MATTERS UNDER RULE 377

Title : Regarding hike in toll gate charge / பொதுமக்களை பாதிக்கின்ற சுங்கக்கட்டண உயர்வை உடனே ரத்து செய்ய வேண்டும் என மக்களவையில் விதி எண்‌ 377-ன் கீழ் வலியுறுத்தினேன்.

Back in November 2022, the Union Minister for Road Transport and Highways had promised a 40% cut in toll-rates. In March this year, promises were made for removal of 16 toll-plazas within a 60-kilometre radius and the users being charged based on kilometres travelled instead of collections over a stretch. However, no heed was paid to the Tamil Nadu Government’s request to remove the 14 toll-plazas that have been set-up after widening State Highways by mere 1.5-3 metres or those within city corporation or municipality limits. Reduction of user fees to 40% and dosing the toll-plazas situated within 60 km of one another was requested but no action has been taken. Of the 566 toll-plazas operational on National-Highways in India, Tamil Nadu already has 55, the highest in the country. 29 of the 55 toll-plazas in the state have revised rates now, with cars being charged an additional amount. The hike in toll-fees not only affects traders and vehicle owners but also the public. The toll-fee has had a cascading effect on the prices of commodities being transported and passed though these toll-plazas. In this light, I urge upon the Union Government and the Ministry of Road Transport and Highways to strike down this order for the benefit of the public and also take action on the State-Government’s request and High-Court’s directives in this regard.

ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம், நெடுஞ்சாலைகளின் சுங்கக்கட்டணம் 40 சதவீதம் குறைக்கப்படும் என்றார். இதைப்போல கடந்த மார்ச் மாதம் 60 கி.மீ. சுற்றளவில் உள்ள 16 சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. மேலும் பயணதூரத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த விஷயத்தில் தமிழ்நாட்டை கண்டுகொள்ளவில்லை.
தமிழ்நாட்டில் மாநகராட்சி மற்றும் நகராட்சி வரம்பில் மாநில நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்திய பின் அமைக்கப்பட்டுள்ள 14 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பதும், பயனீட்டாளர் கட்டணத்தை 40 சதவீதம் குறைக்க வேண்டும் என்பதும், 60 கி.மீ. சுற்றளவில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பதும் தமிழ்நாடு அரசின் கோரிக்கை. ஆனால், இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நாட்டில் 566 சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன. இதில் தமிழ்நாட்டில்தான் அதிகம் என்கிற வகையில் 55 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த 55 சுங்கச்சாவடிகளில் 29 இடங்களில் தற்போது கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு ஏற்ற வகையில் கட்டணங்கள் திருத்தி அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கட்டண உயர்வு வணிகர்கள் மற்றும் வாகன உரிமையாளர்களை மட்டும் பாதிப்பது இல்லை. அந்த வழியாக கொண்டு செல்லப்படும் பொருட்கள் மீதும் கூடுதல் விலை சுமத்தப்பட்டு பொதுமக்களையும் பாதிக்கும்.
எனவே மாநில அரசின் கோரிக்கை மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அமைச்சகம் இந்த கட்டண உயர்வு உத்தரவை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *