பேராசிரியர் தமிழவன் நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை

கருத்துக்கள் பற்றியும், பொருட்களைப் பற்றியும் மொழி என்ற பெயரால் நமது வாய் எழுப்பும் ஒலிகளுக்கான அர்த்தத்துக்கும் மொழிக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று சொன்ன ஸ்விஸ் நாட்டு மொழிபியல் அறிஞர் சசூரின் அமைப்பியல் சிந்தனைகளை 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் அறிமுகப்படுத்தியவர் பேராசிரியர் தமிழவன். அதன் பிறகு, அதனைத் தகர்த்த பின் நவீனத்துவவாதிகள் டெரிடா, பார்த், மிஷல், ஃபூக்கோ போன்றவர்கள் அமைப்பியலைக் கேள்விக்குள்ளாக்கியபோது பின் - அமைப்பியல் பிறந்தது. 
	பார்த்தின் ஆசிரியனின் மரணம் மிக முக்கியமானதொரு சொல்லாடல் ஆகும். 
	ஒரு பிரதியின் ஆசிரியன் என்பவன் அந்தப் பிரதியை எழுதும் போதுதான் ஆசிரியனாக இருக்கிறான். எழுதி முடித்ததும் அவன் மரணமடைந்து விடுகிறான். அதன்பிறகு அவன் ஆசிரியன் அல்ல. அவனும் ஒரு வாசகனே. விமர்சகனே...... 
	ஒற்றை அர்த்தம் இல்லாததால் அந்த ஒற்றை அர்த்தத்தை மட்டும் கொண்டிருந்த ஆசிரியன் என்பவன் மரணமடைந்துவிட்டான். தேர்ந்த அமைப்பியல்வாதியே கூட ஆசிரியனாக இருக்கும் பட்சத்தில் அவனே கூட அவனது பிரதிக்கு வெளியேதான் நிற்க வேண்டும். பிரதிக்கு வெளியே இருக்கின்ற ஒரு தேர்ந்த விமர்ச்சகராக இக்கட்டுரைகள் அவரை அறிமுகப்படுத்துகிறது. 
	ஒரு தேர்ந்த விமர்சகராக, அதிலும் மிக முக்கியமாக சிறுபத்தியக்கை எழுத்தையும், தமிழ்க் கல்வியுலக எழுத்தையும், தமிழ்க்கல்வியுலக எழுத்தையும் இணைத்துத் தனது கட்டுரைகளில் பதிவு செய்திருக்கின்ற பேராசிரியரின் பணி ஒரு படைப்பாளியின் பங்களிப்பை விட மிக முக்கியமானது. குறிப்பாக, இன்றைய இளைய தலைமுறை மணாவர்களுக்கு - இலக்கியம், நாடகம், சினிமா, நமது செவ்வியல் மரபு முதலியவற்றில் தெளிவற்ற நிலையில் அவர்களது பயணம் இந்த 21ம் நூற்றாண்டில் இருக்கிறது. 
	முக்கியமான காரணம் - சில விதிவிலக்கான துறைகள் அல்லது பல்கலைக்கழகங்களைத் தவிர Academics என்கிற அந்த தளத்தில் ‘விமர்சனம்’ மிக முக்கியமானதொரு துறையாக முன்னெடுக்கப்படவில்லை. 
	அந்தக் குறையினைப் பூரணமாக நிவர்த்தி செய்திருக்கிறது இந்த நூல். 
	எனக்கே கூட The English Critical Tradition என T.S. Elliot, Mathew Arnold, F.R. Lewis, I.A. Richards எனப் பெருமையகக் கூட்டிக் கொள்ளும் அளவிற்குப் பரிச்சயம் உள்ள அளவிற்குப் ‘தொல்காப்பியம்’ குறித்த தெளிவும், பயிற்சியும் இல்லை. "தொல்காப்பியத்தைத் தமிழ்ப் படைப்புத் தத்துவத்திற்கு நடுவில் இருபதாம் நூற்றாண்டுக்குக் கொண்டு வருவதற்குக்கூட அமைப்பியல் வேண்டியிருந்தது என ஆதங்கத்துடன் பேராசிரியர் சுட்டுகிறார். "மரபின் அச்சிலே தான் புதுமையின் சக்கரம் சுழல்கிறது" எனும் T.S. Eliot இன் கூற்றையும் அவர் நினைவு கூர்ந்து அதற்காக அவர் 30 ஆண்டுகள் உழைத்த, போட்ட பதியத்தின் அறுவடைதான் இக்கட்டுரைகளடங்கிய புத்தகம். 
	இதுவரை நான் பாசிசம் பற்றிய அறிமுகத்திற்கு கெவின் பாஸ்மோருக்கும், பின் நவீனத்துவம் பற்றிய அறிமுகத்திற்கு Christopher Bulterக்கும், பின்காலனியம் பற்றிய அறிமுகத்திற்கு, ‘Robert J.C. Young’ற்கும், பயங்கரவாதம் பற்றிய அறிமுகத்திற்கு ‘Charles Downslandஐயும், பின் அமைப்பியலுக்கு Catherial Belsy ஐயும், இலக்கியக் கோட்பாடிற்கு Janathan Kuller ஐயும் மொழிபெயர்ப்பில் தேடிப் பிடித்துப் படித்துக் கொண்டிருந்தேன். அவர்களது அனைத்துச் சாரத்தையும், தன்னுடைய விமர்சனக் கண் கொண்டு, மிக நுட்பமாகப் பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல் - மிக முக்கியமாக - தமிழ் விமர்சன மரபு ஒன்றினைச் கண்டெடுத்த தடத்திற்கு உரியவராகிறார் பேராசிரியர். 
	சாம்பல் என்பது நெருப்பின் மொழிபெயர்ப்பாகுமா எனக் கேட்டார் W.B. Yeats அதுபோலத்தான் - மேற்கத்திய கோட்பாடுகளை அப்படியே உங்வாங்கிய பிரதிபலிக்காமல் தமிழ்ச் சூழலுக்கான பிரத்யேக மரபு, சட்டகங்கள், சமூக சுருக்கு முதலியவற்றில் அவற்றைப் பொருத்திப் பார்த்துத், தெளிவான விமர்சனத்தை முன்வைக்கிறார். 
	வெங்கட் சாமிநாதனின் ‘கலைஞனும் சூழலும்’ கட்டுரைக்கு எதிர்வினையாக ‘சூழல் வேறு - சூழ்நிலை வேறு’ என்று வரையறுக்கின்ற அந்த முதல் கட்டுரை துவங்கி, Levi Stras மொழி இயல் கருத்தாக்கங்களை கதை ஆராய்ச்சிக்கு, அப்படியே அதைத் தொல்கதை ஆய்விற்குப் பயன்படுத்தாமல், ஒரு கருத்தாக்கமாக எடுக்காமல், மாதிரியாக எடுத்தார் எனும் களப்பணி அடிப்படையில் கதைப்பாடல் வர வேண்டும், எனும் கட்டுரை வரை ஒவ்வொன்றும் தமிழ் வாசகனுக்குத் தெளிவு தருபவை. 
	அக்கட்டுரையில் - தமிழவன், Levi Stras தனக்கும் பிராப்பற்கும் உள்ள வேறுபாடு உருவவியல் வாதத்திற்கும், அமைப்பியல் வாதத்திற்கும் உள்ள வேறுபாடு என்று ஒரு குறிப்பு எழுதியதோடு நின்றுவிட்டார் அந்த வேறுபாட்டை அவர் எங்கும் விளக்கவில்லை எனச் சுட்டுகிறார். கூடவே, தமிழ்த்துறைகளில் இதுவரை நடந்த அமைப்பியல் ஆய்வுகள் குறித்து விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார். 
	Roland Parth in ‘ஆசிரியரின் மரணத்தை’ நான் தமிழவனின் ‘தான் அற்ற படைப்பாளியில்’ பார்க்கிறேன். நாட்டுப்புறவியலில் (Folklore) தான் அற்ற படைப்பாளிதான் தென்படுகின்றான் என்று சுட்டுகின்ற அவர், நாடகத்திலும், படைப்பாளி ‘தான் அற்ற’ ஒருவனாகவே நிற்க வேண்டியுள்ளது என்கிறான்.
	"படைப்பாளியின் நேர்மை என்பதே படைப்பு நேர்மைதான். படைப்பில் நேர்மையானவான? போதும் எனக்கு. காஃபா, எப்படிப்பட்டவன்? கம்பன், வள்ளுவன் எப்படி வந்தார்கள்? தெரியவில்லை. படைப்புதான் எனக்கு அவர்களைப் பற்றிய சாட்சியங்கள். அப்படி ஒரு வேளை தெரிந்தாலும் அவை ஒரு பொருட்டல்ல. காரணம் (Forest) ஆதரவாளரான Ezra Poundக்குக் கவிதை வருகிறது. அவரது சீடரான Eliot கவிதையில் மேதை. Falsity ஆதரவாளரான Hedgier சிந்தனை உலகில் கவர்ச்சியானவர் தான். Emergency காலத்தில் இந்திராவை ஆதரித்த Hussein ஓவியர்தான்"" எனத் தொடங்கி அவரது கட்டுரை ஒவ்வொன்றும், அவரது வார்த்தைகளிலேயே சொல்வதானால் - "பிற சிந்தனைகளைக் கொஞ்சம் கூடப் பரிச்சயம் செய்ய விரும்பாத பழமையானவர்கள், நிலப்பிரபுத்துவ இலக்கியக் கோட்பாடுள்ளவர்களால் ஆன தமிழ் விமர்சன ஆட்களின் மத்தியில் புது ஓளியைப் பாய்ச்சுபவை". 
	ஃப்ராய்டின் "எந்தப் புதுக் கண்டு பிடிப்பும் புதியதல்ல" என்ற கூற்று நினைவிற்கு வந்தாலும், தமிழவன் அய்யா, ஒவ்வொரு கட்டுரையில், ஒரு தேர்ந்த விமர்சகராய் ஒரு புதிய கண்டுபிடிப்பையே நிகழ்த்தி இருக்கிறார். 
	என்னைப் போன்ற பின் நவீனத்துவ யுகத்தில் இருக்கின்ற வாசகி, படைப்பாளிக்கு இது மிக முக்கியமான நூல். முக்கியம் என்பதன் பொருள் - பல தெளிவுகளைத் தருகின்ற நூல் கலை, இலக்கியம், பண்பாடு, சமூகம் எனப் பேராசிரியர் தொடாத துறைகளில்லை. எல்லாவற்றிலும் அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டது, ஒரு தமிழனது விமர்சனக் மனம் எப்படி இயங்க வேண்டும் என்பது மட்டுமல்ல, தமிழ் மாணவன், வாசகன், மிக முக்கியம்.
                                               * * * * *

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *