் கானரி - இவை தெரியும்.  அதுவே பொது அறிவு எனப் பறைசாற்றப்படுகின்றது`` என ஒரு ஆய்வு சொல்கிறது.  அதனைத் தட்டி எழுப்பி, நமது கழகத் தோழர்கள், முதன் முதலாகப் பொங்கல் விழாவைப் ``பொங்கற் புதுநாள் போந்தது போந்தது`` எனச் சொல்லி திருநாளாகக் கொண்டாடியவர் தமிழ்ப் பேராசிரியர் கா.நமசிவாயனார் என்பதனைச் சொல்லுங்கள்.  
பேரறிஞர் அண்ணா கூறியதை நினைவுகூர்ந்து நமது தலைவர் கூறுவார், ``இன்றைய வரம்புகள் எனக்குத் தெரிவது எனக்கு ஆறுதலாக இருக்கிறது.  ஏனெனில் நான் புதிதாகச் சுயமாக என்னால் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கருத்துக்களையோ தத்துவங்களையோ உங்களுக்கு இப்போது வழங்கப் போவதில்லை.  அறிஞர் பல்லோரின் அறிவுரைகளை உங்களுக்கு நினைவுபடுத்தப் போகிறேன் என``. நாம் தமிழர்கள் என்பதையும், தாய்மொழி தமிழ் என்பதையும், நம் சிந்தையும், சொல்லும், செயலும், கொண்டாட்டங்களும் தமிழரின் பண்பாட்டைச் சார்ந்தே என்பதை நினைவுபடுத்துவதே இத்தகைய திருநாட்கள்.
	குறிப்பாக இன்றைய இளைய தலைமுறைக்கு இத்தகைய தமிழ் விழாக்கள் மூலம் நினைவூட்டுவோம் - நமது தலைவர் கூற்றுப்படியே - ``உலகம் இயந்திரமாகிக் கொண்டு வருகிறது
		வாழ்விலிருந்து உதிர்ந்து போன யாவும்
		கனவில் துளிர்த்துக் கொண்டே இருக்கின்றன
மார்க் பிளாக் என்ற குசநnஉh வரலாற்றாசிரியர் சொல்வார்: வரலாற்றாசிரியன் என்பவன், தேவதைக் கதைகளில் வரும் பூதத்தைப் போன்றவன்...  எங்கிருந்து மனித வாடை வருகின்றதோ அங்கேதான் அவனுக்கு இரை அல்ல வேட்டை.  வரலாறு என்பது அந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்குமான உரையாடல் எனலாம்.  எண்ணற்ற நிகழ்ச்சிகளைத் தவிர்த்துவிட்டு, நிகழ்காலத்திற்கு அக்கறையுடைய பழங்காலம் மட்டுமே எதிர்கால வரலாற்றில் பதியப்படும்.

* * * * *

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *