லண்டாய் - ச.விசயலட்சுமி நாடோடி, நான் செய்வது புழுதியின் பிரார்த்தனை. பசித்தவர் வளர்த்தனர் ஒரு காட்டை அங்கே அழுகை மரங்களாய், கிளைகளாய். சூல்கொண்ட பெண்களுக்காய் ஒரு நாடு. இப்பிரபஞ்சத்தின் படுகையிலிருந்து மொட்டுகள்போல் முகிழ்த்தன பிறந்திராத சிசுக்களின் அறுவடை பேரழிவின் கோபுரங்களிலிருந்து வந்தவைபோல் குற்றஞ்சாட்டி, குற்றஞ்சாட்டி, குற்றஞ்சாட்டி ஒலித்த சிசுக்களின் மெலிந்த பட்டினிக் குரல்களில், அழுகுரல்களில் சாம்பலானது காடு. லிமா - ருபாயத் - அரபுமொழியின் 4 வரிப் பாடல் "நீங்கள் என்னைப் பள்ளி செல்ல அனுமதிக்கவில்லை நான் மருத்துவராக முடியாது நினைவு கொள்ளுங்கள் ஒரு நாள் நீங்கள் நோயாளியாகக் கூடும்" ஒரு அறிமுக நூல் வருவது வெறுமனே ஒரு சடங்காக அல்லாமல் கவிதை எழுதுதல் என்பது ஒரு தனிமனித செயல்பாடல்ல, ஒரு சமூகத்தின் கூட்டுச் செயல்பாடு என்பதையும். உலக அளவில் மிக சமீபமாகவே கவனம் பெற்று வரும் ஆஃப்கனின் பெண் கவிதைகள் தமிழில் இன்னும் பேசப் பட்டிருக்கவில்லை. குறிப்பாக லண்டாய் குறித்து விரிவாக ஒரு புத்தகம் இதுவரை வந்திருக்கவில்லை. ஆஃப்கன் பெண்களுக்கு இரண்டு இடங்கள்தாம் நிச்சயமானவை. ஒன்று கணவனின் வீடு, மற்றது கல்லறை. அதனால்தான் ஆஃப்கன் பெண்களுக்கு இரண்டு இடங்கள்தாம் நிச்சயமானவை. அதனால்தான் ஆஃப்கானிஸ்தானத்தில் பெண்ணாக இருந்து பார் என்று கடவுளுக்கு சவால் விடும் கவிதைகள் தெறித்து விழுகின்றன. அழகியல் அம்சங்களுடன் பல அதிரவைக்கும் அரசியல் சமூக கலாச்சார உண்மைகளும் வெளிப்படுகின்றன. பஷ்டுன் மொழியாளுமையில் லண்டாயும் அரபு மொழியாளுமையில் தாரியும் அங்கு மக்களிடம் புழங்கி வருகின்ற கவிதை வடிவங்கள். லண்டாய் என்பது ஆஃப்கான் மக்களின் வாய்மொழி வடிவம். ஜப்பானின் ஹைக்கூ போல வரி வடிவத்தால் சிறியது, உள்ளடக் கத்தால் மக்களின் குரலாக, அதிலும் குறிப்பாக பெண்களின் குரலாக இவ்வகைப் பாடல் இயங்குகிறது. அல்ஜீரியர்களின் ராய் இசை வடிவத்தை தந்தைமை மரபுகளுக்கு எதிராக விடுதலை மற்றும் நவீனத்திற்கான இரண்டாம் காலனியப் போராகக் காட்டப்படுகிறது. அல்ஜீரியாவில் நிலவும் மத இஸ்லாமியக் கட்டுப்பாடுகளுக்கு எதிரான அல்ஜீரிய இளைஞர்களின் மதச்சார்பற்ற கலகம், பாலியல்பு, குடி, போதை மருந்துகள் தொடர்பான சமூக, மதரீதியான இலக்குகளை உடைத்தெரியும் முயற்சி என்றெல்லாம் சித்தரிக்கப்படுகிறது. ராய் பாடகர்கள் நாடோடித்தனமான கலகக் காரர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். காபூலில் நூறு உறுப்பினர்களையும் காபூலுக்கு வெளியே மந்நூறு உறுப்பினர்களையும் கொண்டு செயல்படும் அமைப்பு மிர்மின் பஹீர். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கொண்டாட்டத்தின் அடையாளமாய் எதிர்கொள்ளப்படும் சனிக்கிழமைகளில் இதே சமகாலத்தில்தான் உலகின் மகிப்பழமையான நாகரீகம் கொண்ட ஒரு சமூகத்தின் பெண்கள் தாங்கள் கவிதை பரிமாரிக்கொள்ள ஒரு ரகசிய அமைப்பைத் தேடிச் செல்கிறார்கள். காபூலைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மிர்மன் பஹீர் அமைப்பின் நிறுவனர் ஷஹிரா ஷெரிஃப் ஒரு கவிஞர் இல்லை. ஆஃப்கானிஸ்தானின் கொஸ்த்து பகுதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரான இவர் "கவிதை என்பது போர் வாள்" என்கிறார். நேரடி அரசியல் போராட்டங்களை விடவும் இலக்கியம் என்பது பெண்களின் காத்திரமான போராட்டக்களமாக இருக்கிறது, கவிதை எழுதுதல் என்பது பெண்களின் "வேறொருவகையான போராட்டம்" என்கிறார். இந்த அமைப்பிற்கு நேரில் வர சந்திக்க வாய்ப்பற்ற பெண்கள் அவர்களால் முடிந்தபோதெல்லாம் தான் நினைப்பதை, தன் கவிதையைத் தொலைபேசியின் மூலம் பதிவு செய்கிறார்கள். ஒகை அமைல் என்பவர் கவிஞர்களின் தொலைபேசி எண், அவர்களின் முழு விவரம், அவர்களின் கவிதை வரிகள் அத்தனையையும் பதிவு செய்து கொள்கிறார். மிர்மன் பஹீர் கூட்டத்தில் அவர்களின் கவிதைகள் முன் வைக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி ரேடியோ லிபர்ட்டி எனும் வானொலி அலைவரிசையிலும் இவர்களின் கவிதைகள் ஒலிபரப்பப் படுகின்றன. பஷ்டுன் மொழியின் நாட்டுப்புற பாடல் வடிவமான லண்டாய் என்பதற்கு அம்மொழியில் குறுகிய விஷமுள்ள பாம்பு என்பது பொருள். லண்டாய் என்பதன் மற்றொரு பொருள் ஆபத்து விளைவிக்கக் கூடிய இரண்டுவரிக் கவிதை என்பதாகும். முன்பு ஒரு தனிமனிதன் லண்டாய் எழுதுவதில்லை. வாய்மொழியாக பகிரப்பட்டு வளர்ந்தது. தற்போது ஒரு பெண் மற்றொருவருக்கு சொல்ல அவர் மற்றவர்க்கு சொல்ல என பகிரப்பட்டு வளர்கிறது. லண்டாய் பெண்களுக்கானது, ஆனாலும் பெண்களுடையதில்லை என்னும் நிலையே நிலவுகிறது. ஆண்களும் லண்டாய் பாடுகிறார்கள். ஸர்மினா கடவுளின் மொழியால் எழுதுவதால் மட்டுமல்ல; கடவுளின் ஆளுமையை எதிர்த்து கேள்விகளைத் தொடுப்பவளாகவும் இருக்கிறாள். "கடவுள் எங்களின் மீது அன்பு காட்டுகிறார் என்றால் நாங்கள் மட்டும் ஏன் அன்பு செலுத்த அனுமதிக்கப்படுவதில்லை?" என்கிறாள். குடும்ப ஒடுக்குமுறையினைத் தாங்கமுடியாத ஸர்மினாவின் உயிர் அவள் லண்டாயில் பாடியபடி தனிமையின் ஆற்றாமையோடும் மீளாக் கனவோடும் பிரிந்தது. "நான் என் தலையெழுத்தை எழுதியிருந்தால், நான் சந்தோஷமாகவும் சுதந்திரமாகவும் இருந்திருப்பேன்" என அறிவித்தவர் தபசோம் ஹாசல். கவிதைகள் எழுதியதற்காகவே மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்ட முதல் பெண் கவிஞரும் இவர்தான். விஜயலட்சுமியின் பின்வரும் கருத்து கவிதைப்பரப்பில் மிக முக்கியமானது மேற்கில் நிகழ்ந்த தத்துவ விவாதங்கள் படைப்பையும் படைப்பாளிகளையும் சமூகத்தையும் வெவ்வேறு தளத்தில் வைத்து பேசி அலசி விவாதித்து பல்வேறான முடிவுகளுக்குள் வந்தன. எழுத்தாளரின் மரணம், மையம் தகர்த்தல், விளிம்பை மையம் நோக்கி நகர்த்தல் என அந்த விவாதங்களின் வழியாய்த் தேடிக் கண்டடைய நேர்ந்த கோட்பாடுகளின் நீட்சிகள் ஒரு போதும் எழுத்தை மறுக்கும் சமூகம் குறித்து கருத்தில் கொண்டதாய்த் தெரியவில்லை. "தோற்றுவிக்க வேண்டும் கடவுளரை நாம்; இல்லை என்றால் இறந்தொழிய வேண்டும். கொல்ல வேண்டும் கடவுளரை நாம்; இல்லை, இறந்தொழிய வேண்டும்". தொலைந்துபோன கற்கள் கிசுகிசுக்கின்றன தம் இழந்த ராஜ்யத்தில். Separate : என் காதலன் தன் தலையை நாட்டுக்காக கொடுத்தான் பின்னப்பட்ட என் கூந்தலால் அவனை மூடுகிறேன் என் காதலனின் குருதியால் பச்சைக் குத்திக் கொள்வேன் இதைக் காணும் பசுந்தோட்ட ரோஜா ஒவ்வொன்றும் வெட்கப்படும். ஹமீத் கர்சாய் காபூலுக்கு வந்தார் எம்பெண்கள் டாலர்களில் உடுத்தும்படி கற்பித்தார். ஆண்கள் உடையைப்போல் என்னைப் பயன்படுத்துகிறார்கள் அது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என் உணர்வு பற்றி அவர்களுக்கு கவலையில்லை நான் தயாராக இருக்கிறேனா இல்லையா என்பது குறித்து கவலையில்லாமல் அவர்கள் 12 வயது மணமகளோடு விளையாடுவதை விரும்புகிறார்கள் அவர்கள் என்னைத் தொடுகிறார்கள் காயப்படுத்துகிறார்கள் எனது தந்தையும் சகோதரனும் எனது கெளரவத்தை 70 வயது கிழவனிடம் விற்கிறார்கள் என் விலை ஆயிரக்கணக்கான டாலர்கள் ஆனால் என் கண்ணீருக்கு விலையில்லை!
No comment